ராசி பலன் 2016 (Rasi Palan 2016)
Rasi Palan 2016 is here to help you plan a great year ahead. Also, this Tamil horoscope for 2016 shows you the path to a successful and fulfilling life. Read it and unlock your future now...
திரையை விலக்கி உங்கள் எதிர்காலத்தினை எங்களது ராசி பலன் 2016 மூலம் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது பேங்க் பேலன்சில் நிதி நிலை உயருமா? உங்களது காதல் வாழ்க்கை இனிமையாக இருக்குமா? உங்கள் குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவுமா? இலவசமாக படித்து இப்போது உங்கள் கேள்விகளுக்கு பதில்களை தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு: இந்தப் பலன்கள் உங்கள் சந்திர இராசியின் அடிப்படையில் அமைந்தவை. உங்கள் சந்திர இராசி எதுவென்று உங்களுக்குத் தெரியவில்லையெனில் பின்வரும் பக்கத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் – அஸ்ட்ரோஸேஜ் மூன் சைன் கால்குலேட்டர்.
மேஷம் (Mesham)
இந்த ராசியை சொந்த இடமாக கொண்டவர்கள் 2016 ஆண்டில் இன்ப துன்பம் கலந்த பலங்களை பெறுவார்கள்.
குடும்ப வாழ்வில் நெருக்கடிகள் ஏற்படலாம். எனினும் தொழில்சார்ந்த வாழ்வில் மிக சிறந்த
வெற்றிகளை அடையலாம். எனினும் மேஷ ராசிக்காரர்கள் உற்சாகத்தில் மிதக்க வேண்டாம் அத்தகைய
வெற்றி கால தாமத்துக்கு பிறகே கிட்டும். வணிகர்கள் பெறும் முதலீடுகளை செய்ய வேண்டாம்.
இந்த வருடம் அனாவசியமான செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். காதல் வாழ்வில் பெரிதும்
அதிர்பார்க்கும் வகையில் எதுவும் நிகழ வாய்ப்பில்லை. செக்ஸ் வாழ்விலும் நெருக்கமும்
மகிழ்வும் குறைந்தே காணப்படும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். எளிதில்
தூண்டிவிடப்படுபவர்கள் நீங்கள் ஆனால் அதனால் எந்த சாதகமும் ஏற்படப்போவதில்லை. பங்கு
சந்தையில் இருந்து தள்ளி இருப்பது நலம். ஆகஸ்டுக்கு பிறகு நற்பலங்களை எதிர்ப்பார்க்கலாம்.
ஆனால் வருடம் முழுக்க எச்சரிக்கை அவசியம்.
ரிஷபம் (Rishabam)
ரிஷப ராசிகாரர்களுக்கு இந்த ஆண்டு மிக மலர்சியான ஆண்டாகும். உங்கள் துணையின் மேல் அன்பும்
பாசமும் இருந்தால் இந்த ஆண்டு எந்த சிக்கலுமின்றி இனிமையாக செல்லும். இந்த ஆண்டு உங்கள்
திருமண வாழ்வை இனிமையாக்குவதுடன் உங்கள் அன்புக்குரியவருடன் இனிமையான பொழுதினை செலவழிக்க
வைக்கும். சேவை பிரிவில் இருப்பவர்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரலாம். வணிகர்களுக்கு
லாபம் உடனடியாக கிட்டாமல் போனாலும் நிரந்தரமாக கிட்டும். காதல் வாழ்வில் மகிழ்சி பொங்கும்.
மன அமைதியிருந்தால் எதயும் சாதிப்பது எளிது. எனினும் உங்களது செக்சுவல் தேவைகளில் கவனம்
சிதறக்கூடும். இதனால் தகாத உறவு ஏற்படக்கூடும். அதன் விளைவுகளை அறியும் சாமர்த்தியம்
கொண்டவர்கள் நீங்கள் எனவே அதிலிருந்து விலகியே இருங்கள். நிதி நிலையை பொறுத்தமட்டில்
இந்த வருடம் மிக சிறப்பாக அமையும். அதிக பணம் சம்பாதிப்பீர்கள். 2016 உங்களை பொறுத்தமட்டில்
செழிப்பான ஆண்டு.
மிதுனம் (Midhunam)
இந்த வருட்த்தின் பெரும்பான்மையான பகுதி உங்களுக்கு சாதகமானது. அன்பு மற்றும் அக்கரை
உங்களையும் உங்கள் துணையையும் நெருக்கமாக்கும். எனவே இணக்கமான சூழல் உருவாகும். மற்றொரு
பக்கம், உங்கள் துணைக்கும் உங்கள் உறவினர்களுக்கும் இனிப்பான மற்றும் கசப்பான கலவையாக
இருக்கும். உங்கள் உடல் ஒரு கோவிலை போன்றது எனவே அதன் மேல் கவனம் செலுத்துவது அவசியம்.
அரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி அவசியம். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
ஏனெனில் பணவரவில் சிறிது சிக்கல் ஏற்படலாம். பணப்பிரச்சினையில் இருந்து சமாளிக்க கடன்
வாங்காமல் இருப்பது நலம். வேத ஜோதிடத்தின் படி 2016 வணிகர்களுக்கு லாபம் தரக்கூடியது.
பணம் சம்பாதிக்க தவறான வழியை தேர்ந்தெடுக்க கூடாது. காதல் விஷயத்தில் நன்மையுண்டு,
ஏனெனில் ரொமான்ஸ் உங்கள் வாழ்வை இனிமையாக்க போகின்றது. பொதுவான விஷயங்கள் தவிர வேறு
எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த ஆண்டு இனிமையாகவே அமையும்.
கடகம் (Kadagam)
கடகராசிகாரர்கள் சொந்த வாழ்க்கையை பொறுத்த வரையில் சிறப்பான அனுகூலம் பெறுவார்கள்.
எனினும் உங்கள் உறனினர்களுடன் இணக்கமான சூழல் ஏற்படாது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம்
செலுத்த வேண்டும் இல்லையெனில் உடல் நலம் பாதிக்கக்கூடும். பொருளாதர நிலையில் கவனம்
தேவை. ஒருவர் மேல் வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையால் நஷ்டம் ஏற்படலாம். உங்கள்
கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக்கொண்டு செயல்படுவது நலம். ஏனெனில் உங்களுக்கு
எதிராக யாரேனும் சதித்திட்டம் தீட்டலாம். சில கடகராசிக்கார்ர்களுக்கு பணிசுமை அதிகரிக்கலாம்.
அதனால் சம்பளம் அதிகரிக்கும். சிலர் வேற்று மதத்தை சேர்ந்தவர் மேல் காதல் வயப்படகூடும்.
எனினும் அந்த தொடர்பு மிக உறுதியாக இருக்கும். உங்கள் செக்சுவல் தேவைகளை கட்டுப்படுத்தி
கொள்வது நன்று. உங்கள் செக்ஸ் வாழ்க்கை இனிமையாக அமைய அதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.
சிம்மம் (Simmam)
சிம்மராசிக்காரர்களுக்கு 2016 ஆம் வருடம் லாபகரமானது. உங்கள் வாழ்க்கை அனைத்து வகையிலும்
சிறப்பாக அமையும். உங்கள் துணையுடனும் மற்றவர்களுடனும் இணக்கமான சூழல் உருவாகும். அரோக்கியத்தை
பொறுத்த மட்டில் உங்கள் உடல் எடை அதிகரிக்கும். எனவே அதில் கவனம் செலுத்தி கவனமுடன்
செயல்பட வேண்டும். அதிக கொழுப்புமிக்க உணவுகளை தவிர்க்கவும். ஆல்கஹாலை தவிர்த்தால்
உடல் நலம் சீராகும். உங்கள் பொருளாதார நிலையை பொறுத்தமட்டில் செல்வம் பெருகும் எனவே
வங்கியிருப்பும் அதிகரிக்கும். சொந்த தொழில் செய்தாலும் பணியாளர்களாயிருந்தாலும் லாபம்
அதிகரிக்கும். தொழிலில் பெயர், புகழ் மற்றும் நன்மதிப்பு அதிகரிக்க்கும். 2016 ஜோதிட
பலனின் படி காதல் வாழ்வின் நிலை ஏறுமுகமாகவே இருக்கும். திருமணம் ஆகாத சிம்மராசிக்கார்ர்களுக்கு
திருமணம் நிச்சயமாகும். செக்சுவல் வாழ்வை பொறுத்தமட்டில் உங்கள் தேவைகள் நிறைவேறும்.
உங்கள் துணையுடன் நெருக்கமாக இருப்பீர்கள்.
கன்னி (Kanni)
இந்த வருடம் துரதிஷ்டவசமாக உங்கள் துணையுடன் இணக்கமான நிலை இருக்காது, உறவினர்களுடன்
கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் பிரச்சினைகள் தோன்றலாம்.
ஆரோக்கியமும் பாதிக்கும் சூழல் ஏற்படும். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் அதில் எந்த
அளவு கவனம் செலுத்துகிறீர்களோ அவ்வளவு நன்று. பொருளாதார நிலையை பொறுத்தமட்டில் நஷ்டம்
ஏற்பட கூடும். ஆகஸ்ட் வரையில் உங்கள் எதிர்பார்புகளை குறைத்து கொள்வது நல்லது. அதன்
பிறகு தான் இந்த நிலையில் மாறுதல் ஏற்படும். எனினும் பணியிலிருப்பவர்களுக்கு பெரிய
பிரச்சினைகள் எதும் ஏற்படாது. உங்கள் காதல் வாழ்வில் சிறப்பாக இருக்கும். உங்கள் எண்ணங்களை
கட்டுப்படுத்தினால் நன்று.
துலாம் (Thulaam)
கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் துலாராசிக்காரர்கள் குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம்.
அதே நேரத்தில் தனிக்குடித்தனத்தில் வசிக்கும் துலாராசிக்காரர்கள் குடும்பத்தில் அமைதி
நிலவும். உங்கள் துணையின் மேல் நம்பிக்கை வைப்பது நன்று. 2016 இல் இந்த ராசிக்காரர்கள்
சிலருக்கு மணமுறிவு ஏற்படக்கூடும். உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இடையே சில
கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். சேவை துறையில் இருப்பவர்களுக்கு சற்று சாதகமான சூழல்
அமையும். வணிகர்கள் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆகஸ்ட் 11 க்கு பிறகு பாதகமான சூழல்
அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அவை மிக சிரம்மான சூழலை ஏற்படுத்தும்
எனவே பணம் வாங்கும்போதும் கொடுக்கும்போதும் கவனம் தேவை. காதல் ரோமான்ஸ் போன்றவற்றில்
நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்கள் துணையை நங்கு புரிந்து கொள்வது அவசியம். உடல் சார்ந்த
மகிழ்சிக்காக உங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம்.
விருச்சிகம் (Viruchigam)
இந்த வருடம் விருச்சிகராசிக்காரர்கள் வாழ்வின் எந்த முடிவையும் துணையை கலந்தாலோசித்து
எடுக்க வேண்டும். சொந்த வாழ்க்கையில் உயர்வு தாழ்வை சந்திக்க கூடும். குழந்தைகளின்
நடவடிக்கை கவலையை ஏற்படுத்தலாம். சோம்பலை குறைத்து சுறுசுறுப்புடன் செயல்படவும். கேளிக்கை
மற்றும் உற்சாகத்தில் கவனம் செலுத்தி பொழுதை வீணடிக்க வேண்டாம். ஆகஸ்ட் வரையில் பணத்தை
சிக்கனமாக செலவழித்து பாதுகாக்கவும். இந்த மாததுக்கு பிறகு முதலீடுகள் செய்ய தொடங்கலாம்.
காதல் வாழ்வை பொறுத்தமட்டில் அமைதி காக்கவும். வீண் சந்தேகங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு
இடம் கொடுக்க வேண்டாம். ஆகஸ்ட் வரை உங்கள் காதல் வாழ்வில் கவனமுடன் இருக்கவும். திருமணமானவர்கள்
நெருக்கத்தை உணர்வார்கள்.
தனுசு (Dhanusu)
தனுசு ராசிகாரர்கள் உறவினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். உடன் பிறந்தவர்களுடன்
கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். கிருமி தொற்றுகள் ஏற்படலாம். பணியாளர்களுக்கு இந்த
வருடம் சாதகமான சூழல் ஏற்படும். ஆகஸ்டுக்கு பிறகு முன்னேற்றம் ஏற்படும். ஆகஸ்ட் வரை
உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபடாமல் சுமூகமாக நடக்கும்
இயல்பு தேவை. உங்கள் பொருளாதார நிலையை பொறுத்தவரை பிரச்சினை எதுவும் இருக்காது. ஆனால்
ஏமாற்றுகாரர்கள் மற்றும் மோசடி பேர்வழிகளிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும். வணிகர்களுக்கு
அவ்வளவு சாதகமான சூழல் இல்லை. உங்கள் செயல்களில் கவனமுடன் இல்லாவிட்டால் ஜெயிலுக்கு
செல்லும் நிலை ஏற்படலாம். அது போன்ற சூழல் ஏற்படாமல் இருக்க சட்டத்துக்கு புறம்பான
செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். இறுதியாக சிறப்பாக உழைத்து முன்னேற வேண்டிய
ஆண்டு இது.
மகரம் (Magaram)
தனிப்பட்ட வாழ்வில் நீங்கள் எதிர்பார்பது போல அமைதியும் நன்மையும் விளையாது. குடும்ப
உறுப்பினர்கள் மற்றும் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்ப அமைதி குலையும்
வாய்ப்பு ஏற்படலாம். இந்த வருடத்தில் கிரகங்கள் உங்கள் பேச்சு திறனை ஆள்கின்றது. எனவே
கவனமுடன் பேச வேண்டும் இல்லையெனில் அதன் பின் விளைவினை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
அஜீரணக்கேளாறு, தலைவலி மற்றும் டென்ஷன் ஆகியவை ஆரோக்கியத்தை பாதிக்கும். கேது தசை நடக்காவிட்டால்
பொருளாதாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். வேலையில் அதிக நன்மைகள் ஏற்படும். அதன் மூலம்
புகழும் நன்மதிப்பும் அதிகரிக்கும். சிலருக்கு புதிய மற்றும் மேலும் சிறப்பான வேலை
அமையும். வணிகர்களுக்கும் அதே போன்ற லாபகரமான சூழல் அமையும். அவர்களுக்கு இந்த வருடம்
மிக லாபகரமாக இருக்கும். அரசாங்க டீல் அல்லது ஒப்பந்தம் கிடைக்கும். 2016 இல் உங்கள்
காதல் வாழ்வும் அற்புதமாக இருக்கும். மொத்தத்தில் உங்களுக்கு சிறந்த வருடங்களில் ஒன்றாக
அமையும்.
கும்பம் (Kumbam)
இல்லறவாழ்க்கை சாதாரணமாக இருக்கும். சிறு சிறு பிரச்சினைகள் தோன்றலாம். குரு ஏழாம்
இடத்தில் இருப்பதால் எந்த விஷயமும் உங்கள் கையை மீறி போகாது. மூளை தொடர்பான சில பிரச்சினைகள்
ஏற்படலாம். 2016 இன் உங்கள் பொருளாதார வாழ்க்கை அற்புதமாக இருக்கும். நன்பர்களும் சாதகமாக
நடந்து கொள்வர். நட்புக்காகவும் பந்தங்களுக்காகவும் உங்கள் சக்திக்கு மீறி நடந்து உங்களை
காயப்படுத்திக்கொள்ள வேண்டாம். பணியில் இருக்கும் கும்பராசிக்காரர்களுக்கு இந்த வருடம்
பெயர், புகழ், மரியாதை மற்றும் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு சீனியர்கள் அல்லது
உடன் பணிபுரிபவர்கள் உங்களை பாராட்டுவார்கள். வணிகர்கள் மனம் தளர வேண்டாம், ஏனெனில்
2016 உங்களுக்கு லாபகரமானது. இறுதியாக உங்கள் காதல் வாழ்க்கை சரியான திசையில் செல்லும்.
மீனம் (Meenam)
மீனராசிக்கார்ர்களுக்கு இந்த வருடம் தொட்டதெல்லாம் துலங்கும் என கூறமுடியாது. குடும்பத்தில்
சில பிரச்சினைகள் தோன்றலாம். புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் நடந்து அந்த பிரச்சினைகளை
சமாளியுங்கள். குடல், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பிரச்சினைகள் தோன்றலாம். குடும்பத்தில்
சிறு பிரச்சினைகள் தோன்றலாம். பொருளாதரம் சாதாரணமாக இருக்கும். பணியின் ஆரம்பகட்டத்தில்
பிரச்சினைகள் தோன்றலாம். எனினும் இறுதியில் வெற்றி உங்களுக்கே. பணியில் ஏற்படும் முன்னேற்றம்
உங்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்து வாழ்வை வளப்படுத்தும். மீன ராசி வணிகர்களுக்கு ஆகஸ்டுக்கு
பிறகு வெற்றி கிட்டும். புதிய பிசினஸ் பார்ட்னர்களுடன் ஒப்பந்தம் ஏற்படலாம். காதல்
வாழ்க்கை ஆகஸ்டுக்கு பிறகு சரியான திசையில் செல்லும். அதற்கு முன் அதிக ரொமான்டிக்
தருணங்களை எதிர்பார்க்க வேண்டாம்.
இந்த 2016 ராசி பலன் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறோம். வாழ்வில் வெற்றி மற்றும் வளங்களை பெற சரியான வழி காட்டி இது உதவிடும்.
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems

AstroSage on MobileAll Mobile Apps
AstroSage TVSubscribe
- Horoscope 2022
- राशिफल 2022
- Calendar 2022
- Holidays 2022
- Chinese Horoscope 2022
- अंक ज्योतिष 2022
- Grahan 2022
- Love Horoscope 2022
- Finance Horoscope 2022
- Education Horoscope 2022
- Ascendant Horoscope 2022
- Stock Market 2022 Predictions
- Best Wallpaper 2022 Download
- Numerology 2022
- Nakshatra Horoscope 2022
- Tamil Horoscope 2022
- Kannada Horoscope 2022
- Gujarati Horoscope 2022
- Punjabi Rashifal 2022