புனர்பூசம் நட்சத்திர பலன்கள்
நேர்மையான, திருப்தியான மற்றும் நிறைவான குணம் கொண்டவர் நீங்கள். உங்களை பற்ரி சுறுக்கமாக சொலவதென்றால் “எளிமையான வாழ்வு மற்ரும் உயர்வான சிந்தனை” என கூறலாம். கடவுள் பக்தி, பழமையான விஷயங்களில் நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தை கடைபிடிக்க விரும்புவீர்கள். பணத்தை சேமித்தல் உங்களால் இயலாத விஷயம். ஆனால் வாழ்கையில் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். உங்களது ஒளிவு மறைவற்ற வெளிப்படையான குணம் உங்களை மற்றவர்கள் மத்தியில் பிரபலமாக்கும். ஏழ எளியவர்களுக்கு எப்போதும் உதவுவீர்கள். உங்களது ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடை ஏற்படுத்தும் என்பதால் முறையற்ற நியாயம் இல்லாத செயல்களுக்கு எப்போதும் துணை போக மாட்டீர்கள்.எதிர் மறையான எண்ணங்களில் இருந்து தள்ளியே இருப்பீர்கள். மற்றவர்களை சமாதானப்படுத்துவதும் அமைதியடைய செய்வதும் உங்களது சிறப்பான குணம். உங்களது சாதுவான குணம், கருணை மற்ரும் அன்பான செயல்கள் உங்களது தோற்ற அழகை மேலும் அதிகரிக்கும். அமைதியான, உண்மையான நேர்மையை விரும்பும் கட்டுப்பாடான குணம் மற்றவர்களை கவரும். மற்றவர்களி கையாளுதல் மற்றும் நட்பு பாராட்டுதல் போன்ற குணங்கள் உங்களுக்கு புகழை சம்பாதித்து தரும். ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதற்காக தேவையற்ற ஆபத்துகளை சந்திக்கமாட்டீர்கள். கடவுளின் அருளால் அது தானாகவே விலகிவிடும். உங்களது குடும்பத்தை மிகவும் நேசிப்பீர்கள். சமுதாய நலனுக்காக அதிக பிரயாணம் செய்வீர்கள். வில்லாளி தனது குறிக்கோளை நோக்கி தனது முழு கவனத்தையும் செலுத்துவது போல உங்களது குறிக்கோளின் மேல் முழு கவனம் செலுத்துவீர்கள். முயற்சிகளில் தோவியடையாமல் மேலும் முயன்று வெற்றி காண்பீர்கள். பன்முக திறன் கொண்ட நீங்கள் எதையும் சரியாக செய்து முடிப்பீர்கள். உங்களது பெற்றோரையும் பெரியோகளையும் முகவும் மதிப்பீர்கள். அமைதியை விரும்புபவராகவும், யதார்த்தமாக எதையும் நேர்மையுடன் அணுகுபவராகவும் இருப்பீர்கள். உங்களது குழந்தைகளும் அனைவருடனும் நன்றாக பழகுவார்கள்.
கல்வி மற்றும் வருமானம்
ஆசிரியர், எழுத்தாளர், நடிகர், மருத்துவர் போன்ர துறைகளில் ஈடுபட்டு புகழடைவீர்கள். எழுத்து, ஜோதிடம், இலக்கணம், யோகா ஆசிரியர், பயணம் மற்றும் டூரிசம் பிரிவுகளில்,ஹோட்டல்-ரெஸ்டாரன்ட் தொடர்பான பணிகள், மத போதகர், பண்டிதர், வெளிநாட்டு வாணிபம், புராதான பொருட்கள் விற்பனை, போஸ்டல் மற்றும் கூரியர் சேவைகள, சமூக சேவை போன்ற துறைகள் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.
இல்லற வாழ்க்கை
பெற்றோருக்கும் ஆசியருக்கும் மதிப்பு கொடுத்து நடப்பீர்கள்.உங்களது திருமண வாழ்வில் சில சிக்கல்கள் தோன்றலாம். எனவே உங்களது வாழக்கை துணையுடன் ஒத்துப்போவது நல்லது. மனதளவில் அல்லது உடல் நலனில் சில பிரச்சினைகளை உங்களது வாழ்க்கை துணை சந்திக்ககூடும். ஆனால் அவர் திறமையானவராகவும் மனம் மயக்கும் தோற்றம் கொண்டவராகவும் இருக்கலாம். உங்களது வாழ்க்கை துணையும் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடப்பவராக இருப்பார். அவர் குடும்பத்தையும் குழந்தைகளையும் சிறப்பாக கவனித்து கொள்வார்.
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems









