Talk To Astrologers

பூரம் நட்சத்திர பலன்கள்

The symbol of purva-phalguni Nakshatra இசை, கலை, இலக்கியம் போன்றவற்றில் ஞானம் கொண்டவர் நீங்கள். ஏனெனில் இவற்றில் சிறுவயது முதலே நீங்கள் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அமைதியான சிந்தனை கொண்டிருப்பீர்கள். உண்மையான வழியிலேயே வாழ்க்கை நடத்த விரும்புவீர்கள். அன்புக்கு உங்களது வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு இருக்கும். வன்முறை மற்றும் வாக்குவாதங்களில் இருந்து ஒதுங்கி இருப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் அமைதியையே விரும்புவர் ஆயிற்றே! ஆனால் உங்களது தன்மானத்தை பொறுத்த வரையில் உங்களது எதிராளிகளை விட உங்களது கை ஓங்கியிருக்கும். நண்பர்களையும் நல்ல மனிதர்களையும் நங்கு உபசரித்து மகிழ்வீர்கள். ஆர்வம் அதிகம் இருப்பதால் அடுத்தவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை முங்கூட்டியே அறிந்து கொள்வீர்கள். தாராள குணம் கொண்ட நீங்கள் பிரயாணம் செய்வதை அதிகம் விரும்புவீர்கள்.. வாழ்க்கையில் முன்னேற எப்போதும் நேர்மையான மற்றும் நாணயமான பாதையையே தேர்ந்தெடுப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட துறையில் பேரும் புகழும் பெறுவீர்கள். ஆனால் அமைதியற்று இருப்பீர்கள். கருணையுள்ளம் கொண்டவர் என்பதால் மற்ரவர் உங்களிடம் உதவி கேட்கும் முன்னரே அவருக்கு உதவ தயாராக இருப்பீர்கள். சுதந்திரத்தையே எப்போதும் விரும்புவீர்கள். அதற்க்கும் கட்டுண்டு கிடப்பது உங்களுக்கு பிடிக்காது. மற்ரவரை சார்ந்து இருக்கும் எந்த விஷயமும் உங்களுக்கு பிடிக்காது. உங்களது மேல் அதிகாரிகளை புகந்து காரியம் சாதிக்க விரும்பமாட்டீர்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டவராதலால் மற்ரவ்ரைடமிருந்து எந்த ஆதாயத்தையும் எதிர்பார்க்க மாட்டீர்கள். குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டராதலால் அவர்களுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டீர்கள்.

கல்வி மற்றும் வருமானம்

உங்களது தொழிலை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பீர்கள். 22, 27, 30, 32, 37, மற்றும் 44 வயதுகள் தொழில் மற்றும் பணியை பொறுத்தவரை முக்கியமான கட்டங்களாகும். உங்களுக்கு சாதகமான பணிகள்: அரசு வேலை, உயர் அதிகாரி, பெண்களுக்கான ஆடைகள், அணிகலன்கள் மற்றும் அழகுப்பொருட்கள் உற்பத்தி அல்லது விற்பனை. மக்களை மகிழ்ச்சிப்படுத்துதல், மாடல், புகைப்பட நிபுணர், பாடகர், நடிகர், இசைக்கலைஞர், திருமண ஆடை வடிவமைப்பாளர், அணிகலன் கள் வடிவமைத்தல், கிப்ட் பொருட்கள் பிசினஸ், உயிரியலாளர், தங்க நகைகள் வடிவமைப்பாளர், பருத்தி, கம்பளீ போன்றவற்ருடன் தொடர்புடைய தொழில் ஆகியவையாகும்.

இல்லற வாழ்க்கை

உங்களது குடும்ப வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகள் நல்ல நடத்தை கொண்டிருப்பர். அவர்களால் உங்களுக்கு சந்தோஷம் கிட்டும். உங்களது வாழ்க்கை துணை நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார். குடும்ப நலனுக்காக அனைத்தையும் தியாகம் செய்வார். உங்களது திருமணம் காதல் திருமணமாகவோ அல்லது உங்களது துணை உங்களது திருமணத்துக்கு முன்னர் அறிமுகமானவராகவோ இருப்பார்.

Call NowTalk to Astrologer Chat NowChat with Astrologer