Personalized
Horoscope
  • Talk To Astrologers
  • Brihat Horoscope
  • Personalized Horoscope 2024
  • Live Astrologers
  • Top Followed Astrologers

Rasi Palan 2015 - Tamil Astrology 2015 - Tamil Horoscope 2015

இராசிபலன் 2015 – ஜோதிடம் 2015

Rasi Palan 2015 will help you understand your direction for the year 2015. This Tamil Astrology 2015 predictions gives a comprehensive summary of your entire year - what you should do, what you should not, what you should be careful about etc. The Tamil Horoscope for 2015 is based on Vedic Astrology that will lead you toward success and prosperity in year 2015. Whether, it is a year with many road bumps or if its a smooth ride, 2015 Rasi Palan will let you know in advance. Rasi Palan 2015 has a clear and concise predictions for your zodiac signs. The Tamil Astrology 2015 is written keeping in mind your moon signs. All the important sections like career, family, love life, finance and health has been covered in our every efficient Rasi Palan 2015.

Note: These predictions are based on your Moon sign. If you are not sure about your moon sign, please visit the following page - AstroSage Moon Sign Calculator .

உங்கள் வருடத்தை இனிதே தொடங்கவும் முன்கூட்டி சிறப்பாகத் திட்டமிடவும் இதோ உங்களுக்காக இராசிபலன் 2015. எங்களுடைய அனுபவம் வாய்ந்த சோதிட நிபுணரால் இந்த 2015 ஜோதிடப் பலன்கள் கணிக்கப் பட்டுள்ளன. அது உங்கள் வாழ்க்கையின் எல்லா முக்கியமான அம்சங்களைப் பற்றி எடுத்துச் சொல்கிறது. எல்லா ராசிகளுக்கும் முழுமையான பலன்கள் இந்த 2015 இராசிபலன் தொகுப்பில் அடங்கியுள்ளது. உங்கள் சந்திர இராசியின் அடிப்படையில் இந்த ஆண்டுப் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. முக்கிய அம்சங்களான வேலை, நிதி, குடும்பம், காதல், உடல்நலம் மற்றும் கல்வி ஆகியவை பற்றிய கணிப்புகள் இந்த 2015 பலன்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: இந்தப் பலன்கள் உங்கள் சந்திர இராசியின் அடிப்படையில் அமைந்தவை. உங்கள் சந்திர இராசி எதுவென்று உங்களுக்குத் தெரியவில்லையெனில் பின்வரும் பக்கத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் – அஸ்ட்ரோஸேஜ் மூன் சைன் கால்குலேட்டர் .

மேஷம் இராசிபலன் 2015
(Mesham Rasi Palan 2015)

Mesham Rasiமேஷ இராசி அன்பர்களே, வியாழ பகவான் உங்கள் மீது ஆசீர்வாதங்களை மழையாகப் பொழிகிறார். உங்கள் ஒன்பதாம் வீட்டின் நாயகர் (பாக்கியேஸ்வரர்) உங்களுடைய நான்கு மற்றும் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். ஆகவே, 2015 இன் முன் பாதியில் உங்கள் குடும்ப வாழ்க்கை வசீகரமானதாக இருக்கும். நீங்கள் வெளிநாடு செல்ல முயற்சித்துக் கொண்டிருப்பவரானால் இப்பொழுது நேரம் கூடிவரும். சொந்த வீடு அல்லது கார் வாங்க விரும்புகிறீர்களா? இப்பொழுது கொஞ்சம் முயற்சித்தால் உங்கள் ஆசை நிறைவேறிவிடும். 2015 இன் பின் பகுதி காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமான தம்பதியர் குழந்தை பாக்கியத்துக்காக காத்துக் கொண்டிருப்பவராயின் ஒரு தேவதையே உங்களுக்குக் கொடுக்கப்படும். தொழிலில் இருப்பவர்கள் அதை விரிவு படுத்துவதற்காகச் செலவு செய்வீர்கள். புத்தம் புதிய செயல்திட்டத்துடன் புதிய விஷயத்தில் ஈடுபடுவீர்கள். இராசி பலன் 2015 இன் படி வயதில் பெரியவர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். பெரும் தொகை ஈட்டுவதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், சனி எட்டாவது வீட்டிலும் ராகு ஆறாவது வீட்டிலும் இருப்பதால் குடும்பம் மற்றும் உடல்நலம் குறித்த விஷயங்ளால் நிம்மதி இழப்பீர்கள். ஆகவே இந்த விஷயங்கள் குறித்து அவ்வப்போது சிந்தித்துச் செயல்படுங்கள். பன்னிரண்டாம் வீட்டிலிருக்கும் கேதுவினால், நீங்கள் நிதானமிழந்து செயல்பட்டுப் பிரச்சினையில் மாட்டிக் கொள்வதை விட நல்ல ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுவது நலம். மாணவர்களுக்கு அவர்களின் கடின உழைப்புக்கேற்ற வகையில் தேர்வு முடிவுகள் கிட்டும்.

மேஷ இராசிக்கு 2015 இல் பரிகாரம்: சதுர வடிவ வெள்ளித் துண்டு ஒன்றை எப்போதும் உங்களோடு வைத்திருக்கவும்.

ரிஷபம் இராசிபலன் 2015
(Rishabam Rasi Palan 2015)

Rishabam Rasiரிஷப இராசி அன்பர்களே, 2015 இல் வியாழ பகவான் உங்கள் மேல் மகிழ்ச்சியாயிருக்கிறார். அவருடைய ஆசீர்வாதம் உங்களைச் சரியான திசையில் செயல்பட வைத்து வெற்றி ஈட்டித் தரும். உங்கள் பணிகளைச் சரியாக செய்வதுடன் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் பாராட்டும் கிடைக்கும். இது நல்ல விஷயம்தானே? இருப்பினும், ரிஷப இராசியின் 2015 பலன்களின் படி சனி உங்கள் ஏழாவது வீட்டில் இருப்பதால் உங்கள் வருமானம் ஈட்டுவதில் தடை ஏற்படக் கூடும். ஆனாலும், கவலை வேண்டாம்.; நல்ல நேரம் வருவதற்கு முன்பாக கொஞ்சம் கஷ்டத்தை அனுபவிக்கிற நேரம் வந்தால் சந்தோஷத்தின் உண்மையான மதிப்பை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். மேலும் நீங்கள் வாழ்க்கையின் நிதர்சனங்களோடு பொருந்திப் போவதில் சிரமப்படுவீர்கள். ஆனாலும், உங்கள் முயற்சிகளினால் எல்லாத் தடைகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதானால், ஐந்தாம் வீட்டிலிருக்கும் இராகுவினால், நீங்கள் உங்கள் காதலுக்கு முக்கியமான உண்மையும் விசுவாசமும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆகவே, உங்கள் காதல் துணைவரோடு நீங்கள் விசுவாசமாக நடந்து கொள்வதில் உறுதியாக இருங்கள். பணத்தைப் பொறுத்த வரையில் இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டாக இருக்கும். வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் போன்ற சில வீட்டு உபயோகப் பொருட்கள் திடீர் செலவுகளை ஏற்படுத்தும். ரிஷப இராசி மாணவர்களுக்குப் 2015 ஆம் ஆண்டுப் பலன் சொல்வதானால், இந்த ஆண்டில் அவர்கள் எதிர்பாராத தேர்வு முடிவுகளைப் பெறுவார்கள்.

ரிஷப இராசிக்கு 2015 இல் பரிகாரம்: ஒரு கருப்பு நிறப் பசுவைப் பராமரித்துச் சேவை செய்யுங்கள்.

மிதுனம் இராசிபலன் 2015
(Midhunam Rasi Palan 2015)

Midhunam Rasiமிதுன இராசி அன்பர்களே, இந்த 2015 ஆம் ஆண்டு உங்களுக்கு ஆசீர்வாதங்களின் அற்புதப் பெட்டகமாக இருக்கப் போகிறது. இது உங்கள் வாழ்க்கையின் அற்புதமான நேரம்! உங்கள் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு நீங்கள் ஏதேனும் சிறப்பாகச் செய்ய விரும்பினால், உங்கள் முயற்சிகள் வண்ணமயமாக நிறைவேறும். இதைத்தான் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல என்று பெரியவர்கள் சாதகமாகச் சொல்வார்கள். இந்த 2015 ஆம் ஆண்டில் உங்களுக்குப் பெயரும் புகழும் பணமும் இன்னும் என்னென்ன விருப்பங்கள் உள்ளனவோ அத்தனையும் நிறைவேறும். இதைவிட வேறு என்ன நீங்கள் கேட்டுவிட முடியும்? 2015 மிதுன இராசிப் பலன்களின் படி இந்த 2015 ஆம் ஆண்டில் உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். நாள்பட்ட வியாதியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும், இப்பொழுது அதில் முன்னேற்றம் காணப்படும். மொத்தத்தில், உங்களுக்கு இது ஜாக்பாட் அடிக்கும் நேரம்! இந்த ஆண்டு முழுவதுமே காதல் விஷயங்களுக்கு மிகவும் அற்புதமான கால கட்டமாக இருக்கும். நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்து வேலை மாற்றத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பவராயின், உங்களுக்கு வேறு நல்ல நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆகவே, எந்த நல்ல வாய்ப்புகள் வந்தாலும் விட்டுவிடாமல், இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். மற்றொரு பக்கம், தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்னும் அதிகமாக உழைக்க வேண்டிய தருணம் இது. ஆனாலும் உழைப்பே உயர்வு தரும் என்பதை நினைவில் வைத்துச் செயல்படுங்கள். மேலும் இந்த 2015 ஆம் ஆண்டு பலன்களின் படி, நீங்கள் கடுமையாக உழைக்கத் தயங்காதவராக் இருக்கவேண்டும். மாணவர்களைப் பற்றிச் சொல்வதானால், அவர்களுக்குத் தொடர்ந்து நல்ல சாதகமான தேர்வு முடிவுகள் கிடைக்கும்.

மிதுன இராசிக்கு 2015 இல் பரிகாரம்: சிறு பெண் குழந்தைகளுக்கு உதவிகள் செய்யுங்கள்.

கடகம் இராசிபலன் 2015
(Kadagam Rasi Palan 2015)

Kadagam Rasiகடக இராசி அன்பர்களே, இந்த 2015 ஆம் ஆண்டு சில விஷயங்களில் உங்கள் மனம் கவர்ந்த ஆண்டாகவே இருக்கும். திருமண வயதை எட்டியிருப்பவர்களுக்கு மேளச்சத்தம் கேட்கும் நேரம் இது. ஆகவே, தயாராக இருங்கள்! உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் ஒருவருக்காக திருமண மேளம் கொட்டுவது நிச்சயம். கடகம் இராசிபலன் 2015 இன் படி, காதல் விஷயங்களில், எதையும் வற்புறுத்திக் கேட்பது நன்மை தராது. ஆகவே பொறுமையும் எச்சரிக்கையும் தேவை. வேலை தொடர்புடைய விஷயங்களுக்கு 2015 ஒரு சிறப்பான ஆண்டு. பதவி உயர்வு கிடைக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன. இது உங்களுக்கு ஒரு அற்புதமான நேரமாக இருக்கும். பணித் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள நேரும். இருப்பினும் அவற்றில் பெரும்பாலானவை பலனைத் தராது. கடகம் இராசிபலன் 2015 இன் படி நீங்கள் நல்ல மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருந்தாலும், கண்மூடித்தனமாக முதலீடு செய்வது புத்திசாலித்தனம் ஆகாது. இறுதியாக, நீங்கள் அக்கறை கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. உங்கள் உடல்நலம் ஏற்றத் தாழ்வுடன் காணப்படும். ஆனால், அதற்காக படுத்த படுக்கையாக ஆக மாட்டீர்கள். சற்று எச்சரிக்கயுடன் இருந்தால் போதும். மாணவர்களுக்கும் இந்த 2015 கோலாகலமாக இருக்கும். கடக இராசிக்காரர்களுக்கு ஆண்டில் 90% சாதகமான பலன்களே இருக்கும்.

கடக இராசிக்கு 2015 இல் பரிகாரம்: ஒரு ஆலயத்திற்கு பாதாம் கோட்டைகளைத் தானமாக வழங்கவும்.

சிம்மம் இராசிபலன் 2015
(Simmam Rasi Palan 2015)

Simmam Rasiசிம்மம் இராசிபலன் 2015 இன் படி, இந்த ஆண்டு உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். குழம்ப வேண்டாம், சில நல்ல பலன்களும் சில சாதிக்கக் கூடியவையும் இருக்கும். 2015 இன் முதல் பாதியில், வியாழன் பன்னிரண்டாம் வீட்டிலும், சனி நான்காவது வீட்டிலும் இருக்கிறது. அதனால் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். பயப்படாதீர்கள், அவை உங்கள் திறமைகளைச் சிறப்பாக சோதித்து வெளிக்கொணரும். உங்கள் அன்புக்குரியவர்களின் நடத்தையினால் உங்களுக்கு வருத்தம் ஏற்படும். ஆனாலும் ஆண்டின் இரண்டாம் பகுதி முதற்பகுதியை விட சிறப்பாக இருப்பதோடு, உங்கள் பிரச்சினைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும். இருப்பினும், நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவெனில், இந்த காலகட்டத்தில் யார் எதைச் சொன்னாலும் அதைப் பெரிது படுத்தாதீர்கள். சிம்மம் இராசிபலன் 2015 இன் படி நீங்கள் அமைதியாகவும் நிம்மதியுடனும் வாழ இதுவே சிறந்த வழியாகும். உங்கள் புத்திசாலித்தனமான திட்டமிடுதலால் நீங்கள் கஷ்டமான சூழ்நிலைகளை லாவகமாகக் கையாள்வீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும் நேரம் இது. மதம் மற்றும் ஆன்மீக நடவடிக்கைளின் மேல் ஆர்வமும் அதனால் சந்தோஷமான உணர்வும் கிடைக்கும். மொத்தத்தில், இந்த ஆண்டில் சந்தோஷ நிகழ்வுகளும் எல்லா விஷயங்களிலும் உற்சாகமும் நிலைத்திருக்கும். 2015 இன் சிறந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை உங்களால் வெளிக் கொணர முடியும். இதனால் நீங்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சிறந்த மனிதராக மாறுவீர்கள்.

சிம்ம இராசிக்கு 2015 இல் பரிகாரம்: சாதமும் பாலும் கலந்து ஒரு பசுங்கன்றுக்குக் கொடுங்கள்.

கன்னி இராசிபலன் 2015
(Kanni Rasi Palan 2015)

Kanni Rasiகன்னி இராசி அன்பர்களே, 2015 ஆம் ஆண்டின் முதல் பகுதியில் இராகு பதினோராம் வீட்டில் இருப்பதால் பலவகை ஆதாயங்களைப் பெரும் வாய்ப்பு உள்ளது. எத்தனை ஆச்சரியங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியாது. கன்னி இராசிபலன் 2015 இன் படி, குடும்ப உறுப்பினர்களும் சந்தோஷமாக இருப்பார்கள், ஆனால் இராகு முதல் வீட்டில் இருக்கும்போது ஒவ்வொருவரின் உடல்நலத்திலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். கவலைப்படும் அளவுக்குப் பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால் சற்று எச்சரிக்கையாக இருந்து ஒவ்வொருவரின் உடல்நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆண்டின் முதல் பகுதியில் காதல், திருமணம் அல்லது குழந்தை பாக்கியம் போன்றவற்றுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. அத்துடன், வேலை, தொழில் மற்றும் கல்விக்கும் இது சிறப்பான காலகட்டம். கன்னி இராசிபலன் 2015 இன் படி, இந்த ஆண்டு ஏராளமான வாய்ப்புகளும் அதனால் கொண்டாட்டங்களும் நிறைந்திருக்கும். இருப்பினும் ஆண்டின் இரண்டாம் பாதியில் எல்லாவற்றிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் பயப்படத் தேவையில்லை. மிகக் கடுமையான பிரச்சினைகள் எதுவும் உங்களுக்கு நேரிடாது. செலவுகள் அதிகரிப்பதோடு உங்கள் உடல்நலமும் இடையில் பாதிக்கப்படும். பெரிய பிரச்ச்சினைகள் எதுவும் உங்களுக்கு நேரிடாது என்பதால் கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் பொறுமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்படவேண்டியது அவசியம்.

கன்னி இராசிக்கு 2015 இல் பரிகாரம்: ஒரு அரசமரத்திற்கு நீரூற்றி வாருங்கள்.

துலாம் இராசிபலன் 2015
(Thulaam Rasi Palan 2015)

Thulaam Rasiதுலாம் இராசி அன்பர்களே, 2015 உங்களுக்கு ஒரு நல்ல ஆண்டு. துலாம் இராசிபலன் 2015 இன் படி, உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதானால் சில தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எப்படியானாலும் குடும்பத்தின் அமைதி கெடாது. உடல்நலத்தைப் பொறுத்த வரையில் 2015 ஒரு நல்ல ஆண்டாக இருக்கும். நீங்கள் வீடு அல்லது கார் வாங்க திட்டமிட்டுக் கொண்டிருந்தால், இந்தக் குழப்பத்திலிருந்து வெளியே வாருங்கள். ஒரு உறுதியான முடிவு எடுக்க இதுவே சரியான தருணம். 2015 இன் இரண்டாம் பகுதியில் உங்கள் சொந்த வாழ்க்கையிலும் காதல் வாழ்க்கையிலும் சாக்லேட்டின் இனிப்பும் ரோஜாவின் நறுமணமும் வீசும் காலம் இது. ஆகவே, காதல் சுழல் பாதையில் வலம் வரத் தயாராகுங்கள். துலாம் இராசிபலன் 2015 இன் படி, இந்த ஆண்டில் உங்கள் பணியில் நீங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுவீர்கள். உங்களுக்குப் புது பலம் வந்து சேர்ந்ததாக உணர்வீர்கள். பணியில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்புகள் உறுதியாக உள்ளன. பொதுமக்களின் ஆதரவோடு, மதிப்பும் மரியாதையும் உயரும். ஆதாயம் பெறும் வாய்ப்புகளும் அதிகமாகக் கூடிவரும். இருப்பினும், இரண்டாம் வீட்டில் சனி இருப்பதால் செலவுகளும் அதிகமாகும். நீங்கள் கொஞ்சம் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய காலம் இது. மாணவர்களுக்கு சாதகமான தேர்வு முடிவுகள் வரும்

துலாம் இராசிக்கு 2015 இல் பரிகாரம்: முன் நெற்றியில் செந்தூரத் திலகம் வைத்தால் நல்லது.

விருச்சிகம் இராசிபலன் 2015
(Viruchigam Rasi Palan 2015)

Viruchigam Rasi2015 இல், பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக உள்ளன. உங்களுக்குப் பாதுகாப்பான காலம் இது. மேலும் 2015 உங்களுக்கு மிக அற்புதமாக இருக்கும். விருச்சிகம் இராசிபலன் 2015 இன் படி, சனியின் இருப்பிடம் சில சாகசங்களைக் கொண்டு வரும். அதைத் தவிர மற்ற எல்லா விஷயங்களும் சிறப்பாக உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, படுக்கை மட்டுமே உலகத்தில் அதிசயமான விஷயம் அல்ல, சில நேரங்களில் ஒரு சந்தோஷ உலா சென்று வருவதும் வாழ்க்கையில் முக்கியமான விஷயமே என்பதை மறந்துவிடாதீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். காதல் விஷயங்களுக்கு 2015 சாதகமான காலம் ஆகும். இது ஒரு மகிழ்ச்சியான விஷயம் தானே? இருப்பினும் சனி முதல் வீட்டில் இருப்பதால் திருமண வாழ்க்கையில் சில இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் காதல் தாகம் எடுப்பதும் அதற்காகக் காத்திருப்பதும் கூட நல்லதுதான். மேலும், இதனால் சில உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெரிய பிரச்சினைகள் எதுவும் வராது என்பதால் கவலை வேண்டாம். வேலையில் ஆதாயம் கிடைக்க ஏற்ற நேரம் இது. பணியே கதியென்று கிடப்பவர்களே, இது உங்களுக்கு மிக நல்ல நேரம். விருச்சிகம் இராசிபலன் 2015 இன் படி, உங்கள் நிதி நிலைமை சீராகும். நீங்கள் வாங்க நினைக்கும் பொருட்களைப் பட்டியலிடத் தொடங்குங்கள். அதே நேரத்தில், மாணவர்களுக்கு கடின உழைப்புக்குப் பிறகே தேர்வு முடிவுகள் எதிர்பார்த்த படி அமையும். ஆண்டின் இரண்டாம் பகுதியில் வணிகம் தொடர்பான கல்வி பயில்பவர்கள் சந்தோஷமடைவார்கள்.

விருச்சிக இராசிக்கு 2015 இல் பரிகாரம்: குரங்குகளுக்கு உணவு, நீர், பழங்கள் அளித்துச் சேவை செய்வது நல்லது. நீங்கள் மது அருந்துவது, மாமிச வகைகளை உண்பதைத் தவிர்க்கவும்.

தனுசுஇராசிபலன் 2015
(Dhanusu Rasi Palan 2015)

Dhanusu Rasiதனுசு இராசி அன்பர்களே, இந்த 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், வியாழன் எட்டாம் வீட்டில் இருப்பதால், அது உங்களுக்குச் சாதகமானதல்ல. பாதகம் என்றும் சொல்லிவிட முடியாது. மேலும் சனி பனிரண்டாவது வீட்டில், இருப்பதால், பண விஷயங்களை வெகு கவனத்துடன் கையாள வேண்டும். ஆனால், இதையெல்லாம் எப்படிச் சமாளிப்பதோ என்று பயப்படாதீர்கள். பண விஷயத்தில் ஏற்படக்கூடிய ஒரு சின்ன தொந்தரவு எப்படி எல்லா விதமான பிரச்சினைகளையும் கொண்டு வரக் கூடும் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருப்பதால், எந்த விதமான பிரச்சினையையும் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த முயற்சி செய்யுங்கள். தனுசு இராசிபலன் 2015 இன் படி, அமைதியும் சாந்தமும் மனதில் நிறைந்திருந்தால் மட்டுமே அப்படிச் செய்ய முடியும். தனுசு இராசிபலன் 2015 இன் படி, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளிலும் மாற்றத்தைக் காண்பீர்கள். அந்த மாற்றத்தினால் நீங்கள் மனம் வருத்தப்பட நேரும். வாழ்க்கையின் எல்லாக் கோணங்களிலிருந்தும் எதையும் எதிர்கொள்ளும் உறுதியை இந்த ஆண்டு முழுவதிலும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். ஒரு பாதுகாப்பற்ற உணர்வு உங்களுக்குள் எழும், அதனால் உங்கள் உடல் நலம் கூட பாதிக்கப் படும். தனுசு இராசிபலன் 2015 இன் படி, காதல் விஷயங்கள் திருப்திகரமாக இருக்காது. ஆனால், “எது நடந்தாலும் அது நன்மைக்கே” என்பதை மறந்து விடாதீர்கள். அதே நேரத்தில் 2015 ஆம் ஆண்டின் பின் பகுதியில், உங்கள் விருப்பங்கள் எல்லாமே நிறைவேறத் தொடங்கும். உங்கள் வாழ்க்கையில் இன்பம் மீண்டும் பொங்கத் தொடங்கும். வருவாய் உயரும். மாணவர்களுக்கு நல்ல தேர்வு முடிவுகள் கிட்டும். அடடா! இந்த ஆண்டு உண்மையிலேயே ஒரு சாதனைப் பயணம்தான்.

தனுசு இராசிக்கு 2015 இல் பரிகாரம்: ஒரு ஆலயத்துக்கு நெய் மற்றும் உருளைக்கிழங்கைத் தானமாகக் கொடுக்கவும்.

மகரம் இராசிபலன் 2015
(Magaram Rasi Palan 2015)

Magaram Rasiமகர இராசி அன்பர்களே, 2015 ஆம் ஆண்டின் முதல் பகுதி உங்களுக்கு அற்புதமானதாக இருக்கும். மகர இராசிபலன் 2015 இன் படி, உங்களுடைய தெளிவான திட்டமிடுதல் உங்களுக்குத் தொடர்ந்து வெற்றிகளை ஈட்டித் தரும். உங்கள் அறிவு விசாலமானது. எல்லா விஷயங்களும் உங்கள் விருப்பப்படியே நடக்கும். உங்கள் பணியிடத்தில் நல்ல சாதகமான சூழ்நிலை நிலவும். இது உங்களுக்குக் கொண்டாட்டமான காலமாக இருக்கும். நிதிநிலைமையும் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத வகையில் திடீரென பல ஆதாயங்கள் உங்களுக்கு வந்து சேரும். திருமண வயது வந்தவராக இருந்தால் 2015 ஆம் ஆண்டின் முதல் பகுதியில் திருமணத்திற்கு சாதகமான விஷயங்கள் கூடி வரும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைப்பதால் மாணவர்கள் சந்தோஷக் கடலில் குளிப்பார்கள். இருப்பினும், 2015 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் வாழ்க்கைப் பாதையில் சில இடையூறுகள் வரக்கூடும். அந்த நேரத்தில் வியாழன் கிரகம் உங்கள் எட்டாம் வீட்டில் இருக்கும். இதன் விளைவாக, நிதிப் பிரச்சினைகளும் அதனால் எல்லா விஷயங்களும் கைமீறிப் போய் விட்டது போன்ற உணர்வும் ஏற்படும். ஆகவே, நீங்கள் எதைச் செய்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். ஆனால், கவலைப் படாதீர்கள், கவலைக் கருமேகங்கள் சூழ்ந்தாலும் கலங்காத இதயமும், திறமையுடன் சமாளிக்கும் குணமும் உங்களுக்கு இருப்பதை நீங்களே உணர்வீர்கள். மகர இராசிபலன் 2015 இன் படி, நீங்கள் எந்த முதலீடு செய்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படவேண்டும்.

மகர இராசிக்கு 2015 இல் பரிகாரம்: ஓடும் நதிநீரில் 6 தேங்காய்களுடன் சேர்த்து கொஞ்சம் உமியையும் மிதக்க விடுவது நல்லது.

கும்பம் இராசிபலன் 2015
(Kumbam Rasi Palan 2015)

Kumbam Rasiகும்ப இராசி அன்பர்களே, 2015 உங்களுக்கு ஒரு கலவையான பலன்களைத் தரும் ஆண்டாக இருக்கும். கும்பம் இராசிபலன் 2015 இன் படி, உங்கள் காதல் துணையுடனான உறவுகள் முறியும் வாய்புகள் உள்ளன. ஆனாலும் அழுது தீர்க்காதீர்கள், எல்லாம் நடப்பது ஏதோ ஒரு நன்மையான காரணத்திற்காகத்தான். உங்கள் கடுமையான வார்த்தைப் பிரயோகம் இதற்குக் காரணமாக அமையக் கூடும். ஆகவே, முடிந்த வரை மரியாதையாக நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். குடும்ப உறுப்பினர் ஒருவரின் உடல்நலம் குறித்து உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். ஆனால், கவலைப்படத் தேவையில்லை, காலம் எல்லாவற்றையும் வெகுவிரைவில் மாற்றும். அதே நேரத்தில், கும்பம் இராசிபலன் 2015 இன் படி, உங்கள் உடல்நலம் சீராக இருக்கும். வழக்குகள் உங்களை அலைக்கழிக்கும். ஆனாலும், கவலைப்படாதீர்கள். உங்களுக்கே வெற்றி கிடைக்கும். ஆண்டின் இரண்டாம் பகுதியில் உங்கள் காதல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வாழ்க்கை மிகவும் இன்பமானதாக இருக்கும். மன்மதன் உங்களுடன் சாதகமாக இருப்பான். நீங்கள் சந்தோஷத்தின் உச்சத்தில் மிதப்பீர்கள். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இது ஒரு கொண்டாட்டமான காலம். வருமானமும் கல்வித் தகுதியும் உயரும். நீங்கள் மிகச் சிறந்த வெற்றியாளராக மாறும் தருணம் இது.

கும்பம் இராசிக்கு 2015 இல் பரிகாரம்: ஒரு பூசாரிக்கு மஞ்சள் நிற ஆடைகளைப் பரிசளியுங்கள்.

மீனம் இராசிபலன் 2015
(Meenam 2015 Rasi Palan)

Meenam 2015 Rasi மீன இராசி அன்பர்களே, 2015 உங்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக இருக்கப் போகிறது. மீனம் இராசிபலன் 2015 இன் படி, இல்லத்தில் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறும். சுபநிகழ்வுக் கொண்டாட்டங்களில் மகிழ்ந்திருக்கும் காலகட்டம் இது. இருப்பினும், குடும்ப உறுப்பினர்கள் சிலர் முரட்டுத்தனமாக நடந்து கொள்வது உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். ஆனால், அதையெல்லாம் உதாசீனப்படுத்தி விட்டுவிடுவதுதான் உங்களுக்கு நல்லது. கேதுவின் உச்சநிலையினால், உங்கள் உடல் நலத்தில் நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், உங்கள் உணவுப் பழக்கவழக்கத்தைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். இராசிபலன் 2015 இன் படி, நீங்கள் வாகனங்களை இயக்கும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. காதல் விஷயங்களுக்கு இது சாதகமான நேரம் என்றாலும், இராகு ஏழாம் வீட்டில் இருப்பதால் பெரிதான நன்மை எதுவும் ஏற்படாது. காதலும் விசுவாசமுமே எப்பொழுதும் எதிர்பார்க்கப்படும் விஷயம் ஆகும். உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முகத்தில் புன்னகை தவழும் காலகட்டம் இது. ஆனாலும், கடுமையான உழைப்பும் கூடுதல் பொறுப்புகளும் அதிகரிக்கும். ஆகவே, தயாராக இருங்கள். ஆதாயங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. இது இருமடங்கு கொண்டாட்ட நேரம் என்பதால் நிறைய நல்ல விஷயங்கள் உங்களைத் தேடிவரும். கல்விக்கு இது சாதகமான காலகட்டம். ஆனால், 2015 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் சில பிரச்சினைகள் எழக்கூடும்.

மீனம் இராசிக்கு 2015 இல் பரிகாரம்: ஒரு ஆலயத்தில் அரிசி, வெல்லம் மற்றும் பருப்பு ஆகியவற்றை தானமாகக் கொடுங்கள்.

-பண்டிதர். ஹனுமான் மிஷ்ரா

2015 Articles

Astrological services for accurate answers and better feature

33% off

Dhruv Astro Software - 1 Year

'Dhruv Astro Software' brings you the most advanced astrology software features, delivered from Cloud.

Brihat Horoscope
What will you get in 250+ pages Colored Brihat Horoscope.
Finance
Are money matters a reason for the dark-circles under your eyes?
Ask A Question
Is there any question or problem lingering.
Career / Job
Worried about your career? don't know what is.
AstroSage Year Book
AstroSage Yearbook is a channel to fulfill your dreams and destiny.
Career Counselling
The CogniAstro Career Counselling Report is the most comprehensive report available on this topic.

Astrological remedies to get rid of your problems

Red Coral / Moonga
(3 Carat)

Ward off evil spirits and strengthen Mars.

Gemstones
Buy Genuine Gemstones at Best Prices.
Yantras
Energised Yantras for You.
Rudraksha
Original Rudraksha to Bless Your Way.
Feng Shui
Bring Good Luck to your Place with Feng Shui.
Mala
Praise the Lord with Divine Energies of Mala.
Jadi (Tree Roots)
Keep Your Place Holy with Jadi.

Buy Brihat Horoscope

250+ pages @ Rs. 599/-

Brihat Horoscope

AstroSage on MobileAll Mobile Apps

AstroSage TVSubscribe

Buy Gemstones

Best quality gemstones with assurance of AstroSage.com

Buy Yantras

Take advantage of Yantra with assurance of AstroSage.com

Buy Feng Shui

Bring Good Luck to your Place with Feng Shui.from AstroSage.com

Buy Rudraksh

Best quality Rudraksh with assurance of AstroSage.com

Reports

Live Astrologers