Talk To Astrologers

சதயம் நட்சத்திர பலன்கள்

The symbol of satabhisha Nakshatra வாய்மையே வெல்லும் என்னும் பாதையில் நடப்பவர் நீங்கள். உண்மைக்காக உங்கள் வாழ்க்கையையே பணயம் வைப்பீர்கள். உங்களுக்கு என்று சில விதிகளை வைத்திருப்பீர்களிதனால் சிலருடன் கருத்து மோதல்கள் ஏற்படும். தன்னலமாக எந்த செயலையும் செய்ய மாட்டீர்கள். இளகிய மனம் கொண்ட நீங்கள் இறை பக்தியுள்ளவர். வீரமும் துணிச்சலும் உங்களிடம் நிறைந்திருக்கும். உறுதியான நோக்கம் கொண்ட நீங்கள் எதையாவது செய்து முடிக்க நினைத்தால் அதை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். உங்களது பொறுப்புகளை நன்குணர்ந்த நீங்கள் அதனை நிறைவேற்றுவீர்கள். அரசியலையும் அரசியல் தந்திரங்களையும் கற்றிருப்பீர்கள். அதிக உடலுழப்பை விரும்பாமல் புத்திக்கூர்மையால் காரியம் சாதிப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் தனியாக செயல்பட விரும்புவீர்கள். மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை விரும்புவீர்கள். மெஷினை போல உழைப்பதில் நம்பிக்கை கொள்ளாமல் எதையும் அனுபவித்து செய்வதை விரும்புவீர்கள். எந்த பிரச்சினை வந்தாலும் பயப்படாமல் அதனை துணிவுடன் வெற்றி கொள்வீர்கள். நம்பிக்கையும் சக்தியும் உங்களை வெற்றி பெற செய்யும். உங்களுக்கு அதிகம் கோபம் வராது அப்படி வந்தால் உங்களை சமாளிப்பது கடினம். ஆனால் உடனேயே அதனை மறந்துவிடுவீர்கள். ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டீர்கள். புத்திசாலியான நீங்கள் எல்லா துரைகளிலும் சிறந்து விளங்குவீர்கள். உங்களிடம் யாராவது சிறிது நேரம் பேசினால் உங்களது விசிறியாக அவர் மாறிவிடுவார். ஆடம்பரத்தை பெரும்பாலும் விரும்பமாட்டீர்கள். உங்களது ஞாபக சக்தி அளவிட முடியாதது. எப்போதோ படித்த வரிகளையும் நினைவில் வைத்திருப்பீர்கள். இல்லக்கியத்தில் ஆர்வம் கொண்ட உங்களது திறன் விரைவில் பளிச்சிடும். உங்களது நல்ல குணத்தால் பிரபலமாக இருப்பீர்கள்.

கல்வி மற்றும் வருமானம்

உயர் கல்வி பெறும் தகுதியுடையவர் நீங்கள். சைக்காலஜி அல்லது டச் தெரபியில் நீங்கள் நிபுணராக விளங்க கூடும். ஜோதிட்த்தில் ஆர்வம் கொண்ட நீங்கள் அதில் நிபுணராகவும் விளங்கலாம். மருத்துவ துரையிலும் புகழ்பெற வாய்ப்புள்ளது. உங்களுக்கு சாதகமான தொழில்கள். எலக்டிரீஷியன், கீமோதெரபிஸ்ட், விண்வெளி வீர்ர் அல்லது ஜோதிடர், பைலட், ராணுவ பயிற்சியாளர், தொலைகாட்சி அல்லது ரேடியோ தொடர்பான பணிகள், நடிகர், மாடல், புகைப்பட நிபுணர், ஆசிரியர், அறிவியல் எழுத்தாளர், நியூக்கியர் பிசிக்ஸ், பார்மசிட்டிக்கல் வேலைகள், மருத்துவர் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர், ஆல்கஹால் அல்லது நச்சு தொடர்பான பணிகள், பிளாஸ்டிக் அல்லது பிளாஸ்டிக் உற்பத்தி, பெட்ரோலியம் தொடர்பான வேலைகள், யோகா பயிற்சியாளர், கண்டுபிடிப்பாளர் ஆகியவை.

இல்லற வாழ்க்கை

நேசிப்பவர்களால் சில சிக்கல்கள் தோன்றலாம். உங்களது தாராள குணத்தால் சில மன அழுத்தத்தை சந்திக்க நேரலாம். உடன் பிறந்தவர்களுடன் பிரிவினை ஏற்படலாம். உங்களது பெற்றோரின் பாசத்தை முழுமையாக அனுபவிப்பீர்கள். வாழ்க்கை துனையை நீங்கள் மிகவும் நேசிப்பதால் உங்கள் திருமணவாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். அவரும் தாராள குணத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பார். ‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ என்ர கொள்கை கொண்டவராக அவர் இருப்பார்.

Call NowTalk to Astrologer Chat NowChat with Astrologer