Talk To Astrologers

அவிட்டம் நட்சத்திர பலன்கள்

The symbol of dhanishtha Nakshatra பலவகையான திறன்களை கொண்ட நீங்கள் எல்லவற்றிலும் சிறந்து விளங்குவீர்கள். சூழலுக்க்குஏற்ப வளைந்து கொடுப்பதில் சிறந்தவர் நீங்கள். மனதாலும் செயலாலும் வார்த்தையாலும் யாரையும் காயப்படுத்த மாட்டீர்கள்,. புத்திகூர்மையுடைய நீங்கள் எதையும் கற்கும் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். மனம் மயக்கும் உங்களது புன்னகை அனைவரையும் கவரும். பக்தி நிறைந்த உங்களுக்கு நல்ல குணங்களும் திறன்களும் பழக்க வழக்கங்களும் வாய்த்திருக்கும். அனைவரிடமிருந்தும் அன்பும் ஆதரவும் பெறுவீர்கள். மற்றவர்களிடம் இருந்து மதிப்பும் மரியாதையும் பெறுவது எப்படி என உங்களுக்கு தெரிந்திருக்கும். உங்களை சுற்றியுள்ள அனைவரும் மன திருப்தியுடன் இருப்பார்கள். ஜாலியாகவும் சகஜமாகவும் பழகும் குனம் கொண்டிருப்பீர்கள். எனவே தனிமையை எப்போதும் விரும்பமாட்டீர்கள். தெரிந்தவருடன் நேரம் செலவழிக்கவே விரும்புவீர்கள். தெய்வபக்தியும் உற்சாமும் உங்களுள் நிறைந்திருக்கும். உங்களது கடமைகளை சரிவர நிறைவேற்றுவீர்கள். பிரச்சினைகளையும் தடைகளையும் உடைக்க போராடுவீர்கள். இசை மற்றும் நடனத்தில் நாட்டம் இருக்கும். சிறந்த பாடகராகவும் நாட்டிய கலைஞராகவும் திகழ வாய்ப்புள்ளது. வாக்குவாதங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். இதனால் நீங்கள் அரசியலிலோ அல்லது வக்கீலாகவோ விலங்க கூடும். ரகசியங்களை பாதுகாக்கும் திறன் கொண்டவர் என்பதால் உளவுத்துறை அல்லது பர்சனல் செக்ரட்டரியாக வேலை செய்ய தகுதியானவர் நீங்கள். எவ்வளவு படித்திருந்தாலும் உங்களது ஞானம் அளவிட முடியாதது. ஏதாவது ஒரு வேலையை எப்போதும் செய்து கொண்டிருப்பீர்கள். உங்களது அர்பணிப்பு மற்றும் சுறுசுறுப்பால் நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடைந்துவிடுவீர்கள்.. லட்சியவாதியான நீங்கள் எப்பாடுபட்டவது உங்களது நோக்கங்களை நிரைவேற்றிக்கொள்வீர்கள். பொச்சிவ் குணம் அதிகம் இருக்கும். உங்களது ஆதிக்கத்தில் அனைவரையும் வைத்திருக்க விரும்புவீர்கள். எதையும் எச்சரிக்கையுடன் செய்வீர்கள். சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பிசினசானாலும் வேலையானாலும் அதில் உயர்ந்த இடத்தை பிடிப்பீர்கள்.

கல்வி மற்றும் வருமானம்

உங்களுக்கு சாதகமான தொழில்கள் வரலாற்றாசிரியர், இசை கலைஞர், டான்சர், ஸ்டேஜ் பர்ஃபார்மர், விளையாட்டு வீர்ர், அறிவியல் அல்லது இயற்பியல் நிபுணர், கம்ப்யூட்டர் தொடர்பான பணிகள், ராணுவ வீர்ர், கவிஞர், , பாடலாசிரியர், பாடகர், ஆன்மீக குரு, மின்னணு பொர்ட்கள் உற்பத்தி அல்லது விற்பனை, நிர்வாக அதிகாரி, ஆகியவை. உங்களை பொறுத்த வரை பொறியியல் மற்றும் ஹார்ட்வேர் தொழில்களும் சிறப்பாக இருக்கும். சொத்து தொடர்பான வேலைகள் பிசினசை பொறுத்தவரை லாபகரமாக இருக்கும்.

இல்லற வாழ்க்கை

உடன் பிறந்தவர்கள் மேல் மிகுந்த பாசம் கொண்டிருப்பீர்கள். திருமண வாழ்வு நன்றாக இருக்கும். உங்களது வாழ்க்கை துணை உங்களௌ பொறுத்த வரை அதிர்ஷ்டசாலியாக இருப்பார். குடும்ப சொத்துக்கள் கிட்டும் ஆனால் உங்களது வாழ்க்கை துணையில் குடும்பத்தாரால் லபம் இருக்காது. கருணையும் தாராள குனமும் கொண்டவராக உங்கள் வாழ்க்கை துணை இருப்பார். ஆனால் வரவுக்கு மேல் செலவு செய்பவராக அவர் இருக்க கூடும். எனினும் திருமணத்தால் பொருளாதார ரீதியாக மேன்மை கண்பீர்கள்.

Call NowTalk to Astrologer Chat NowChat with Astrologer