Talk To Astrologers

அஸ்வினி நட்சத்திர பலன்கள்

The symbol of ashwini Nakshatra துடிப்பும் சுறுசுறுப்பான குணமும் கொண்டவர் நீங்கள். எதிலும் ஆர்வமாக செயல்படுவீர்கள். அடிப்படையான விஷயங்களில் திருப்தியடையாமல் பெரிய அளவில் சாதிக்க வேண்டுமென விரும்புவீர்கள். எதையும் உடனடியாக முடித்துவிட வேண்டுமென விரும்புவீர்கள். வேகம், சக்தி மற்றும் சுறுசுறுப்பு உங்களிடம் தெளிவாக காணப்படும். உங்களுக்கு ஒரு யோசனை தோன்றினால் அதனை உடனடியாக செயல்படுத்த நினைப்பீர்கள். விளையாட்டில் ஆர்வமும் புத்திக்கூர்மையும் பெற்றிருப்பீர்கள். எதையும் பற்றி வேகமாக புரிந்துகொண்டு சரியான முடிவுகளை எடுப்பதில் கில்லாடி நீங்கள். அமானானுஷ்யம், சமயம் மற்றும் மந்திர தந்திரங்களில் ஆர்வ்வம் கொண்ட மர்மமான மனிதர் நீங்கள். தைரியமும் வீரமும் கொண்ட உங்களுக்கு கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். எதிரிகள் உங்களுக்கு பெரிய தொல்லைகள் அளிக்க முடியாது ஏனெனில் உங்களுக்கு அவர்களை சமாளிப்பது கைவந்த கலையாகும். அதிகாரம், அழுத்தம் அல்லது வேறு எதுவும் உங்களை கட்டுப்படுத்த முடியாது. உங்களை அன்பால் மட்டுமே கட்டிப்போட முடியும். பார்ப்பதற்க்கு அமைதியானவராகவும் கட்டுபாடுடயவராகவும் திகழ்வீர்கள். எந்த முடிவையும் அவசர கதியில் எடுக்க மாட்டீர்கள். நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் ஆராய்ந்து யோசித்து எடுக்கும் முடிவுகளாகவே இருக்கும். உங்களது முடிவை யாராலும் பாதிக்க முடியாது. உங்களது பணிகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமென உங்களுக்கு நன்றாகவே தெரியும். இது எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு சிறந்த நண்பராக திகழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக எதையும் செய்வீர்கள். எவ்வளவு கஷ்டமான சூழல் ஏற்பட்டாலும் பொறுமையையும் கடவுள் பக்தியையும் கைவிட மாட்டீர்கள். பாரியம்பரியத்தை விரும்புபவராக இருப்பினும் நவீன விஷயங்களிலும் ஆர்வம் காட்டுவீர்கள். கூடுதலாக சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் சிரப்பாகவும் நிர்வகிக்க முயற்சி செய்வீர்கள்.

படிப்பு & வருமானம்

அனைத்திலும் சிறந்து விளங்குபவராக உங்களை கூறலாம். எந்த விஷயத்தை பற்ரியும் சிறிதளவு ஞானத்தையாவது பெற்றிருப்பீர்கள். கல்வி சார்ந்த துரை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் எனினும் நீங்கள் இதர பிரிவுகளான பார்மசிட்டிக்கல், செக்யூரிட்டி, போலீஸ், மிலிட்டரி, ரகசிய சேவைகள், இஞ்சினீயர், ஆசிரியப்பணி, பயிற்சியளித்தல் போன்றவற்றிலும் முயற்சி செய்யலாம். த்த்துவம் மற்றும் இசை ஆகியவை உங்களது கவனத்தை ஈர்க்கும். பல வகையிலும் வருமானம் வரும் சூழல் இருக்கும். 30 வயது வரை வாழவில் பல ஏற்றத்தாழவுகளை சந்திப்பீர்கள்.

இல்லற வாழ்க்கை

உங்களது குடும்பத்தை அதிகம் நேசிப்பீர்கள். என்னினும் தந்தையுடன் சில கருத்து வேற்ருமைகள் தோன்றலாம். எனினும் தாய்வழி உறவுகள் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார்கள். குடும்பம் அல்லாத உறவுகளுக்கு உதவுவார்கள். உங்களது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெண் குழந்தைகளை விட உங்களுக்கு ஆண் குழந்தைகளே அதிகம் இருப்பர்.

Call NowTalk to Astrologer Chat NowChat with Astrologer