Talk To Astrologers

உத்திரட்டாதி நட்சத்திர பலன்கள்

The symbol of uttara-bhadrapada Nakshatra காந்தம் போன்ற கவர்ச்சியான தோற்றம் கொண்டிருப்பீர்கள். உங்களது முகத்தில் எப்போதும் புன்னகை தவழும். அதற்கு மயங்காதவரே இருக்கமாட்டார்கள். அறிவாளியாகவும் நியாயவாதியாகவும் இருப்பீர்கள்., யாருக்காகவும் உங்களது குணத்தை மாற்றிக்கொள்ளாமல் பாரபட்சமின்றி நடப்பீர்கள். யாஅரையும் காயப்படுத்த விரும்பமாட்டீர்கள். அதே நேரத்தில் யாரும் கஷடப்படுவதையும் உங்களால் தாங்க முடியாது. உங்களது கோபத்தை கட்டுப்படுத்தி கொள்வது அவசியம். ஆனால் அதிக நேரம் உங்கள் கோபம் நீடிக்காது.மென்மையான குணமும் தூய்மையான மனமும் கொண்டவர் நீங்கள். இனிமையான குரலால் பேசி உங்களது எதிருகளையும் வசப்படுத்தி விடுவீர்கள். ஒரே நேரத்தில் பல விஷயங்களையும் கற்று நிபுணராகும் சிறப்பு திறன் கொண்டிருப்பீர்கள். அதிக கல்வி பெறாவிட்டாலும் உங்களது அறிவு அறிஞர்களுக்கு ஒப்பாக இருக்கும். நுண் கலைகள் மற்றும் பல்வேறு புத்தகங்களை எழுதும் திறன் பெற்றவர் நீங்கள். உங்களது சிறந்த திறமைகளால் எல்லா துறைகளிலும் புகழடைவீர்கள். சோம்பேறித்தனத்துக்கு இடம் கொடுக்கவே மாட்டீர்கள். தோல்விகளை கண்டு துவள மாட்டீர்கள். நிகழ்காலத்தை மட்டுமே நம்புவீர்கள். எதிர்காலத்தை எண்ணி ஆகாய கோட்டைகள் கட்ட மாட்டீர்கள். உங்களது வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். ஏழை எளியவர்களுக்கு உடஹ்வும் குணம் கொண்டிருப்பீர்கள். சமயம் சார்ந்த பாணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வேலை பிசினஸ் எதுவாக இருந்தாலும் அதில் சிறந்து விளங்குவீர்கள். கடின உழைப்பே உங்களது வெற்றிக்கு காரணமாகும். அறிவியல், தத்துவம், போன்ரவற்றில் ஆர்வம் இருக்கும். அதில் அறிஞராக விளங்குவீர்கள். தியாக குணம் பொருந்திய நீங்கள் தாராளமாக நங்கொடைகளை வழங்குவீர்கள். உங்களது நற்குணங்களால் சமுதாயத்தில் நல்ல மரியாதையை பெறுவீர்கள். உங்களது வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்.

கல்வி மற்றும் வருமானம்

கல்வி சிறப்பாக பெறுவீர்கள். பல்வேறு துரைகளில் ஞானம் பெற்றிருப்பீர்கள். உங்களுக்கு சாதகமான தொழில்கள் தியானம் மற்றும் யோகா நுபுணர், மருத்துவ நிபுணர், கவுன்சிலர், ஆன்மீக குரு, யோகி, தொண்டு நிறுவன பணிகள், ஆராய்சியாளர், தத்துவவாதி, கவிஞர், எழுத்தாளர், இசை கலைஞர், அரசு பணியாளர், வரலாற்று ஆசிரியர், பாதுகாப்பு பணியாளர் ஆகியவை.

இல்லற வாழ்க்கை

உங்களது பிறந்த ஊரிலிருந்து தள்ளி வசிப்பீர்கள். பெரும்பாலும் உங்களது தந்தையால் லாபம் இருக்காது. அவர் அலட்சியம் செய்ய நேரலாம். உங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். உங்களது வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி கிட்டும். பிள்ளைகளும் மகிழ்சியை அளிப்பார்கள். அவர்களே உங்களது சிறந்த சொத்துக்கள் எனலாம். கீழ்படிந்தவர்களாக புத்திசாலிகளாக மரியாதை தருபவர்களாக அவர்கள் இருப்பர். திருமணம் ஆன பிறகு உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

Call NowTalk to Astrologer Chat NowChat with Astrologer