Talk To Astrologers

ரேவதி நட்சத்திர பலன்கள்

The symbol of revati Nakshatra மென்மையான குணமும் சுதந்திரபோக்கும் கொண்டவர் நீங்கள். காரணமின்றி யாரையும் தொந்தரவு செய்ய மாட்டீர்கள். அவர்களிடமும் அதையே விரும்புவீர்கள். உங்களது கொள்கைகளில் இருந்து யாராவது மாறும்படி சொன்னால் கோபமடைவீர்கள். சூழலுக்கு தகுந்தாற்போல நடப்பீர்கள். நேர்மையான குணமும் தெளிவான மனமும் கொண்டிருப்பீர்கள். உங்களிடம் ரகசியங்கள் அதிக காலம் தங்காது. கண்மூடித்தனமாக யாரையும் நம்பமாட்டீர்கள். அப்படி நம்பினால் யோசித்தே அதியும் அவர்களுக்காக செய்வீர்கள். என்ன நடந்தாலும் உங்கள் எண்ணப்படியே செயல்படுவீர்கள். சில நேரத்தில் பழமைவாதி போல செயல்படுவீர்கள். பண்டைய கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் இருக்கும். அறிவியல் ஆராய்சி கட்டுரைகள் மற்றும் தீர்வுகளை எழுதுவீர்கள். வானவியல் மற்றும் ஜோதிட்த்தில் ஆர்வம் இருக்கும். உங்களது சிந்தனைகளில் உறுதியாக இருந்தாலும் நெகிழும் தன்மையையும் பெற்றிருப்பீர்கள். உங்களுக்கு காரியம் சாதிக்க வேண்டும் என்றால் பணிவு காட்டுவீர்கள்.உங்களது இந்த குணத்தால் சென்ற இடமெங்கும் வெற்றியடைவீர்கள். சாதுர்யமும் புத்தி கூர்மையும் கொண்டிருப்பீர்கள். உயர் கல்வி பெற்றிருப்பீர்கள். உங்களது அறிவு திறனால் எதையும் எளிதில் செய்து முடித்துவிடுவீர்கள். உங்களது முடிவெடுக்கும் திறன் அலாதியானது. அனைவரிடமும் நன்றாக பழகுவீர்கள். நல்ல நண்பரும் கூட. தடைகள் அனைத்தையும் கடந்து வாழ்வில் முன்னேறுவீர்கள். சமுதாயத்தில் மரியாதைக்குரிய இட்த்தில் இருப்பீர்கள். சிறப்பு வாய்ந்த நபர்களுள் ஒருவராக நீங்கள் எண்ணப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டிருப்பீர்கள். ஆடம்பரம் மகிழ்ச்சி நிரம்பியதாக உங்கள் வாழ்க்கை இருக்கும். பொருளாதார ரீதியாக மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

கல்வி மற்றும் வருமானம்

மற்றவரிடம் பணியார்ருவதையே விரும்புவீர்கள். உங்களது கடின உழைப்பு, சாமர்த்ட்தியம், நேர்மையால் பணியில் உயர்ந்த இட்த்துக்கு செல்வீர்கள். எனினும் பிசினசிலும் வெற்றியடைவீர்கள். உங்களுக்கு சாதகமான தொழில்கள் ஆர்டிஸ்ட், ஓவியர், இசை கலைஞர், மேஜிஷியன், கடிகாரம் தொடர்பான வேலைகள், பில்டிங் கட்டுமனம் தொடர்பான பிசினஸ், பஞ்சாங்கம் உருவாக்குதல், ஜோதிடர், விமான பணிப்பெண், ராசிக்கல் விற்பனை, நீர் வழி போக்குவரத்து பணிகள், ஆசிரமம் தொடர்பான வேலைகள், மத தொடர்பான நிறுவனங்கள் நடத்துதல், டிராஃபிக் கட்டுப்படுத்துதல், போலீஸ் துறை, மின்சாரம் தொடர்பான பிரிவு, சாலை பாதுகாப்பு பணியாளர் ஆகியவை

இல்லற வாழ்க்கை

உங்க்ளது இல்லற வாழ்க்கை பெரும்பாலும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியடைவீர்கள் ஆஅனல் உங்களது தந்தையால் நன்மைகள் கிடைக்காது. உங்களது வாழ்க்கை தூணை பிடிவாத குணம் கொண்டவராக இருப்பாஅர். ஆனால் பக்தி, பூஜை மற்றும் சடங்குகளை பக்தியுடன் செய்பவராக இருப்பார்.

Call NowTalk to Astrologer Chat NowChat with Astrologer