Talk To Astrologers

பூசம் நட்சத்திர பலன்கள்

The symbol of pushya Nakshatra அமைதி விரும்பியான நீங்கள் புத்திசாலிகள். பாரபட்சமின்றி நடப்பதுடன் எளிமையான வாழ்வை பின்பற்றுவீர்கள். கடவுள் மேல் மிகுந்த பக்தி கொண்டிருப்பீர்கள். உங்களது நம்பிக்கை தூய்மையானது என்பதால் மற்றவருக்கு எப்போதும்கருணையுள்ளம், இரக்க குணம் கொண்ட தாராள குணம் படைத்தவர் நீங்கள். உங்களது நட்சத்திர அதிபதியான குருவின் நீங்கள் சீரியசான, நேர்மை, நியாய குணம் படைத்தவராக இருப்பீர்கள்,. கட்டுமஸ்தான உடல் வலு கொண்டிருப்பீர்கள், உருண்டையான மற்றும் பொலிவான முகம் படைத்தவர் நீங்கள். உங்களிடம் ஈகோ என்பது சிறிதளவு கூட இருக்காது. வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் ஆசீர்வாதமும் பெற்ரிருக்க விரும்புவீர்கள். அர்பணிப்பு, நம்பகம், ஸ்முதாய அக்கறையுடன் மற்றவருக்கு உதவுதல் ஆகிய குணக்களை கொண்டவர் நீங்கள், சுவையான உணவுகளுக்கு எளிதில் மயங்குவீர்கள். வழ்வில் சிறி சிறு இன்பங்களை விரும்புவீர்கள். பாராட்டுக்கு மயங்குவீர்கள் அதே நேரத்தில் கிண்டல்களை தாங்கிக்கொள்ள மாட்டீர்கள். எனவே உங்களிடம் காரியம் சாதிக்க இனிப்பாக பேசினாலே போதும். வாழ்க்கையில் அத்தனை வசதிகளையும் பெறுவீர்கள். கடவுள் நம்பிக்கை அதிக கொண்டிருப்பீர்கள். உங்களது இந்த குணங்களால் மற்றவர்கள் மத்தியில் புகழடைவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் மற்றும் தாராள குணம் கொண்டிருப்பீர்கள். புனித யாத்திரை செல்வீர்கள். யோகா, மந்திர தந்திரங்கள், ஜோதிடம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். தாயின் மீதும் தாய்குலங்களின் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருப்பீர்கள். நீங்கள் வேலை செய்யும் பாணி அலாதியானது. `பிறப்பிலேயே திறமைகளை கொண்டவர் நீங்கள். உங்களிடம் ஒரு வேலையை கொடுத்தால் அதை எப்படியாவது அர்பணிப்புடன் செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக உங்களது வாழ்க்கை துணை மற்ரும் குழந்தைகளை விட்டு தள்ளி இருக்க நேரலாம். ஆனால் இதனால் இங்களது குடும்ப வாழ்வில் எந்த பாதிப்பும் நேராது. வாழ்க்கையில் நல்ல வசதிகளை அடைய உழைப்பீர்கள். அமைதியான மற்றும் ஒழுக்கமான குணம் கொண்ட நீங்கள் மற்றவர்களீன் முறையற்ற செயல்களால் சில நேரங்களில் பாதிக்கப்படலாம். உங்கள் மனதில் இருப்பதை வார்த்தைகளாக கூறுவதில் சிரமப்படுவீர்கள். கடவுள் நம்பிக்கை கொண்ட நீங்கள் அனைவருக்கும் உதவுவீர்கள். திருமண வாழ்க்கையிலும் உங்களது துணையிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள்.. இதனால் சில நேரங்களில் கருத்து வேற்றுமைகள் தோன்றலாம். இதனால் உங்களது மனது காயப்படக்கூடும்.

கல்வி மற்றும் வருமானம்

நாடகம், கலை, வர்த்தகம் தொடர்பான பிசினஸ் லாபம் தரும். அத்துடன், பால் பொருட்கள், விவசாயம், தோட்டக்கலை, விலங்குகள் வளர்த்தல், உணவுப்பொருட்கள் தயாரித்தல் மற்றும் விநியோகம் செய்தல், அரசியல்,, பாராளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர், மத போதகர், கவுன்சிலர், சைக்காலஜிஸ்ட், தன்னார்வ தொண்டர், ஆசிரியர், பயிற்சியாளர், குழந்தைகள் கப்பகம், பிளே ஸ்கூல், வீடு, டவுன்ஷிப் அல்லது சொசைட்டி கட்டுபவர், மத தொடர்பான நிகழ்ச்சிகள் அல்லது சமுதாய நிகழ்ச்சிகளை நிர்வகிப்பவர், சமூக சேவை, போக்குவரத்து போன்ற கடின பணிகளில் ஈடுபட்டிருப்பீர்கள்.

இல்லற வாழ்க்கை

வாழ்க்கை துணை மற்ரும் குழந்தைகளுடன் எப்போதும் சேர்ந்து வாழ விரும்புவீர்கள், ஆனால் பணி மற்றும் பிசினஸ் நிமித்தமாக அவர்களை விட்டு அடிக்கடி தள்ளி செல்லும் சூழல் தோன்றும். இதனால் உங்களது திருமண வாழ்வில் சலசலப்புகள் ஏற்படலாம். எனினும், நீங்கள் இல்லாத போது உங்களது வாழ்க்கை துணை அர்ப்பணிப்புடன் குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவார். 33 வயது வரை சில போராட்டங்களை வாழ்க்கையில் சந்திப்பீர்கள். அதன் பிறகு நீங்கள் எல்லா திசையிலும் வளர்ச்சி காண்பீர்கள்.

Call NowTalk to Astrologer Chat NowChat with Astrologer