We are back with Rasi Palan 2019, the accurate predictions for 2019 based on principles of Tamil Astrology. This 2019 horoscope in Tamil is prepared by experienced astrologers, who analyzed all zodiac signs to find out how this year is going to be for you. Check it out now:
2019 இல் உங்களது நட்சத்திரங்கள் என்ன பலனை தரப்போகின்றன? 2019 வருடாந்தர ராசி பலனை கொண்டு உங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்வீர்! வேதிக் ஜோசியத்தை அடிப்படையாக கொண்டு பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. உங்களது வாழ்வின் பல்வேறு அம்சங்களான பிசினஸ், செல்வம், கல்வி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பலன்களை அறிந்து கொள்வீர்.
குறிப்பு: இந்த பலன்களை சந்திரனை அடிப்படையாக கொண்டு கூறப்பட்டுள்ளன. சந்திரனை அடிப்படையாக கொண்ட உங்களது ராசி எதுவென்று உங்களுக்கு தெரியாவிட்டால், தயவுசெய்து இங்கு விசிட் செய்யவும்: சந்திரனை அடிப்படையாக கொண்ட ராசி கால்குலேட்டர் .
உங்களது தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல அதிர்ஷ்டம் உதவும். உங்களது பிராஜெக்ட்டுகளுக்காக வருட ஆரம்பம் முதலே கடினமாக உழைப்பீர்கள். அது எதிர்கால்த்தில் உங்களுக்கு கை கொடுக்கும். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வருட ஆரம்பத்தில் பொருளாதார நிலை உறுதியாக இருக்கும் ஆனால் செலவுகளும் ஏறியபடியே இருக்கும். திடீரென்று தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். அதை கட்டுப்படுத்தாவிட்டால், பொருளாதார நிலையில் சிக்கல் ஏற்படக் கூடும்.
மேஷ ராசிக்காரர்களுக்கு 2019 வருட நடுவில் (ஜூன்-ஜூலை), பிசினஸ் சூடு பிடிக்கும், இதனால் உங்களது பொருளாதார நிலை உயரும். காதல் வாழ்வில் பெரிதாக மாற்றம் இருக்காது. உறவினை வலுப்படுத்த, காதலில் ஒளிவு மறைவு இருக்க கூடாது.
வருடம் முழுவதும் வேலையில் கவனமாக இருப்பீர்கள். மேலும் கடினமாக உழைத்து உங்களது வேலையில் தனித்துவமான இடத்தை பிடிப்பீர்கள். பொருளாதார நிலை எப்போதையும் விட சிறப்பாகவே இருக்கும். உங்களது பொருளாதார நிலை உயர்ந்தாலும், செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புண்டு. வீண் செலவுகளை குறைக்காவிட்டால் உங்களது தற்போதைய பொருளாதார நிலை பாதிப்படைய கூடும்.
உங்களது வருமானம் இந்த வருடம் உயர வாய்ப்புள்ளது. எனவே உங்களது பொருளாதார நிலை உறுதியாக இருக்க்கும். இந்த சூழல் வருடம் முழுக்க தொடரும்.
வேலையில் முன்னேற்றம் பெற, நீங்கள் புதிய யோசனைகளை உருவாக்க வேண்டும். உங்களது சீனியர் பணியாளரின் ஆலோசனைப்படி நடப்பது சாதமாக அமையும். 2019 பலனின் படி, பொருளாதார ரீதியாக லாபங்கள் பெற நல்ல வாய்ப்புகள் உள்ளன. பிசினசில் புதிய ஐடியாக்களை செயல்படுத்துதல் லாபம் தரும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். எனினும் உங்களது பிசினசை விரிவுபடுத்த, வீட்டை விட்டு தொலை தூரம் செல்ல வேண்டியிருக்கலாம்.
அதே நேரத்தில், நீங்கள் புதிய பிசினஸ் தொடங்கவோ அல்லது பிசினசை விரிவுபடுத்தும் சூழலோ ஏற்படலாம். இப்போது உங்களது பொருளாதார நிலை பற்றி பார்ப்போம். இந்த வருடம் உங்களது பொருளாதார நிலை சீராக இருக்கும். வருடம் முழுவதும் பண வரவுகள் இருக்கும். 2019 ராசிபலனின் படி மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பண நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில், வருவாயில் உயர்வு மற்றும் பொருளாதார ரீதியாக லாபங்கள் அதிகரித்து உங்களது அந்தஸ்த்தை உயர்த்தும். பொருள் வரவுடன், சில பண இழப்புகளும் இவ்வருடம் ஏற்ப்படக் கூடும். எனவே பிப்ரவரி முதல் மார்ச் மாதத்துக்குள் பணத்தை சாமர்த்தியமாக முதலீடு செய்யவும்.
உங்களது நேர்மையான குணம் பணியிடத்தில் உங்களது நிலையை உயர்த்தும். புதிய ஆபீசில் பணி புரியும் வாய்ப்பு கிடைக்க கூடும். 2019 ஆம் ஆண்டு ஆரம்பத்தில், வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இவ்வருடம், நீங்கள் பொருளாதார ரீதியாக சில சவால்களை சந்திக்க கூடும். ஆனால் அதையும் மீறி நீங்கள் சாதகமான பலனை அடைவீர்கள். பண வரவு சீராக இருக்கும். ஜனவரி தவிர பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பண விரயங்கள் ஏற்படலாம்.
2019 ஆம் ஆண்டு ராசிபலனின் படி, இந்த வருடம் காதல் வாழ்வில் சில சோதனைகள் ஏற்படலாம். துணையுடன் வாக்குவாதம் அல்லது கருத்து மோதல் ஏற்பட்டு அதனால் உங்கள் காதல் வாழ்வில் கசப்பு தோன்றக்கூடும்.
கன்னி ராசிக்காரர்கள் தங்களது பேச்சு திறனால் வெற்றியை ருசிப்பார்கள். உங்களது பொருளாதார நிலை எப்போதையும் விட சிறப்பாகவே இருக்கும். அதை நீங்கள் வருட ஆரம்பம் முதலே கவனிக்க தொடங்குவீர்கள். ஜனவரி, பிப்ரவரி, மற்றும் மார்ச் மாதங்களில் பல வழிகளிலும் பணவரவுகள் இருக்கும். அதே நேரத்தில் செலவுகளும் அதிகரிக்கும். எனினும் நிலைமை உங்களது கட்டுப்பாட்டுக்குள்ளே தான் இருக்கும். 2019 ஆம் ஆண்டில் உங்களது காதல் வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். 2019 ராசிபலனின் படி காதல் வாழ்வில் சில சவால்களை சந்திப்பீர்கள். பிசினஸ் அல்லது வேலை காரணமாக வீட்டை விட்டு தொலை தூர பயணம் செய்வீர்கள்.
பொருளாதார ரீதியாக அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும் இதனால் உங்களது நிலை உயரும். 2019 ஆம் ஆண்டு ராசிபலனின் படி, புதிய நபருடன் உறவு முறை ஏற்படலாம். வாழ்க்கை துணையுடனான உறவு பலப்படும். அவருடன் சுற்றுலா செல்லும் வாய்ப்புகளும் அமையும். இனிமையாக பொழுதை கழிக்க நீங்கள் இருவரும் வெளியூர்களுக்கு சென்று வருவீர்கள்.
எனினும், சில சூழ்நிலைகளில் ஏமாற்றம் ஏற்படலாம். ஆயினும் வீட்டில் நிலவும் அமைதியும் மகிழ்ச்சியும் உங்களுக்கு நிம்மதியை தரும், வருட நடுவில், ஒரு மகிழ்ச்சியான செய்தி உங்களை நாடி வரும். அந்த வேளையில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்
2019 இல் உங்களது வேலையில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். தங்கமான வாய்ப்புகள் பல உங்களது வாசல் கதவை தட்டும். நல்ல கம்பெனியில் இருந்து வேலை வாய்ப்பு வரும். வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். உங்களது பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். பணவரவு மற்றும் செலவுக்கு இடையே மாறுதல்களை காண்பீர்கள். எனவே அதனை சரியாக கையாள வேண்டும். காதல் வாழ்வில் சாதகமான சூழல் இருக்கும். மனதுக்கினிய நபருடன் ரொமான்ஸ் செய்து மகிழ்வீர்கள் இதனால் உங்களது உறவு பலப்படும்.
2019 ஆம் ஆண்டு ராசிபலனின் படி, உங்களது குடும்பம் உங்களது பொருளாதார நிலை உயர காரணமாக இருக்கும். ஏதேனும் தொழில் தொடங்கினால், லாபகரமாக அமையும். காதல் வாழ்வில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கை துணையுடன் கருத்து வேற்பாடு தோன்றினால் அதனை பெரிதுபடுத்தாமல் சமாதானமாக சென்று விடவும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை சீராக இருந்து வரும். பெற்றோர்களுக்கு சிறு சிறு உடல் பாதிப்புகள் தோன்றி மறையலாம்.
இந்த வருடம் பல பொருள் வரவுகளை கொடுக்கும். உங்களது பொருளாதார நிலையை அது உறுதியாக்கும். வருடம் முழுவதும் சொத்துக்களை வாங்கி சேர்ப்பீர்கள். பணம் பல வழிகளிலும் வந்து குவியும், இதனால் உற்சாகமாக வளைய வருவீர்கள். இந்த வருடம் உங்கள் காதல் வாழ்வு எப்போதையும் விட அமோகமாக இருக்கும்.
2019 ராசிபலனின் படி, வருட ஆரம்பம் அதாவது மார்ச் வரை சிறிது தொய்வாக இருக்கும். ஏற்றத்தாழ்வுகளை அந்த காலகட்டத்தில் சந்திப்பீர்கள். எனினும் இந்த காலகட்டத்தில் உங்களது மனதுக்கினிய நபரின் நம்பிக்கை உகந்தவாறு நடந்து கொள்ளுங்கள். அவர்களது நம்பிக்கையை உடைத்து அவர்களின் அன்பை இழக்காதீர்கள்.
காலையில் சீக்கிரம் எழுந்து கொள்ளுதல் மற்றும் இரவில் சரியான நேரத்துக்கு உறங்க செல்லுதல் ஆகியவற்றை கடைபிடித்தல் அவசியம். போதிய உறக்கம் உடலை ஆரோக்கியமாக வைக்கும் என்பதை நீங்கள் உணர வேண்டும். மனதை நிலைப்படுத்த தியானம் செய்யலாம். மனதளவிலும் உடல் அளவிலும் ஃபிட்டாக இருந்தால் இந்த வருடம் உங்களது தொழிலில் பெரும் முன்னேற்ற காணலாம். பணியிடத்தில் உங்களுக்கென ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொள்வீர்கள்..
கடின உழைப்பு, அர்பணிப்பு மற்றும் நேர்மையான பணியாளராக மற்றவரால் மதிக்கப்படுவீர்கள். 2019 ஆம் வருட ராசிபலனின் படி, உங்களது பொருளாதாரத்தில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள் எனவே சரியான திட்டமிடல் அவசியம். ஆபத்தான முடிவுகளை எடுக்கும் முன் நன்றாக சிந்திப்பது அவசியம். இல்லையென்றால், பொருள் இழப்புகள் நேரலாம். உங்களது காதல் வாழ்வில் சில குழப்பங்கள் தோன்றலாம். உங்களது ரொமான்டிக் வாழ்க்கையை பற்றிய சில சந்தேகங்கள் உங்கள் மனதில் ஏற்படக் கூடும். ஒரு குறிப்பிட்ட பிரச்சினையால் உங்கள் வாழ்க்கை துணையுடன் சூடான விவாதம் ஏற்படக் கூடும்.