Talk To Astrologers

சித்திரை நட்சத்திர பலன்கள்

The symbol of chitra Nakshatra கடின உழைப்பாளியான நீங்கள் அனைவரிடமும் சகஜமாக பழகுவீர்கள். எல்லோரிடமும் நல்ல உறவுமுறையை வைத்திருப்பீர்கள். யாரை சந்தித்தாலும் நேசத்துடன் பழகும் குணம் கொண்டவர் நீங்கள். . உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்து நீங்கள். உறவுகளை நன்றாக பேலன்ஸ் செய்வீர்கள். உறவுமுறையை பொறுத்தமட்டில் உணர்ச்சிவசப்படுவீர்கள். ஆனால் லாப நஷடங்களை எளிதில் கணக்கு போட்டுவிடுவீர்கள்.எனவே உங்களது போது வாழ்வில் உணர்ச்சிகள் உங்களை அடக்கியாள விட மாட்டீர்கள். எப்போதும் ஊக்கத்துடனும் கசுறுசுறுப்புடனும் திகழ்வீர்கள். எந்த வேலையாய் இருந்தாலும் அதை முழுமூச்சாக செய்துமுடிப்பீர்கள். எந்த பிரச்சினையையும் கண்டு அஞ்சமாட்டீர்கள். அதனை வெற்றி கொண்டுவிடுவீர்கள். எதாவது ஒரு வேலையை இழுத்து போட்டு கொண்டு செய்து கொண்டிருப்பீர்கள். சேம்பேறித்தனமாக இருப்பது உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. ஏதாவது காரணம் கூறி ஒரு செயலை செய்யாமல் தள்ளிப்போடுவதும் உங்களுக்கு பிடிக்காது. உடனடியாக அதை செய்து முடித்துவிட்டு அடுத்த வேலையில் இறங்கிவிடுவீர்கள். ஓய்வு என்ற வார்த்தையே உங்களுக்கு பெரும்பாலும் பிடிக்காது. சில நேரத்தில் பிடிவாத குணம் தலைதூக்கும். மற்றவரிடம் வேலை செய்வதை விட சொந்த பிசினஸ் நட்த்துவதே உங்களுக்கு பிடித்தமானது. ஏனெனில் உங்களது பிசினஸ் செய்வதற்கு ஏற்றதாகும். பிசினஸ் மூளை கொண்டிருப்பதால் அதில் பெரும் வெற்றியடைவீர்கள். பேச்சு கலையில் கைதேர்ந்தவரான உங்களுக்கு முங்கோபம் அதிகம் இருக்கும். அதனை தவிர்த்து அமைதியாக இருப்பது நலம். தன்னம்பிக்கை நிரந்தவர் நீங்கள் என்பதால் எளிதில் சோர்வடையமாட்டீர்கள். சொத்துக்கள் சேர்ப்பதிலும் வசதிகளை அனுபவிப்பதிலும் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அறியல் மற்றும் கலை. துறைகளில் ஆர்வம் இருக்கும். உங்களது பலகீனங்களை மறைத்து உங்களது பெருமைகளை காப்பாற்றிக்கொள்வதில் கெட்டிக்காரர் நீங்கள். பின்னால் நடக்க இருப்பதை முன்பே யூகிக்கும் திறன் கொண்டவர் நீங்கள். உங்களது யூகம் பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும். உங்களது பிடிவாத குணத்தால் சில எதிர்ப்புகளை சம்பாதிக்க நேரலாம். ஆனால் இந்த தடைக்கற்கள் உங்கள் வளர்ச்சிப்பாதைக்கான படிக்கற்களாக மாறிவிடும். சமுதாயத்தில் தாழத்தப்பட்ட பிரிவினருக்காக பல உதவிகளை செய்வீர்கள். அவர்களது நலனுக்காக பாடுபடுவீர்கள். உங்களது 32 வயது வரை சில போராட்டங்களை சந்திப்பீர்கள் அதன் பிறகு வாழ்க்கை அற்புதமாக இருக்கும். உங்களது தந்தையிடமிருந்து சிறப்பான அன்பும் பாசமும் பெறுவீர்கள். அறிவியல் எப்போதுமே உங்களை ஈர்க்கும், அந்த துறையிலேயே உங்களது படிப்பை தொடருவீர்கள். கவர்ச்சியான தோற்றம், சுதந்திர விரும்பி ஆனால் சில நேரங்களில் பொறுப்பில்லாமல் நடப்பீர்கள்.

கல்வி மற்றும் வருமானம்

உங்களுக்கு சாதகமான பணிகள் வாஸ்து நிபுணர், ஃபேஷன் டிசைனர், மாடல், அழகுபொருட்கள் தொடர்பான பணி, பிளாஸ்டிக் சர்ஜரி, அறுவை சிகிச்சை, புகைப்படக்கலை, கிராபிக் டிசைனிங், இசையமைப்பு அல்லது பாடல் எழுதுதல், தங்க நகை செய்தல், ஓவியர் அல்லது கலைஞர், ஸ்கிரிப்ட் ரைட்டர், நாவலாசிரியர், தியேட்டர்-சினிமா செட் நிர்வாகி, ஆர்ட் டைரக்டர், நாடகம், சினிமா அல்லது தியேட்டர் தொடர்பான துறைகள், மருந்துகள் தொடர்பான துறைகள், விளம்பரப்பணிகள் ஆகியவை.

இல்லற வாழ்க்கை

பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள் மேல் உண்மையான பாசம் கொண்டிருப்பீர்கள். ஆனால் பணி நிமித்தமாக அவர்களை விட்டு தள்ளி இருக்கும் சூழல் ஏற்படலாம். நீங்கள் பிறந்த ஊரிலிருந்து தொலைவில் வசிப்பீர்கள். எனவே உங்களது பெற்றோரை விட்டு விலகி இருக்கும் சூழல் ஏற்படலாம். குடும்ப வாழ்வை பொறுத்தவரையில் வாக்குவாதங்களையும் சண்டைகளையும் தவிர்க்க வேண்டும் இல்லையென்றால் உங்கள் இருவருக்குள்ளும் கருத்து வேற்றுமைகள் தோன்றக்கூடும்.

Call NowTalk to Astrologer Chat NowChat with Astrologer