Talk To Astrologers

திருவாதிரை நட்சத்திர பலன்கள்

The symbol of aardra Nakshatra திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களான நீங்கள், பொறுப்புணர்வு மிக்கவராகவும் கடின உழைப்பாளியாகவும் இருப்பீர்கள். உங்களது நட்சத்திரத்தின் அதிபதியால் நீங்கள் மிக சிறந்த அறிவாளியாக இருப்பீர்கள். ராகு ஆராய்சிக்கு அதிபதி. உங்களிடம் எதை பற்றியும் அறிந்து கொள்ளும் அறிவு தாகம் நிறைந்திருக்கும். கலகலப்பான குணம் கொண்ட னீங்கள் அனைவரிடமும் நாகரீகமாக பழகுவீர்கள். னீங்கள் அனைத்து வேலைகளிலும் சிறந்து விளங்குபவர் ஆதலால், ஆராய்சி முதல் பிசினஸ் வரை அனைத்திலும் வெற்றி கிட்டும். மற்றவரை எளிதில் எடை போட்டுவிடுவீர்கள். எனவே எதையும் முன்கூட்டியே கணிக்கும் திறன் உங்களிடம் இருக்கும். உங்களது அனுபவங்களை சோதனைகளாக மற்ரவர்களுக்கு விளக்க தயங்க மாட்டீர்கள். வெளியே பார்க்க அமைதியானவராக இருந்தாலும் உங்களது மனதில் சூறாவளியாக எண்ணங்கள் சுழன்று கொண்டிருக்கும். உங்களது கோபத்தை அடக்க வேண்டியது அவசியம். சூழ்நிலைகள் உங்களை சோதனை செய்தாலும் உங்களை உடைந்து விடாமல் பாதுகாத்துக் கொள்வீர்கள். இதனாலே நீங்கள் அனுபவமும் முதிர்ச்சியும் கொண்டவராக விளங்குவீர்கள். பிரச்சினைகள் குறித்து தீர யோசித்த பிறகு அதனை தீர்ப்பதற்கான வழிகளை கண்டறிவீர்கள். பலமான உடலமைப்பு பெற்றிருப்பீர்கள். அன்மீகத்தில் நாட்டம் இருக்கும். பன்முக திறங்களை கொண்டிருப்பது உங்களது மற்றொரு சிறப்பம்சமாகும். “ஏன்” “எப்படி” என்ற சட்ட்திட்டங்களின் படிசெயல்பட்டு தீராத மர்மங்களையும் தீர்ப்பீர்கள். பணம் சம்பாதிக்க உங்களது சொந்த ஊரிலிருந்து தள்ளி வாழவீர்கள். சுருக்கமாக சொன்னால் வெளிநாட்டில் வேலை செய்வீர்கள். 32 வயது முதல் 42 வயது வரை உங்களுக்கு சிறப்பான காலகட்டமாகும்.

கல்வி மற்றும் வருமானம்

எலக்டிரிக்கல் இஞ்சினியரிங், ஜோதிடம் அல்லது சைக்காலஜியில் கல்வி கற்றிருப்பீர்கள். எலக்டிரிக்கல் இஞ்சினியரிங் அல்லது கம்ப்யூட்டர் தொடர்பான பணி, ஆங்கில மொழிபெயர்ப்பு, புகைப்படக்கலை, இயற்பியல் அல்லது கணிதம் கற்பித்தல், ஆராய்ச்சி அல்லது அது தொடர்பான பணி, தத்துவவியல், நாவல் எழுதுதல், நஞ்சுகள் தொடர்பான மருத்துவம், பார்மசிட்டிகல், கண் மற்றும் மூளை தொடர்பான நோய்களை கண்டறிதல், போக்குவரத்து, கருத்து பரிமாற்ற பிரிவு. சைக்கியாட்டரி பிரிவு, துப்பு துலக்குதல், துரிஷ உணவு மற்றும் பானங்கள் போன்ற பணிகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பவராக இருக்கலாம்.

இல்லற வாழ்க்கை

சிறிது தாமதமாக உங்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. அழகான இல்லற வாழ்வுக்கு வாக்குவாதங்களை தவிர்க்கவும். உங்களது பணி அல்லது பிசினஸ் நிமித்தமாக குடும்பத்தை விட்டு தள்ளி இருக்க வேண்டிய சூழல் அமையலாம். உங்களது வாழ்க்கை தூனை உங்களை நன்றாக கவனித்து கொள்வார். அவர் குடும்ப வேலைகளை திறமையுடன் கையாள்பவராக இருப்பார்.

Call NowTalk to Astrologer Chat NowChat with Astrologer