Palli Vilum Palan - பல்லி விழும் பலன்
Palli Vilum Palan (பல்லி விழும் பலன்), பண்டைய காலத்தில் பல்லியை பற்றி ஒரு தனி படிப்பே இருந்தது. அதுதான் கௌரி சாஸ்திரம். பொதுவாக பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிக்கிறது. கேது என்பது ஸ்வரபானு என்கிற அசுரனின் உடலாகும். கடவுள் மனிதர்களுடன் உரையாட வேண்டும் என்பதற்காக சில வழிகளை ஏற்படுத்தியுள்ளனர். அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது பல்லி.
நமது முன்னோர்கள் மற்றும் கடவுள் நமது இல்லத்தில் பல்லியின் உருவில் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர். Palli Vilum Palan (பல்லி விழும் பலன்) முன்னொரு காலத்தில் நமது வீட்டில் ஒரு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் பொழுது நல்லது, கெட்டது என்று பல்லி எச்சரிக்கும். உடலில் எந்த பாகங்களில் பல்லி விழுந்தால் என்ன பலன் என்பதை கூட சாஸ்திரங்கள் கணித்துள்ளது.
Palli Vilum Palan (பல்லி விழும் பலன்), சாஸ்திரங்களில் பல்லி கடவுளின் தூதர் என்றும் செய்தியாளர் என்றும் கூறப்படுகிறது. ஒரு சில கோயில்களில் பல்லி உருவங்கள் வைக்கப்பட்டு, அது வணங்கப்பட்டு வருகின்றது. காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலிலும் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலிலும் பல்லியின் உருவங்கள் இடம்பெற்றுள்ளது. மேற்கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் இந்தப் பல்லி உருவம் இடம் பெற்றுள்ளது. இதை மக்கள் தொட்டு வணங்கி வருகின்றனர்.
பல்லி விழும் பலன்கள்
உறுப்பு (Body Parts) |
வலது பக்கம் (Right Side) |
இடது பக்கம் (Left Side) |
தலை |
கலகம் |
துன்பம் |
வயிறு |
தானியம் |
மகிழ்ச்சி |
காது |
ஆயுள் |
லாபம் |
கண் |
சுகம் |
சிறை பயம் |
கை |
துக்கம் |
துன்பம் |
கைவிரல் |
சன்மானம் |
சஞ்சலம் |
கை நகம் |
செலவு |
நஷ்டம் |
நெற்றி |
லட்சுமிகரம் |
காரியசித்தி |
மூக்கு |
வியாதி |
கவலை |
கழுத்து |
பகை |
வெற்றி |
உதடு |
கஷ்டம் |
வரவு |
பாதம் |
நோய் |
துக்கம் |
பாத விரல் |
ராஜ பயம் |
நோய் |
முழங்கால் |
நஷ்டம் |
பந்தயம் |
மணிக்கட்டு |
பீடை |
கீர்த்தி |
தோள்பட்டை |
வெற்றி |
போகம் |
பிருஷ்டம் |
சுகம் |
செல்வம் |
கபாலம் |
கதனம் |
வரவு |
தொடை |
துக்கம் |
சஞ்சலம் |
கணைக்கால் |
பிரயாணம் |
சுகம் |
மார்பு |
தனலாபம் |
சுகம் |
விலா |
வாழ்வு |
தாழ்வு |
முதுகு |
நஷ்டம் |
கவலை |
தலையில் பல்லி விழுவதினால் ஏற்படும் பலன்
தலையில் பல்லி விழுவது அபசகுனம். குடும்பத்தில் சண்டை, கலகம் போன்றவைகள் ஏற்படும். அன்றைய தினத்தில் கவனமாக இருப்பது நல்லது. தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். அவரின் உறவினரோ அல்லது தெரிந்தவரோ மரணம் ஏற்படலாம். இதனால் மன நிம்மதியை இழப்பார். இது போன்ற கெட்ட சகுணத்தை உணர்த்தும்.
நெற்றியில் பல்லி விழுவதினால் ஏற்படும் பலன்
நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுணமாக பார்க்கப்படுகின்றது. Palli Vilum Palan (பல்லி விழும் பலன்), நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் கீர்த்தி கிட்டும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் லக்ஷ்மி கடாசம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
தலை முடியில் பல்லி விழுவதினால் ஏற்படும் பலன்
பல்லி தலையில் விழாமல், தலை முடியில் பட்டு விழுவதால், ஏதேனும் ஒரு வகையில் நன்மை நிகழும் என கூறப்படுகின்றது. இதனால் சுகம், பட்டாபிஷேகம், லாபம் போன்ற நல்ல பலன்கள் ஏற்படும்.
முகத்தில் பல்லி விழுவதினால் ஏற்படும் பலன்
முகத்தில் பல்லி விழுந்தால், அவர்கள் வீட்டிற்கு உறவினர்களின் வருகை இருக்கும் என அர்த்தமாகும்.
புருவத்தில் பல்லி விழுவதினால் ஏற்படும் பலன்
புருவத்தில் பல்லி விழுந்தால், ராஜ பதவி எனும் உயர்பதவியில் உள்ளவர்களிடமிருந்து உதவி கிடைக்கும். அதுவே கண்கள் அல்லது கண்ணங்களின் மீது பல்லி விழுந்தால் அபசகுனம். இதனால் பிள்ளைகளுக்கு பிரச்சனை, வியாதி, கண்டம் போன்ற தீய பலன்கள் ஏற்படக்கூடும்.
இடது கை மற்றும் காலில் பல்லி விழுவதினால் ஏற்படும் பலன்
Palli Vilum Palan (பல்லி விழும் பலன்), உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும்.
வலது கை மற்றும் காலில் பல்லி விழுவதினால் ஏற்படும் பலன்
உடலின் வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய தினம் உடல் நல பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
பாதத்தில் பல்லி விழுவதினால் ஏற்படும் பலன்
பாதத்தில் பல்லி விழுந்தால், வரும் காலத்தில், நீங்கள் வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
தொப்புள் பகுதியில் பல்லி விழுவதினால் ஏற்படும் பலன்
தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால், மிகவும் விலை மதிப்பு மிக்க பொருட்களான தங்கம், வைரம், விடூரியம், இரத்தினம் போன்ற பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்க.
தொடையில் பல்லி விழுவதினால் ஏற்படும் பலன்
Palli Vilum Palan (பல்லி விழும் பலன்), தொடைப்பகுதியில் பல்லி விழுந்தால், அவர்களுடைய பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் செயலை செய்வீர்கள்.
மார்பு மீது பல்லி விழுவதினால் ஏற்படும் பலன்
வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கும். இடது மார்பின் மீது பல்லி விழுந்தால் சுகம் கிடைக்கும்.
கழுத்தில் பல்லி விழுவதினால் ஏற்படும் பலன்
இடது பக்க கழுத்துப் பகுதியில் பல்லி விழுந்தால் காரிய வெற்றி உண்டாகும். Palli Vilum Palan (பல்லி விழும் பலன்), வலது கழுத்தில் பல்லி விழுந்தால் அடுத்தவருடன் பகை உண்டாகும்.
பத்து திக்கில் பல்லி சொல்லுக்குப் பலன்
ஒவ்வொரு திசையிலும் பல்லி ஏற்படுத்தும் சத்தத்தை வைத்து நமது பண்டைய கால ஜோதிடர்கள் நல்ல மற்றும் தீய பலன்கள் என்னென்ன என்பதை கணித்து வைத்துள்ளார்கள்.
கிழக்கு திசை: வீட்டின் கிழக்கு திசையில் பல்லி சத்தம் போட்டால் ராகு கிரகத்தின் தன்மை என்று பொருள். இது வீட்டிற்கு நல்லதல்ல. இதனால் நம் மனதில் பயம், கெட்ட செய்திகள் வரக்கூடும்.
தென்கிழக்கு திசை: தென்கிழக்கு திசையில் பல்லி சத்தம் போட்டால் வீட்டில் ஏதாவது பிரச்சனை அல்லது கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு சில நாட்களில் கெட்ட செய்திகள் வரலாம்.
வடக்கு திசை: பல்லி சத்தம் போட்டால் சுப காரியங்கள் நடக்கும். உங்களது வீட்டிற்கு நல்ல செய்திகள் வரும்.
தென்மேற்கு திசை: தென்மேற்கு திசையில் பல்லி சத்தம் போட்டால் விருந்தினர்கள் வருவார்கள். உங்களுக்கு லாபம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
பல்லி விழும்போது செய்ய வேண்டிய பரிகாரம்
பல்லி விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் இருப்பதாக பண்டைக்கால சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தோஷமுள்ள இடங்களில் பல்லி விழுந்தால் உடனே தலைக்கு குளித்துவிட்டு உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள்.
உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற கோவில்களில் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபடுங்கள். அப்படி கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் தங்களின் வீட்டின் பூஜை அறையிலேயே மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.
உங்கள் இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிப்பது நன்மை பயக்கும். உங்களால் முடிந்தால் காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலுக்கு அல்லது திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு சென்று பல்லியை வழிபாடு செய்யலாம்.
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறோம். ஆஸ்ட்ரோசேஜ் உடன் இணைந்ததற்கு மிக்க நன்றி.
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems
AstroSage on MobileAll Mobile Apps
AstroSage TVSubscribe
- Horoscope 2025
- Rashifal 2025
- Calendar 2025
- Chinese Horoscope 2025
- Saturn Transit 2025
- Jupiter Transit 2025
- Rahu Transit 2025
- Ketu Transit 2025
- Ascendant Horoscope 2025
- Lal Kitab 2025
- Shubh Muhurat 2025
- Hindu Holidays 2025
- Public Holidays 2025
- ராசி பலன் 2025
- రాశిఫలాలు 2025
- ರಾಶಿಭವಿಷ್ಯ 2025
- ਰਾਸ਼ੀਫਲ 2025
- ରାଶିଫଳ 2025
- രാശിഫലം 2025
- રાશિફળ 2025
- రాశిఫలాలు 2025
- রাশিফল 2025 (Rashifol 2025)
- Astrology 2025