Talk To Astrologers

விமூலம் நட்சத்திர பலன்கள்

The symbol of Moola Nakshatra இனிமையான குணம் கொண்ட நீங்கள் எப்பொதும் அமைதியையே விரும்புவீர்கள். நீதியின் மேல் அதிக நம்பிக்கை கொண்டவர் நீங்கள். மக்கள் அனைவருடனும் நல்ல உறவு முறை கொண்ட நீங்கள் நட்பை விரும்புபவர். உங்களது ஆரோக்கியம் சீராக இருக்கும். உறுதியான ஆழந்த சிந்தனைகள் கொண்டவர் நீங்கள். பொதுப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். உங்களது நற்குணங்களாலும் செயல்களாலும் புகழடைவீர்கள். உங்களது வாழ்க்கையில் சில நியதிகளை வகுத்து கொண்டு அதற்கு ஏற்ப வாழ்வீர்கள். எந்த கஷ்டமான சூழலையும் உறுதியுடன் தாண்டி நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். ஒரு முறை முடிவு செய்து விட்டால் அதனை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். எதிர்காலம் குறித்தோ அல்லது அல்லது வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தோ கவலப்பட மாட்டீர்கள். கடவுளிடம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பீர்கள். அவரிடம் எல்லா கவலைகளையும் சமர்பித்துவிடுவீர்கள். மற்றவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கும் நீங்கள் உங்களது விஷயத்தில் அசட்டையாக இருப்பீர்கள. வேலையில் மிகுந்த நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். உங்களது மனம் நிம்மதியுடன் இருக்காது. பல விஷயங்களிலும் ஞானம் கொண்ட நீங்கள் எழுத்து, கலைகள் மற்றும் பொது துறையில் வெற்ரியடைவீர்கள். நண்பர்களுக்கு தாராளமாக வாரி வழங்குவதால் சில நேரங்களில் பொருளாதார சிக்கல்களை சந்திப்பீர்கள். வரவுக்கு மேல் செலவு செய்வது உங்கள் வழக்கம். நீங்கள் பிறந்த ஊரிலிருந்து தள்ளி வசித்தால் உங்களது திரமையும் அதிர்ஷ்டமும் பளிச்சிடும். வெளி நாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்பது நல்லது. அதனால் லாபம் கிட்டும். உங்களது குடும்பத்திலிருந்து உங்களுக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் உங்களது தலை விதியை நீங்களே எழுதிக்கொள்வீர்கள். உங்களது நன்றி மறவாத குணத்தால் நண்பர்கள் அதிகம் இருப்பர். படிப்பை பொறுத்தவரை அதில் சிறந்து விளங்குவீர்கள். தத்துவவியலில் அதிகம் நாட்டம் இருக்கும். கொள்ள்கைவாதியான நீங்கள் உங்களின் கொள்கைகளுக்கு ஏற்ப நடப்பீர்கள். பணமா மரியாஅதையா என தேர்வு செய்ய வேண்டிய சூழல் உங்களுக்கு ஏற்பட்டால், நீங்கள் மரியாதையை தான் தேர்ந்தெடுப்பீர்கள். வேலை பிசினஸ் இப்படி எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். ஆனால் நீங்கள் வேலை செய்வதை தான் விரும்புவீர்கள். நீங்கள் எந்த இடத்துக்கு சென்றாலும் அங்கு உங்கள் வெற்றிக்கொடியை நாட்டுவீர்கள். கடின உழப்பினை நம்பாமல் சாமர்த்தியமாக உங்களது காரியத்தை சாதிப்பீர்கள். ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்ட உங்களுக்கு பணத்தாசை அறவே இருக்காது. ஏழ எளியவர்களுக்கு உதவக்கூடிய செயல்களில் பங்கு கொண்டு அதிக மரியாதையை அதனால் பெறுவீர்கள். உயர் தட்டு மனிதர்களையே நண்பர்களாக பெற நினைப்பீர்கள். மகிழ்ச்சியும் வசதிகள் நிறைந்த வாழ்வினையும் பெறுவீர்கள்,.

கல்வி மற்றும் வருமானம்

உங்களுக்கு சாதகமான தொழில்கள் பார்மசிட்டிக்கல், பல் மருத்துவம், அமைச்சர், விரிவுரையாளர், ஜோதிடர், போலீஸ் அதிகாரி, ஆராய்சியாளர், ஒற்றர், நீதிபதி, ராணுவ வீர்ர், பேக்டீரியா பற்றி ஆராய்ச்சி செய்பவர், விண்வெளி வீர்ர், தொழிலதிபர், அரசியல்வாதி, பாடகர், கவுன்சிலர், மருந்துகள் மற்றும் மூலிகைகள் தொடர்பான தொழில், பாதுகாவலர் அல்லது மெய்காப்பாளர், குத்துசண்டை வீர்ர், கணிதர் அல்லது கம்ப்யூட்டர் ஸ்பெஷலிஸ்ட் , சைக்காலஜிஸ்ட், கரி அல்லது பெட்ரோல் தொடர்பான வேலைகள் ஆகியவை.

இல்லற வாழ்க்கை

சொந்த முயற்சியால் வெற்றியடைந்தவர் நீங்கள். உங்களது குடும்பத்தாரின் ஆதரவு இல்லாவிட்டாலும் அதற்காக கலங்க மாட்டீர்கள். உங்களது திருமண வாழ்வு திருப்திகரமாக இருக்கும். உங்களது வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவான அனைத்து குணங்களையும் கொண்டிருப்பார்.

Call NowTalk to Astrologer Chat NowChat with Astrologer