Talk To Astrologers

மகம் நட்சத்திர பலன்கள்

The symbol of magha Nakshatra கவர்ச்சியான தோற்றத்துடன் செல்லும் இடமெங்கும் உங்கள் ஆளுமையை நிலை நிறுத்தி கொள்பவராகவும் இருப்பீர்கள். ஒரு பொறுப்பை உங்கள் கைகளில் எடுத்துக்கொண்டால் அதை எத்தனை சுறு சுறுப்பாகவும் கடின உழப்புடன் செய்து முடிக்க முடியுமோ அவ்வாறு செய்து முடிப்பீர்கள். நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவீர்கள். உங்களுக்கு சுய மரியாதை அதிகம் இருக்கும் அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்.. உங்களது சுய மரியாதையை முதலில் காப்பாற்றிக்கொண்ட பிறகு அடுத்த விஷயத்தை பற்ரி சிந்திப்பீர்கள். கடவுள் மேல் அதிக நம்பிக்கை கொண்டிருப்பீர்கள். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளுடன் நெருங்கிய நட்பு கொண்டிருப்பீர்கள். மேலும் சமுதாயத்தில் உயர்தட்டு மக்களுடன் நட்பு வைத்திருப்பீர்கள். அந்த நட்பின் மூலம் லாபமும் அடைவீர்கள். இனிமையாக பேசும் குணம் கொண்ட நீங்கள். அறிவியல் சார்ந்த படிப்புகளில் மிகுந்த ஆளுமை கொண்டிருப்பீர்கள். மேலும் பல்வேறு கலைகளிலும் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். உங்களது அமைதியான குணம், சாந்தமாக வாழ்க்கை, புத்திசாலித்தனமான நடத்தை ஆகியவற்றால் சமுதாயத்தில் அனைவரின் நன்மதிப்பினையும் பெறுவீர்கள். அடிக்கடி கோப்ப்படுவதை தவிர்க்க வேண்டும். உண்மைக்கு புறம்பாக செயல்படுவதை எப்போதும் விரும்பமாட்டீர்கள். உங்களது நட்த்தையால் யாரையும் காயப்படுத்த கூடாது என்று நினைப்பீர்கள். அவ்வாறான சூழல் ஏற்பட்டால் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுவீர்கள். தன்னலமாக இல்லாமல் பிறர் நலனுக்கான செயல்களை செய்வீர்கள். அதற்கு பதிலாக எதியும் எதிர்பார்க்க மாட்டீர்கள். அதிக நேர்மையான குணத்தால் பிசினசில் சில நஷ்டங்களை சந்திக்க்கூடும். ஆனாலும் உண்மைக்கு புறம்பாக செயல்படமாட்டீர்கள். வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை செல்வந்தர்கள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களின் உதவியால் சேர்ப்பீர்கள். அதிகாரத்தால் ஏற்படக்கூடிய அணவத்துக்கு நீங்கள் இடம் கொடுக்க கூடாது. பணம் மற்ரும் சொத்துக்கள் சேர்க்க நீங்கள் ஆர்வம் காட்டினாலும் ஆன்மீகம் மற்றும் பக்தி சார்ந்த விஷயங்களிலும் ஆர்வம் காட்டுவீர்கள். மற்ரவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் உண்மையாகவும் வாழ்வீர்கள். மேலும் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பெரியோர்களையும் மதிப்பீர்கள். வசதிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்வீர்கள். உங்களிடம் நிறைய பணியாளர்கள் வேலை செய்வார்கள். உங்களிடம் பணியாற்றுபவர்கள் உங்களது கனிவான குணத்தை கண்டு அதிக மரியாதை செலுத்துவார்கள்.. பணம் மற்ரும் செல்வங்களை கையாளுவதில் புத்திசாலித்தனத்தை காட்டுவீர்கள். பொருளாதாரத்தை பொறுத்தவரையில் அதிகா ஆர்வம் காட்டுவீர்கள். இதனால் வெற்றியும் அடைவீர்கள். சமூக சேவையிலும் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். பல விஷயங்களிலும் அறிவு கொண்டிருப்பீர்கள். சமூக சேவைகளில் ஆர்வமுடன் பங்கேற்பீர்கள். அடுத்தவர் வேலையை கெடுக்கும் குணம் கொண்டவர்களை உங்களுக்கு அறவே பிடிக்காது. அதனால் உங்களுக்கு விரோதிகள் அதிகம் இருப்பர். உங்களுக்கு அதிக நண்பர்கள் இருக்க மாட்டார்கள். இருக்கும் சில நண்பர்கள் உங்களுக்கு மிக உண்மையாக இருப்பார்கள். மிக அழகான கவர்ச்சியான தோற்றம் கொண்ட நீங்கள் தனலமின்றி அனைவருக்கும் உதவும் நோக்கம் கொண்டவர்கள். உங்களது நேர்மையான குணமே உங்களுக்கு அடையாளமாகவும் பலமாகவும் விளங்கும்.

கல்வி மற்றும் வருமானம்

செல்வவளமும் ஆள் பலமும் கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு சாதகமான பணிகள்: புராதான பொருட்கள் திரட்டுதல், தேசிய அளவில் உயர் அதிகாரம், பெரிய தொழிலதிபர், வக்கீல், நீதிபதி, அரசியல்வாதி, விரிவுரையாளர், கலைஞர், ஜோதிட நிபுணர், வீட்டு உள்ளலங்கார நிபுணர், அல்லது கட்டிட வடிவமைப்பாளர், நிர்வாகி, நிறுவன தலைவர், புராதான கலாசாரம் மற்றும் நாகரீகம் தொடர்பான தொழில்கள் போன்றவை.

இல்லற வாழ்க்கை

உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் நிறைவான திருமண வாழ்க்கை அமைந்திருக்கும். மேலும் உங்களது குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். உங்களது வாழ்க்கை துணை அதிர்ஷ்டசாலியாகவும் அன்றாட பணிகளில் கெட்டிக்காரராகவும் இருப்பார். அவர் குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவார்.

Call NowTalk to Astrologer Chat NowChat with Astrologer