Personalized
Horoscope
  • Talk To Astrologers
  • Talk To Astrologers
  • Personalized Horoscope 2025
  • Product Banner 2025
  • Brihat Horoscope
  • Ask A Question
  • Live Astrologers
Home » 2014 » Tamil Horoscope 2014 Published: November 19, 2013

Rasi Palan 2014 - Rasi Palangal 2014 - Tamil Astrology 2014 - Tamil Horoscope 2014

தமிழ் ராசிபலன் 2014 – தமிழ் ஜாதகம் 2014 – தமிழ் ஜோதிடம் 2014

To check out your Rasi Palan 2015, please click here - Rasi Palan 2015

Rasi Palan 2014 or Tamil Astrology 2014 is here to get you started for a new year. Plan your year in advance with our Rasi Palan 2014. With Rasi Palan 2014 you will get an idea of how the year is shaped out for you. Whether, it is a year with many road bumps or if its a smooth ride, Rasi Palan 2014 will let you know in advance. Expert Astrologers who have mastered the subject of Astrology have taken part in designing this Tamil horoscope for 2014. We help you to gaze into your future and plan your path accordingly.

Rasi Palan 2014 has a clear and concise predictions for your zodiac signs. The Tamil Astrology 2014 is written keeping in mind your moon signs. All the important sections like career, family, love life, finance and health has been covered in our every efficient Rasi Palan 2014. You can keep an eye on all sections of your life like career, love or health right from the beginning and thus avoid any mishap from happening. Give your anxiety and worries a back seat, know what it is store for you with our Tamil astrology 2014 and enjoy the year relaxed.

Note: These predictions are based on your Moon sign. If you are not sure about your moon sign, please visit the following page - AstroSage Moon Sign Calculator.

ஆஸ்ட்ரோசேஜில் 2014 ஜாதகம் இப்பொழுது கிடைக்கிறது. ஒவ்வொரு வருடத்தையும் போலவே, சிறப்பான 2014 ஜாதகத்தை உங்களுக்கு அளிக்க நாங்கள் முழுமுயற்சி எடுத்துள்ளோம். 2014 க்கான ஜாதகம் வேத விதிமுறைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. 2014 ஜாதகத்தில், வாழ்க்கையின் எல்லா அம்சங்களுக்குமான கணிப்புகளை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். ஏராளமான ஜோதிடர்கள், நிறுவனங்கள் மற்றும் இணையதளங்கள் 2014 ஜாதகத்தை வழங்கினாலும், நம்பகமான பலன்களைக் கண்டுபிடிப்பது வெகு சிரமம். ஆஸ்ட்ரோசேஜ் 2014 பலன்கள் எல்லா அம்சங்களையும் மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் வந்திருக்கும் எண்ணற்ற 2014 ஜாதகப்பலன்களுக்கு மத்தியில், நாங்கள் உங்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு உழைத்துள்ளோம். இந்த 2014 ஜாதகப் பலன்களினால், நீங்கள் நல்ல பயன்களைப் பெறமுடியும் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் எல்லா விஷயங்களையும் முன்கூட்டி திட்டமிட இந்த 2014 கணிப்புகள் உதவியாக இருக்கும். உங்களுடைய எதிர்காலத்தை முன்பே அறிந்து கொள்ள முடியும். மேலும், எதிர்காலத்துக்காக தயார் நிலையில் இருக்கவும் காத்துக்கொள்ளவும் முடியும். 2014 ஜாதகம் எங்களுடைய நிபுணத்துவம் பெற்ற ஜோதிடர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தங்களுடைய பல்லாண்டு அனுபவத்தைப் பயன்படுத்தி உங்களுக்காக வெகுசிறப்பாக இதைக் கொண்டுவந்திருக்கிறார்கள். உங்களுக்கு இந்த வருடம் எப்படி இருக்கப்போகிறது என்பதை, இந்த ஜாதகத்தில் நீங்கள் அறிந்துகொள்ள முடியும். மேலும், அது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக விளக்கிவிடும். காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, தொழில்முறை வாழ்க்கை, தொழில், வேலை, நிதி மற்றும் எதுவானாலும்.

இந்த 2014 ஜாதகத்தில், நீங்கள் படிக்கத் தொடங்கும்போது; அது முதலில் இந்த வருடத்தைப் பற்றிய பொதுவான விவரத்தைத் தரும். மேற்கொண்டு, 2014 ஜாதகத்தில் உங்களுடைய சொந்த வாழ்க்கையைக் குறித்த விவரங்களை அறிய உதவுவதன் மூலம் நீங்கள் வீட்டில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை அதில் இறங்கித் தத்தளிக்கும் முன்பே தவிர்த்துவிடலாம். ஏனெனில், நீங்கள் ஏதோ வரப்போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்திருப்பீர்கள். அதற்குப் பிறகு, ஜாதகம் 2014 உங்களுடைய கவனத்தை காதல் வாழ்க்கையை நோக்கித் திருப்பும். அன்புதான் ஒருவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். உங்களுடைய வாழ்க்கையில் அன்பு இல்லையென்றால், எல்லாமே வெறுமையாகிவிடும். ஆகவே, உங்களுடைய 2014 ஜாதக கணிப்புகள் உங்களுடைய காதல் வாழ்க்கை வருங்காலத்தில் எப்படி இருக்கப் போகிறது என்பதையும் அதை எப்படி நீங்கள் சரியாக வைத்துக் கொள்ளமுடியும் என்றும் விளக்கிவிடும். அதற்குப் பிறகு, மற்றொரு முக்கியமான விஷயம் இருக்கிறது; அது தான், தொழில். நம்முடைய வாழ்க்கையில் தொழில் எவ்வளவு முக்கியமானது என்பது எல்லோருக்குமே தெரியும். அதனால், 2014 ஜாதகக் கணிப்புகள் நல்ல முடிவெடுக்க உங்களுக்கு உதவும். பிறகு, பணியிடம் குறித்துப் பேசுவதென்றால், அது வசதியானதாகவும் இதமானதாகவும் இருக்க வேண்டும். 2014 ஜாதகக் கணிப்புகள் அதை நல்லமுறையில் வைத்திருக்க உங்களுக்கு உதவும். அடுத்து, உங்கள் நிதிநிலைமை ஒரு முக்கியமான அங்கம். முதலீட்டில் எடுக்கக்கூடிய ஒரு தவறான முடிவால் எத்தகைய கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவே முடியாது. ஆகையால், உங்களுடைய நிதி சார்ந்த பலன்களையும் இந்த 2014 ஜாதகக் கணிப்புகள் வழங்கி உங்களுடைய சொத்துக்களைக் குறித்து சிறப்பான முடிவெடுக்க உதவுகிறது.

குறிப்பு: இந்தக் கணிப்புகள் சந்திர ராசியை அடிப்படையாகக் கொண்டவை. உங்களுடைய சந்திர ராசி பற்றித் தெரியவில்லையெனில், தயவு செய்து இங்கு கிளிக் செய்யவும்: ஆஸ்ட்ரோசேஜ் சந்திர ராசி கால்குலேட்டர்.

மேஷம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்

(Mesham Rasi Palan 2014)

Rasi Palan 2014 for Aries மேஷ ராசிக்காரர்களுக்கு, 2014 ஒரு நல்ல வருடமாக இருக்கப் போகிறது. 2014 ஜோதிட ஜாதகக் கணிப்பின்படி குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். இருப்பினும், சனியும் ராகுவும் 7-ஆம் வீட்டில் இருக்கிறார்கள். இது தம்பதிகளுக்குள் 2014-இல் கருத்து வேறுபாடுகளை உருவாக்கக் கூடும். 2014 ஜாதகத்தின் படி மேலும் உங்கள் வாழ்க்கைத்துணையாக இருப்பவருக்கு உடல்நலக் குறைவுகளும் ஏற்படக் கூடும். ஆரோக்கியம் என்று வரும்போது 2014 ஜாதகத்தின் படி சில ஏற்ற இறக்கங்களைக் காண நேரிடும். ஆகையால், நீங்கள் வியாதிகளுக்கு ஆளாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காதல்-வாழ்க்கைக்கு இது ஒரு நல்ல நேரம். பிற-ஜாதியினருடனான உறவுகளுக்கு இது உகந்த நேரமல்ல. ஆகவே, உங்கள் காதல்துணை உங்கள் சாதியல்லாதவராக இருந்தால் உங்கள் நடவடிக்கைகளில் எச்சரிக்கை தேவை. தொழில்முறையில் இந்த ஆண்டு உங்களுக்குப் பதவி உயர்வைத் தரக்கூடும். 2014 ஜாதகத்தின் படி நிதிநிலைமையைப் பொறுத்தவரையில் சாதகமான நிலைமை இருந்துவரும். மேற்படிப்புக்கான முயற்சிகள் மிகவும் சாதகமான தேர்ச்சி முடிவுகளைத் தரும். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஜுன், 2014க்குப் பிறகு சாதகமான நேரமாக அமையும். கருப்பு நிறப் பசுக்களுக்கு வைக்கோலும் பிண்ணாக்கும் உண்ணக் கொடுப்பது நல்ல பரிகாரமாக அமையும். இப்பொழுது, ரிஷப ராசியைப் பற்றிப் பேசலாம்.

ரிஷபம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்

(Rishabam Rasi Palan 2014)

Rasi Palan 2014 for Taurus ரிஷப ராசிக்காரர்களுக்கு 2014 முழுவதும் ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருக்கும். உங்களுடைய 2014 ஜோதிட ஜாதகக் கணிப்பின்படி, உங்கள் உள்ளம் கவர்ந்தவருக்காக நீங்கள் சிறப்புக் கவனம் எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள். உங்களுடைய 2014 ஜாதகக் கணிப்பின்படி அது உங்களுக்கு நற்பெயரை ஏற்படுத்தும். ஏற்கனவே ஏதேனும் வியாதியால் பாதிக்கப்படாதவராக இருந்தால், இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆரோக்கியமானதாக இருக்கப் போகிறது. அப்படி ஏற்கனவே ஏதேனும் வியாதியால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். சிறுசிறு வேறுபாடுகள் இருக்கக் கூடும் என்றாலும் காதல்-வாழ்க்கைக்கு இது நல்ல நேரம்தான். 2014 கணிப்பின்படி விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். 2014 ஜாதகக் கணிப்பின்படி தொழிலுக்கு இது சாதகமான சமயம். வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும், எனினும் வியாபாரம் மற்றும் தொழில்துறையினருக்கு நல்ல பலன் பெற கூடுதலான உழைப்பையும் முயற்சியையும் கொடுக்க வேண்டிய நேரம் இது. முழுமையான உழைப்பே, உங்களின் பெரும்பாலான முயற்சிகளுக்கு வெற்றி ஈட்டித் தரும். 2014-ல் உங்கள் நிதிநிலைமை சாதகமாகவே இருக்கும். 2014 ஜாதகக் கணிப்பின்படி முதல் அரையாண்டில் பணம் சேமிக்க நல்ல வாய்ப்புகள் அமையும். இன்னொரு பக்கம், அடுத்த அரையாண்டில் வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. 2014 ஜாதகக் கணிப்பின்படி மாணவர்களுக்கு சாதகமான தேர்ச்சி முடிவுகள் கிடைக்கும். ஆதரவற்ற பெண்களுக்கு உதவுவது நல்ல பரிகாரமாக அமையும். இப்பொழுது, 2014 மிதுன ராசிக்கு என்ன வைத்திருக்கிறது என்று பார்க்கலாம்.

மிதுனம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்

(Midhunam Rasi Palan 2014)

Rasi Palan 2014 for Gemini மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம சாதகமானதாக இருக்கும் என்று 2014 ஜாதகக் கணிப்பு சொல்லுகிறது. உங்கள் குடும்பத்தில் முக்கியமான நிகழ்வுகள் இந்த 2014-ஆம் வருடத்தில் நடைபெறும். இல்லத்தில் திருமணம் அல்லது குழந்தை பிறப்பு நிகழ வாய்ப்புள்ளது. இருப்பினும், உங்கள் ஆரோக்கியத்தின் மேல் ஒரு கண் வையுங்கள். பெரிய நோய்கள் எதுவும் வராது என்றாலும், பருவகால நோய்கள் சில நேரங்களில் தொல்லை தரக்கூடும். காதல் தொடர்பான விஷயங்களில் பிடிவாதம் தேவையில்லை என்று 2014 ஜாதகக் கணிப்பு சொல்லுகிறது. இல்லாவிட்டால், உங்கள் காதல் துணைவர் மற்றொருவரை நாடிச் செல்ல வாய்ப்புள்ளது. உங்களுடைய 2014 ஜாதகத்தின்படி நீங்கள் உங்களிடமிருந்து மாறுபட்ட சமுதாயத்தில் ஒருவரிடம் ஈர்க்கப்படுவீர்கள். வேலை மற்றும் தொழிலுக்கு இது நல்ல நேரம். வேலையில்லாமல் இருந்த நிலை மாறி வேலை கிடைக்கும் அல்லது பதவி உயர்வு கிடைக்கும். நிதிநிலைமை சாதகமாக இருக்கும். 2014 ஜாதகக் கணிப்பின்படி, வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஆபத்தான முதலீடுகளிலிருந்து விலகியிருங்கள். மாணவர்களுக்கு, 2014 சிறப்பானது. 2014 ஜாதகத்தின்படி மேற்படிப்புக்கு இது மிகச் சரியான நேரம். ஒரு கோயிலுக்கு பாதாம் பருப்புகளை தானமாகக் கொடுப்பது இந்த ஆண்டில் நல்ல பலன்களை அளிக்கும். இப்பொழுது, கடக ராசிக்கு 2014 –இல் என்ன காத்திருக்கிறது என்று பாரக்கலாம்.

கடகம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்

(Kadagam Rasi Palan 2014)

Rasi Palan 2014 for Cancer கடக ராசிக்காரர்களே, 2014 உங்களுக்கு ஒரு கலவையான பலன்களை அளிக்கப் போகிறது. 2014 ஜாதகத்தின்படி, முதல் அரையாண்டில் நீங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ராகுவும் சனியும் நான்காவது வீட்டில் இருப்பது உங்கள் மன அமைதியைப் பாதிக்கக் கூடும். 2014 ஜாதகத்தின்படி குடும்ப வாழ்க்கையால் நீங்கள் அழுத்தத்திற்கு ஆளாகக் கூடும். 2014-இல் நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இலகுவாகப் பழக முடியாத சூழ்நிலை உருவாகும். அதனால் உங்கள் அழுத்தம் அதிகரிக்கும். உங்களுடைய ஆரோக்கியம், வேலை, படிப்பு மற்றும் பிரயாணம் ஆகியவற்றிற்கு இது உகந்த சமயம் அல்ல. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து நீங்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 2014 ஜாதகத்தின்படி உங்களுக்குப் பணிமாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற பயணத்தைத் தவிர்ப்பதுடன் மேலதிகாரிகளிடம் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பதும் நல்லது. இருப்பினும், வருடத்தின் இரண்டாம் பகுதி சிறப்பானதாக இருக்கும். மெல்ல மெல்ல உங்கள் பிரச்சினைகள் குறையும். 2014 ஜாதக கணிப்பின்படி மத சம்பந்தமான மற்றும் ஆன்மீக நடவடிக்கைகள் உங்களுக்கு சமாதானத்தைக் கொண்டுவரும். வருடத்தின் பின் பாதியில், உங்கள் கல்வித்தகுதி உயர்வதோடு மேற்கல்வி முயற்சிகள் வெற்றி பெரும். ஒரு பசுங்கன்றுக்கு அதன் தாயின் பாலுடன் சாதத்தைக் கலந்து தருவது உங்கள் பிரச்சினைகளைத் தடுத்து நிறுத்தும். இப்பொழுது, சிம்ம ராசி குறித்துப் பேசலாம்:

சிம்மம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்

(Simmam Rasi Palan 2014)

Rasi Palan 2014 for Leo சிம்ம ராசிச் சிங்கங்களே, முதல் அரையாண்டில் நீங்கள் வேறுபட்ட சாதகமான பலன்களைப் பெறப் போகிறீர்கள். 2014 ஜாதகத்தின்படி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் முதல் அரையாண்டில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2014-இல் வருமானம் வரும் வழிகள் அதிகரிக்கும். நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடம் இருந்தும் உறுதியான ஆதரவு கிடைக்கும். 2014 ஜாதகத்தின்படி, குழந்தை பாக்கியம் மற்றும் கல்விக்கு இது சாதகமான நேரம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சனி ஐந்தாம் வீட்டில் இருப்பதால் குழந்தை பாக்கியம் தொடர்பான குழப்பங்கள் ஏற்படும்; இருப்பினும், எல்லாப் பிரச்சினைகளும் அந்தந்த நேரத்தில் முடிவுக்கு வரும். நல்ல உடல் ஆரோக்கியம் நிலவும். 2014 ஜாதகத்தின்படி காதல் மற்றும் தாம்பத்தியத்திற்கு இது சிறப்பான காலமாக இருக்கும். 2014 ஜாதகத்தின்படி இலாபகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் முறையில் உங்கள் திறமை வெளிப்படும். 2014 ஜாதகத்தின்படி பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் தாங்கள் விரும்பிய நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவார்கள். இருப்பினும், இரண்டாவது அரையாண்டில் செலவினங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு இது சாதகமான நேரம் இல்லை. தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். அரசஞ்செடி ஒன்றை நட்டுத் தண்ணீர் ஊற்றி வருவது நலம். இப்பொழுது, கன்னி ராசி பற்றிப் பேசலாம்.

கன்னி இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்

(Kanni Rasi Palan 2014)

Rasi Palan 2014 for Virgo கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த 2014 மொத்தத்தில் ஒரு இலாபகரமான ஆண்டு. இந்த 2014-இல், வீட்டில் ஒரு சுமூகமான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். இருப்பினும், உங்களுக்குச் சொல்ல விரும்பும் ஒரு ஆலோசனை என்னவெனில் நீங்கள் உங்கள் நாவைக் கட்டுப் படுத்தவேண்டும் என்பதே. மேலும், தேவையற்ற செலவினங்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, இரண்டாவது அரையாண்டில் உங்களுடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 2014 ஜாதகத்தின்படி, உங்கள் தொழிலில் அசாதாரணமாக ஏதாவது சாதிப்பீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். 2014-இல் இன்னும் அதிக வாய்ப்புக்கள் கிடைக்கும். இருப்பினும், சனியும் இராகுவும் இரண்டாம் வீட்டில் இருக்கின்றனர். ஆகவே, பணம் சேமிப்பது என்பது சற்று சிரமமானதாக இருக்கும். ஆனாலும், ஜுலை மாதத்தில் இராகு இடம் மாறுவதால் சேமிப்புக்கு அது உதவியாயிருப்பதோடு உங்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. 2014 ஜாதகக் கணிப்பின்படி மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். முன்நெற்றியில் செந்தூரக் குங்குமம் இடுவது உங்களுக்குச் சாதகமானது. இப்பொழுது, துலாம் ராசியைப் பாரக்கலாம்.

துலாம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்

(Thulaam Rasi Palan 2014)

Rasi Palan 2014 for Libra துலாம் ராசிக்காரர்களே நீங்கள் இந்த 2014-இல் கலவையான பலன்களை எதிர்பார்க்கலாம். ஒன்பதாம் வீட்டில் வியாழன் இருப்பதால் நீங்கள் இயற்கையிலேயே ஆன்மீக நாட்டம் உடையவராக இருந்தால், உங்களால் குடும்பத்தில் சந்தோஷமான சூழல் நிலவும். சனியும் இராகுவும் முதலாம் வீட்டில் இருப்பதால் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இருப்பினும், ஜூலையில், இராகுவின் பெயர்ச்சிக்குப் பிறகு, உடல்நலப் பிரச்சினைகள் தீரும். காதல் தொடர்பான விஷயங்களுக்கு இது ஏற்ற வருடம். ஆனாலும், உங்கள் திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரக்கூடும். 2014 ஜாதகக் கணிப்பின்படி முக்கியத்துவம் இல்லாத வழக்குகளை நடத்தவேண்டாம், அது உங்கள் பணத்தையும் நேரத்தையும் விரயமாக்கும். 2014-இல் தொழிலில் பிரச்சினைகள் ஏற்படக் கூடும். ஆனால், சில விஷயங்களில் பெரும் போராட்டங்களுக்குப்பின் வெற்றி கிடைக்கும். நிதிநிலைமையைப் பொறுத்தவரை 2014, ஒரு சராசரியான வருடம். மாணவர்களுக்கு உழைப்புக்கேற்ற சாதகமான பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டில் கல்வி கற்க விரும்புவோர்க்கு இது சாதகமான நேரம். குரங்குகளுக்கு உணவளித்து உதவுவது நன்மை தரும். அசைவ உணவு மற்றும் மதுவைத் தவிருங்கள். இப்போது விருச்சிக ராசியைப் பற்றிப் பேசலாம்.

விருச்சிகம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்

(Viruchigam Rasi Palan 2014)

Rasi Palan 2014 for Scorpio விருச்சிக ராசிக்காரர்களே 2014 ஜாதகக் கணிப்பின்படி, இந்த ஆண்டுத் தொடக்கத்தில் வியாழன் உங்களுடைய எட்டாம் வீட்டில் இருக்கிறது. 2014-இன் ஆரம்பத்தில், நல்ல பலன்களைப் பெற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களிடம் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள் என்று உங்கள் 2014 ஜாதகக் கணிப்பு கூறுகிறது. பாதுகாப்பில்லாத உணர்வு வாட்டுவதால் உடல்நலம் பாதிக்கப்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. 2014 ஜாதகக் கணிப்பின்படி நீங்கள் முடிந்தவரை வழக்குகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. தேவையற்ற பயணங்கள் உங்களுக்கு நல்லதல்ல. காதல் விஷயங்களிலும் சில குழப்பங்கள் ஏற்படும். பெரும்பாடு பட்டாலும் எதிர்பார்த்த பலன் கிட்டாது. இரண்டாவது அரையாண்டில் வியாழன் உங்களுடைய ஒன்பதாம் வீட்டிற்கு வருவதால் நல்ல முன்னேற்றங்களைக் கொண்டுவரும். ஜூலையில் இராகு உங்களுடைய பதினோராவது வீட்டை வந்தடைகிறது. இந்த மாற்றம் முன்னேற்றம் தரும். இதன் விளைவாக, மாணவர்களுக்கு நல்ல தேர்ச்சி முடிவுகள் கிட்டும், உங்கள் வருமானம் உயரும். நெய்யும் உருளைக்கிழங்கும் ஏழைகளுக்குத் தானமாகக் கொடுப்பது உங்களுக்கு நல்ல பலன் தரும்.

தனுசு இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்

(Dhanusu Rasi Palan 2014)

Rasi Palan 2014 for Sagittarius தனுசு ராசிக்காரர்களே 2014-இன் முதல் பகுதி உங்களுக்கு மிகுந்த நன்மையானதாகும். குடும்பத்தில் நல்ல இனிமையான சூழல் நிலவும் என்று உங்கள் 2014 ஜாதகக் கணிப்பு கூறுகிறது. புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வீர்கள். சனியும் ராகுவும் உங்களுடைய பதினோராம் வீட்டில் இருப்பது உங்களுக்கு முன்னேற்றம் தரும். ஆனால், மேலே இருக்கும் வீட்டில் சனியின் தாக்கம் சில எதிர்மறை விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்தும். அதனால், உங்களுடைய முயற்சிகள் எந்த எதிர்மறைச் செயல்களோ, கெட்ட பழக்கங்களோ இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். 2014 ஜாதகக் கணிப்பின்படி காதல் மற்றும் திருமணம் தொடர்பான விஷயங்களில் விரும்பிய முடிவுகள் ஏற்படும். இருப்பினும் ஐந்தாவது வீட்டில் சனியின் ஆதிக்கம் சில சமயங்களில் உங்கள் காதல் துணையுடன் வாக்குவாதம் ஏற்படுத்தும். சிறிய விஷயங்களைப் பெரிதுபடுத்தி விவாதமாக மாற்ற வேண்டாம். தொழில்வகையில் இது ஒரு சாதகமான நேரம். மாணவர்கள் தங்கள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவார்கள். இருப்பினும், ஆண்டின் இரண்டாவது பகுதியில் உங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். 2014 ஜாதகக் கணிப்பின்படி, எச்சரிக்கையுடன் முதலீட்டு விஷயங்களில் ஈடுபடுவது நல்லது. குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பேராசைப்பட வேண்டாம். வேலையில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது. வேலைமாற்றமோ விரும்பத் தகாத இடமாற்றமோ ஏற்படக்கூடும். ஓடும் நதியில் தேங்காய்களை மிதக்க விடுவது நல்ல முன்னேற்றம் தரும். 2014 மகர ராசிக்காரர்களுக்கு என்ன வைத்திருக்கிறது என்று பாரக்கலாம்.

மகரம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்

(Magaram Rasi Palan 2014)

Rasi Palan 2014 for Capricorn மகர ராசிக்காரர்களே இந்த 2014 ஜாதகம் உங்களுக்குக் கலவையான பலன்களைக் கொண்டுவரும். இந்த மாதத் தொடக்கத்தில் வியாழன் உங்களுடைய ஐந்தாம் வீட்டிற்கு இடம் பெயர்கிறார். நிதி விவகாரங்களில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. 2014 ஜாதகக் கணிப்பின்படி உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு உருவாகக் கூடும். உங்கள் உடல் நலம் கூட சிறப்பாக இல்லாமல் போகலாம். இருப்பினும், வியாதிகள் உங்களுக்கு அதிக தொந்தரவு தராது. சில சச்சரவுகளோ அதனால் கோர்ட் கேஸ்களோ ஏற்படக்கூடும். ஆனால் இந்த நேரம் உங்களுக்கு வழக்குகளில், பல பிரச்சினைகளுக்குப் பிறகு வெற்றியைக் கொண்டுவரும். உங்கள் எதிரிகள் உங்களுக்குத் தொல்லை தந்தாலும், முடிவில் வெற்றி உங்களுடையதாகத்தான் இருக்கும். வருடத்தின் இரண்டாவது பகுதியில் காதல் விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணத்தினால் சந்தோஷம் ஏற்படும். உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் நிகழும். நீங்கள் கூட்டு வாணிகத்தில் இருந்தால், உங்களுக்கு இலாபம் கிடைக்கும். 2014 ஜாதகக் கணிப்பின்படி உங்களுடைய வருமானமும், அறிவும் பெருகும். ஒரு பூசாரிக்கு மஞ்சள் நிற ஆடையை தானமாகக் கொடுத்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். இப்பொழுது கும்ப ராசி பற்றிப் பேசலாம்.

கும்பம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்

(Kumbam Rasi Palan 2014)

Rasi Palan 2014 for Aquarius கும்ப ராசிக்காரர்களே, இந்த 2014 ஆண்டு உங்களுக்கு ஒளிமயமான தொடக்கமாக இருக்கும். சில சிறப்பு விழாக்கள் உங்கள் குடும்பத்தில் நடைபெறும். உங்கள் குடும்பத்தைப் பற்றித் திட்டமிட இது சிறப்பான சமயம். இந்த நேரம் உங்களுக்கு கல்வியைப் பற்றி திட்டமிடவும் சரியான நேரம். 2014 ஜாதகக் கணிப்பின்படி தொலைதூரப் பயணங்கள் பயனுள்ளதாயிருக்கும். குறிப்பாக ஆன்மிகப் பயணங்களுக்கு இது ஏற்ற நேரம். உங்கள் உடல் நலம் சீரானதாக இருக்கும்; என்றாலும் உங்கள் உணவுப் பழக்க வழக்கங்களில் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கை தேவை. உங்களுக்கு இன்னும் சிறப்பான வேலை கிடைக்கும். அதிக இலாபங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதை நட்சத்திரங்கள் காட்டுகின்றன. கல்விக்கு இது நல்ல நேரம். இருப்பினும், ஆண்டின் இரண்டாம் பகுதியில் சில இடைஞ்சல்களை எதிர்கொள்ள நேரிடும். 2014 ஜாதகக் கணிப்பின்படி கடன்கள், கொடுக்கல் வாங்கல்களில் பிரச்சினைகள் முளைக்கும். முக்கியமான முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்காமல் இருப்பது நலம். தண்ணீர் வழியாக எதேனும் பயணம் செல்லத் திட்டமிட்டிருந்தால், முடிந்தவரையில் அதைத் தவிர்த்துவிடுங்கள். அரிசி, வெல்லம் மற்றும் பருப்புகளைக் கோயிலில் தானமாகக் கொடுத்தால் நட்சத்திரங்களின் எதிர்மறை விளைவுகளைக் குறைக்கும். இப்பொழுது, மீன ராசியைப் பற்றிப் பேசலாம்.

மீனம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்

(Meenam Rasi Palan 2014)

Rasi Palan 2014 for Pisces மீனம் ராசிக்காரர்களே இந்த 2014 உங்களுக்கு ஆதாயமுள்ளதாக அமையும். சனி தசையினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வியாழனின் அனுக்கிரகம் உங்களுடன் இருக்கும். வீட்டில் இணக்கமான சூழல் நிலவும். உங்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதியதாக வீடு அல்லது வாகனம் வாங்க நேரம் கூடிவரும். 2014 ஜாதகக் கணிப்பின்படி ஆண்டின் இரண்டாவது பகுதியில் காதல் மற்றும் திருமண விஷயங்கள் சாதகமானதாக அமையும். ஆனால், ஜூலைக்குப் பிறகு இராகு உங்களுடைய ஏழாம் வீட்டிற்கு வருவதால், திருமண வாழ்க்கையில் அழுத்தம் ஏற்படும். 2014 ஜாதகக் கணிப்பின்படி உங்களுடைய சொந்தத் தொழில் முன்னேற்றத்திற்காக பணம் செலவிட வேண்டி வரும். வயதில் மூத்தவர்களின் உதவி கிடைக்கும். உங்கள் திட்டங்களை செயல்படுத்துகிற அதே நேரத்தில் புதிய விஷயங்களையும் தொடங்குவீர்கள். வருமான உயர்வுக்கு வாய்ப்புகள் இருப்பதை நட்சத்திரங்கள் காட்டுகின்றன. கூட்டுத் தொழிலில் இருந்தால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நலம். மாணவர்களுக்கு, 2014 ஜாதகக் கணிப்பின்படி இந்த நேரம் நல்லதாக இருக்கும். மேற்கல்வி பயில விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் இன்னும் சாதகமாக இருக்கும். ஒரு சதுரமான வெள்ளித் துண்டை உங்கள் பையில் எப்போதும் வைத்திருப்பது நல்ல பலன்களைக் கொண்டுவரும்.

பண்டிட். ஹனுமான் மிஷ்ரா

Get astrology software
Get Tamil horoscope jathagam free here. This Jathagam will give details of nine planets i.e. navagrahas, rasi, bhava, Nakshatram, and laganam, Dhasa Bhuthi palan, Peyarchi Palangal, personalized Rasi palan for 2012, 2013 etc...
Get Lal Kitab astrology
Get 10 Porutham match online. Find Star Porutham or Nakshatra Porutham for Marriage Online and know marriage compatibility. Best tool for checking South Indian horoscope matching i.e. porutham, kuja dosham, papasampya and dasa sandhi online...

2014 Articles

Astrological services for accurate answers and better feature

33% off

Dhruv Astro Software - 1 Year

'Dhruv Astro Software' brings you the most advanced astrology software features, delivered from Cloud.

Brihat Horoscope
What will you get in 250+ pages Colored Brihat Horoscope.
Finance
Are money matters a reason for the dark-circles under your eyes?
Ask A Question
Is there any question or problem lingering.
Career / Job
Worried about your career? don't know what is.
AstroSage Year Book
AstroSage Yearbook is a channel to fulfill your dreams and destiny.
Career Counselling
The CogniAstro Career Counselling Report is the most comprehensive report available on this topic.

Astrological remedies to get rid of your problems

Red Coral / Moonga
(3 Carat)

Ward off evil spirits and strengthen Mars.

Gemstones
Buy Genuine Gemstones at Best Prices.
Yantras
Energised Yantras for You.
Rudraksha
Original Rudraksha to Bless Your Way.
Feng Shui
Bring Good Luck to your Place with Feng Shui.
Mala
Praise the Lord with Divine Energies of Mala.
Jadi (Tree Roots)
Keep Your Place Holy with Jadi.

Buy Brihat Horoscope

250+ pages @ Rs. 399/-

Brihat Horoscope

AstroSage on MobileAll Mobile Apps

AstroSage TVSubscribe

Buy Gemstones

Best quality gemstones with assurance of AstroSage.com

Buy Yantras

Take advantage of Yantra with assurance of AstroSage.com

Buy Feng Shui

Bring Good Luck to your Place with Feng Shui.from AstroSage.com

Buy Rudraksh

Best quality Rudraksh with assurance of AstroSage.com

Reports

Live Astrologers