மெலிதான உடலும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கவர்ச்சியான தோற்றமும் கொண்ட நீங்கள் அவனைவரையும் கவருவீர்கள்.
உங்களது கண்கள் வசீகரமாகவும் புன்னகை மனதை மயக்கும்படியாகவும் இருக்கும். உணர்ச்சிகரமான நீங்கள் இயற்கையை
பெரிதும் விரும்புவீர்கள். அடக்கமும், பணிவும் மென்மையான குணமும் கொண்டவர் நீங்கள். யாரிடம் எப்படி பழக
வேண்டும் என உங்களுக்கு நன்றாக தெரியும். மற்றவ்ரகளிடையே பிரபலமானவராகவும் ஆனைவராலும் விரும்ப ப்படுபவராகவும்
விளங்குவீர்கள். உங்களது திறமையாலும் அழகாலும் எளிதில் அவனைவரையும் கவர்வீர்கள். எனவே அனைவரும் உங்களை எளிதில்
நம்பிவிடுவார்கள். எனினும், மிகவும் எளிமையானவராகவும், வெளிப்படையாக பேசும் குணத்துடனும் உணமையாகவும் நடந்து
கொள்வீர்கள். உங்களது திறமையால் உங்களது குடும்பத்துக்கும், வீட்டுக்கும் நாட்டுக்கும் உலகத்துக்கும் சேவை
செய்வீர்கள். உணர்ச்சிகளை சிறப்பாக வெளீப்படுத்தும் உங்களது குணத்தால் நீங்கள் சிறந்த நடிகராக விளங்கும்
வாய்ப்புள்ளது. கலாரசிகர் நீங்கள். கற்பனை திறன் வாய்ந்தவர் நீங்கள். மக்களின் கவனத்தை கவர்வதில் சிறந்தவர்
நீங்கள். குடும்பம் மற்ரும் சமுதாய நியதிகளுக்கு மதிப்பு கொடுத்து நடப்பீர்கள். பொறுப்புணர்வுடன் உங்களது
லட்சியத்தை நோக்கி செல்வீர்கள். உங்களது நெருங்கிய நண்பர்களின் மகிழசிக்கும் திருப்த்திக்கும் மதிப்பளிப்பீர்கள்.
பாரம்பர்யத்தை விரும்பினாலும் பழைய பஞ்சாங்கமாக இருக்காமல் புதிய சிந்தனைகளையும் மற்றங்களையும் விரும்புவீர்கள்.
அரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அதனாலேயே அதிகம் நோய்வாய்ப்பட மாட்டீர்கள். நீண்ட ஆயுளை பெற்றிருப்பீர்கள்.
உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பதுடன் யாரையும் எளிதில் நம்பிவிடுவீர்கள். எதிர்காலத்தை குறித்து அதிகம்
கவலைப்படாமல் நிகழ்காலத்தை ரசித்து வாழவீர்கள். உங்களது வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் நிரம்பியதாக இருக்கும்.
அர்ப்பணிப்புடன் எதிலும் செயல்படுவீர்கள். எதையும் பொறுமையுடன் செய்தால் வெற்றி உங்களுக்கே. இளம் வயதில்
அதிக போராட்டங்களை சமாளிக்க வேண்டியிருக்கும். ஆனால் 38 வயதுக்கு பிறகு வாழ்க்கை ஒரு நிலைக்கு வரும்.
கல்வி மற்றும் வருமானம்
உழவுத்தொழில், தோட்டக்கலை அல்லது உணவு தொடர்பான விஷயங்களில் லாபம் ஈட்டுவீர்கள். உணவு பதப்படுத்துதல் அல்லது
உன்ணவு பொருட்களை மார்க்கெட்டுக்கு போக்குவரத்து செய்தல் போன்ற பணிகள் லாபம் தரும். இது தவிர, தாவரவியல்,
இசை, கலை, அழகு பொருட்கள், பேஷன், டிசைனிங், அழகு நிலையம், ஆபரணங்கள், விலைமதிப்பான ஆடைகள், டூரிசம், போக்குவரத்து,
கார் தொழிற்சாலை, வங்கி, வர்த்தக துறை, எண்ணெய் மற்றும் பெட்ரோல் உற்பத்தி, டெக்ஸ்டைல்ஸ் பிரிவு, நீர் போக்குவரத்து
துறை, இரசாயன தொழிற்சாலை, உணவு பொருட்கள், துரித உணவகம், ஹோட்டல், கரும்பு பிசினஸ், இரசாயன இஞ்சினீயரிங்,
நீர் பதப்படுத்துதல் அல்லது மினரல் வாட்டர் தொடர்பான பணிகள் லாபம் தரும்.
இல்லற வாழ்க்கை
உங்களது வாழ்க்கை துணை அழகானவராகவும், கவர்ச்சியானவராகவும் புத்திசாலியாகவும் இருப்பார். அவருக்கு உங்களிடம்
மிகுந்த எதிர்பார்ப்புகள் இருக்கும். உங்களை போலவே உணர்ச்சி வசப்படுபவராக இருப்பார். உங்கள் இருவருக்கும்
கருத்து ஒற்றுமை அதிகம் இருக்கும். உங்களது குணம் மற்ரவர்களை கவரும் வகையிலும் மென்மையாகவும் இருக்கும்.
அனைவரிடமும் தன்மையாக நடந்து கொள்வீர்கள். இதனாலேயே மற்றவர்கள் உங்களை எடுத்துக்காட்டாக நினைத்து வாழ்வார்கள்.
உங்களது குடும்பத்தினர் மேல் அக்கறை காட்டுவீர்கள். வீட்டு வேலைஒகள் அனைத்தையும் சிறப்பாக செய்து விடுவீர்கள்.
இதனால் உங்களது குடும்ப வாழக்கை இனிமையானதாக இருக்கும்.