Talk To Astrologers

உத்திராடம் நட்சத்திர பலன்கள்

The symbol of uttaraashadha Nakshatra பண்பாட்டுடன் தூய்மையான மனதும் மென்மையாக பேசும் குணமும் கொண்டிருப்பீர்கள். உங்களது முகம் கள்ளம் கபடமின்றி இருக்கும். உங்களது பொது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதிகா ஆடம்பரத்தை விரும்பமாட்டீர்கள். ஆடைகளை பொறுத்தவரையில், மிக எளிமையான ஆடைகளையே அணிவீர்கள். ஆன்மீகத்தில் நம்பிக்கையும் மற்றவரை மதிக்கும் குணமும் கொண்டிருப்பீர்கள். மர்மமான குணங்களை கொண்டிருப்பதால் உங்களை ஒரே சந்திப்பில் மதிப்பிட முடியாது. கண்கள் ஒளியுடன் காணப்படும் முகத்தில் ஒரு மச்சம் இருக்கும். எந்த செயலையும் நேர்மையாகவும் தெளிவாக சிந்தித்தும் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களை தாழவாகவோ எண்ணவோ அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தவோ விரும்பமாட்டீர்கள். தூய்மையான இதயம் கொண்ட்தால் சில சிக்கல்களுக்கு ஆளாக கூடும். யாரையும் எளிதாக நம்பிவிட மாட்டீர்கள். ஆனால் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டீர்கள். எளிமையான வாழ்க்கையை விரும்புவதுடன் எந்த முடிவினையும் அவசரப்பட்டு எடுக்க மாட்டீர்கள். நம்பிக்கைகுரியவர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுப்பீர்கள். யாரிடமாவது கோபமாக இருந்தால் கடுமையாஅக வார்த்தைகளை உபயோகப்படுத்த மாட்டீர்கள். உங்களது எதிரிகளையும் திட்டமாட்டீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் இருக்கும். ஜபம், தவம், விரதம் ஆகியவை உங்களுக்கு வெற்றியை தரும். ஆன்மீகப்பாதையில் நீங்கள் நடக்க தொடங்கிவிட்டால் சொந்த பந்தம், சொத்து சுகம் ஆகியவற்றில் பற்றில்லாத நிலையை அடைவீர்கள். கல்வியோ வேலையோ எதுவாக இருந்தாலும் அனைவரையும் நீங்கள் பின்னுக்கு தள்ளிவிடுவீர்கள். சிறு வயது முதலே குடும்ப பொறுப்புகளை சுமக்க தொடங்கிவிடுவீர்கள். எனினும் சிறு வயதை மகிழ்ச்சியாகவே கழித்திருப்பீர்கள். எந்த விஷயத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பார்ட்னர்ஷிப் போன்ரவற்றில் ஈடுபடும் முன்னரந்த நபரை பற்றி முழுக்க அறிந்து கொள்வது நல்லது. இல்லயென்றால் சில சிக்கல்களை சந்திக்க கூடும். 38 வயதுக்கு பிறகு செல்லும் இடமெங்கும் வெற்றி பெறுவீர்கள். உங்களது வாழ்க்கை துணை பொறுப்பானவராகவும் அன்பானவராகவும் இருப்பார். கண் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் தோன்றலாம். எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அழகான தோற்றத்துடன் பிடிவாத குனத்தையும் கொண்டிருப்பீர்கள். நன்றாக படித்த நீங்கள் ஆசிரியப்பணி மற்றும் வங்கி தொடர்பான பணிகளில் பெரும் வெற்றியடைவீர்கள்.

கல்வி மற்றும் வருமானம்

உங்களுக்கு சாதகமான தொழில்கள் விரிவுரையாளர் அல்லது போதகர், மதபோதகர், வர்ணனையாளர், ஜோதிடர், வக்கீல், நீதிபதி, அரசு பணியாளர், சைக்காலஜி, ராணுவம் தொடர்பான பணிகள், மிருகங்கள் வளர்த்தல், மல்யுத்த வீர்ர், குத்துச்சண்டை வீர்ர், ஜூடோ, கராத்தே, ஒட்டப்பந்தய வீர்ர், ஆசிரியர், பாதுகாவலர் பிரிவு, ஆன்மீக உரையாளர், அரசியல்வாதி, பிசினஸ், பேங்கிங் போன்றவை.

இல்லற வாழ்க்கை

உங்களது குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும் ஆனால் வாழ்க்கை துணை பற்றிய கவலை உங்களுக்கு எப்போதும் இருக்கும். நல்ல குணமும் சகஜமாக பழகும் பாங்கும் கொண்டவராக உங்களது வாழ்க்கை துணை இருப்பார். உங்களது பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள் ஆனால் அவர்களுடன் தற்காலிக பிரிவு ஏற்படலாம்.

Call NowTalk to Astrologer Chat NowChat with Astrologer