Talk To Astrologers

விசாகம் நட்சத்திர பலன்கள்

The symbol of vishakha Nakshatra உங்களை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் “கொள்கைவாதி” எனலாம். நீங்கள் விரும்பியதை அடைய அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். எனவே உங்களது நோக்கம் என்னவென்பதை நீங்கள் தெளிவாக முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு அதனை அடைய உங்களது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எப்போதும் எதாவது வேலை செய்து கொண்டிருப்பதை விரும்புவீர்கள். வாழக்கையில் அத்தனை வசதிகளையும் பெற விரும்பும் நீங்கள், காதல் மற்றும் வசதி வாய்ப்புகளை கொண்டாடும் குணம் கொண்டவர். மற்றும் அவற்றை உங்களது வாழ்வின் பகுதிகளாகவே நினைப்பவர் ஆவீர்கள். லட்சணமான தோற்றமும் அழகான கண்களும் கொண்டவர் நீங்கள். பணிவான, கலகலப்பான குணம் கொண்ட நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவீர்கள். இனிமையான பேச்சு கொண்ட உங்களுக்கு யாரிடமும் கடினமாக பேசுதல் பிடிக்காது. படிப்பை பொறுத்தவரை, சிறப்பாகவே இருக்கும். குருவின் அருளால் சிறு வயது முதலே அறிவுத்திறனை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். படிப்பில் கெட்டிக்காரரான நீங்கள் உயர் கல்வி பெறுவீர்கள். உடல் நோக கடினமாக உழைக்க விரும்பமாட்டீர்கள். எனினும் உங்களது புத்தியை பயன்படுத்தி வேலையை முடிப்பீர்கள். அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணம் கொண்டவர் ஆதலால் உங்களுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பர். மற்றவர்களிடம் நேசத்துடனும்,மரியாதையுடனும் பழகுவீர்கள். உங்களது உதவி ஒருவருக்கு தேவைப்பட்டால் தயங்காமல் சென்று உதவுவீர்கள். இதனால் மக்கள் உங்களது உதவியை நாடி வருவார்கள். தொண்டு நிறுவன்ங்களுடன் தொடர்பு கொண்டிருப்பீர்கள். பழைமையான மற்றும் பழங்கால சிந்தனைகளுக்கு மதிப்பளிக்க மாட்டீர்கள். உங்களை சேர்ந்தவர்கள் யாருக்கும் எந்த கெடுதலும் நேர்வதை சகிக்கமாட்டீர்கள். கணீரென்ற உங்களது குரல் அனைவரையும் கவரும். எனவே நீங்கள் அரசியலில் ஈடுபட்டால் சமுதாயத்துக்கு பல நல்ல விஷயங்களை செய்யலாம். பணம் சம்பாதிக்க சொந்த தொழில் செய்வதை விட மிறுவனத்தில் வேலை செய்வதையே விரும்புவீர்கள். அரசு வேலை கிடைக்க கடின முயற்சி செய்வீர்கள். பிசினஸ் செய்பவராக இருந்தாலும் ஏதேனும் ஒரு வித்த்தில் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டிருப்பீர்கள். பொருளாதார னிலை சீராக இருக்கும். எதிர்பாராத பணவரவுகள் இருக்கும். பணத்தை சேமிக்க உங்களுக்கு பிடிக்கும் என்பதால் அதிக பொருளாதார சிக்கல்களை சந்திக்க மாட்டீர்கள். அப்படியே சந்தித்தாலும் அது தற்காலிகமானதாகவே இருக்கும்.

கல்வி மற்றும் வருமானம்

கல்வி மற்றும் வருமானம்: எல்லா விஷயத்திலும் தனித்துவமாக வெற்றி பெற நீங்கள் விரும்புவீர்கள். உங்களுக்கு சாதகமான தொழில்கள் ஃபேஷன் டிசைனிங், மாடலிங், மேடை பர்ஃபார்மர், ரேடியோ மற்றும் டீவி, அரசியல், ராணுவம், நடனம், ஆடை வடிவமைப்பு, பாதுகாப்பு படை, பாதுகாவலர் ஆகியவை.

இல்லற வாழ்க்கை

உங்களது வாழ்க்கை துணையையும் குழந்தைகளையும் அதிகம் நேசிப்பீர்கள். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தை பொறுத்த மட்டில் கூட்டு குடும்பமாக வாழவதையே நீங்கள் விரும்புவீர்கள். குடும்பத்துடன் ஒட்டுதல் அதிகம் என்பதால் உங்களது குடும்பத்தை எப்படி கவனிக்க வேண்டும் என உங்களுக்கு நன்றாக தெரியும்.

Call NowTalk to Astrologer Chat NowChat with Astrologer