Talk To Astrologers

ஆயில்ய நட்சத்திர பலன்கள்

The symbol of Aslesha Nakshatra மிகுந்த அதிர்ஷ்டசாலியான நீங்கள் வலுவான உடலை கொண்டிருப்பீர்கள். உங்களது பேச்சு அனைவரையும் மயக்கி கட்டிப்போடும் திறன் வாய்ந்தது. ஒரு குறிப்பிட்ட தலைப்பில் மணி க்கணக்கில் பேசும் திறன் கொண்டவர் நீங்கள். சதுர வடிவ முகமும் சிறிய கங்களும் கொண்ட அம்சமான முகவெட்டை கொண்டிருப்பீர்கள். உங்களது புத்திசாலித்தனம் மற்றும் தலைமை பண்புகள் உங்களை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும். உங்களது முகத்தில் ஒரு மச்சமோ அல்லது தழும்போ இருக்கும். உங்களது சுதந்திரத்தில் யாரும் தலையிடுவதை விரும்பமாட்டீர்கள். எனவே உங்களுடன் பேசும்போது உங்களது கருத்துக்கு மறுப்பாக மற்ரவர்கள் எதுவும் கூறாமல் இருப்பது அவருக்கு நல்லது. உங்களது நண்பர்களுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு உதவி செய்தவர்களை மறக்க கூடிய நிலை ஏற்படும். அத்தகைய சூழலில் அவர்களுடன் உங்களது உறவு பாதிக்கப்படும். உங்களது முன் கோப குணமும் உங்களுக்கு எதிராக மற்ரவர்களை செயல்பட தூண்டும். எனவே அதை கட்டுப்படுத்துவது நல்லது. பொதுவாக நட்பாண குணமும் சகஜமாக அனைவரிடம் பழகும் தன்மையும் கொண்டிருப்பீர்கள். யாரையும் எளிதாக நம்பிவிட மாட்டீர்கள். எனவே மற்ரவர்கள் உங்களை ஏமாற்ருவது கடினம். எந்த பிரச்சினையையும் முங்கூட்டியே அறிந்து கொள்வீர்கள். எனவே அதனை சந்திக்க தயாகிவிடுவீர்கள். சுவையான உணவுகளை ரசித்து உண்பீர்கள் ஆனால் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளில் இருந்து தள்ளியே இருப்பது நல்லது. எப்போதும் உங்களது மனம் எதையாவது சிந்தித்தபடியே இருக்கும். மர்ம்மான முறையில் செயல்படுவதை விரும்புவீர்கள். உங்களது வார்த்தைகளால் மற்ரவர்களை கட்டிப்போடும் திறன் கொண்டிருப்பீர்கள். நீங்கள் அரசியலில் ஈடுபடுபவராக இருந்தால் இந்த திறன் உங்களுக்கு மிகவும் கை கொடுக்கும. அதிக உயரம் செல்வதற்கான தலைமை பண்புகள் கொண்டிருப்பீர்கள். கடின உழப்பை நம்பாமல் திறமையாக பணியாற்ருவதையே நம்புவீர்கள். உங்களுக்கு லாபம் உள்ளவரை ஒருவரிடம் நட்பு பாராட்டுவீர்கள். மற்றவர்களை மதிப்பிடுவதில் திறமை வாய்ந்த உங்களுக்கு அவர்களை தக்க சமயத்தில் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளவும் தெரியும். ஒரு விஷயத்தை பற்றி முடிவு செய்துவிடீர்கள் என்றால் அதை எப்படியும் செயல்படுத்தி விடுவீர்கள். மேலும், நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளராகவும் கலைஞராகவும் திகழ்வீர்கள். பேச ஆரம்பித்துவிட்டால் நீங்கள் நினைப்பதை சொல்லி முடிக்கும் வரையில் பேச்சை நிறுத்தமாட்டீர்கள்.

கல்வி மற்றும் வருமானம்

சிரந்த எழுத்தாளர் நீங்க> நடிப்பு திறையில் நீங்கள் நுழைந்தால் சிறந்த நடிகராக பெயர்ரெடுக்க முடியும். கலை மற்றும் வர்த்தக துறையும் உங்களுக்கு கைகொசுக்கும். பிசினசில் லாபம் சம்பாதிப்பீர்கள். ஒரே வேலையில் அதிக காலம் நீடிக்கமாட்டீர்கள். ஒரு இடத்தில் வேலை செய்தாலும் தனியாக ஒரு தொழிலையும் செய்து வருவீர்கள். பொருளாதார ரீதியாக செல்வ வளத்துடன் வாழ்வீர்கள். உங்களுக்கு சாதகமான தொழில்கள் நஞ்சு தொடர்பான தொழில், பெட் ரோலிய தொழிற்சாலை, இராசயனவியல், சிகரெட் மற்றும் புகையிலை தொடர்பான பிசினஸ், யோகா பயிற்சியளித்தல், சைக்காலஜிஸ்ட், இலக்கியம், கலை மற்றும் பிரயாணம் தொடர்பான பணிகம், பத்திருக்கை, எழுத்து, டைப்பிங், ஜவுளி உற்பத்தி, நர்சிங், ஸ்டேஷனரி பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோகம் போன்றவை.

இல்லற வாழ்க்கை

யார் உங்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் உங்களது சகோதரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்களது குடும்பத்தின் மூத்த பிள்ளையாக நீங்கள் இருப்பீர்கள். எனவே குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் சுமப்பீர்கள். உங்களது வாழ்க்கை துணையின் குறைகளை கண்டும் காணாமல் விடுவது நல்லது. இல்லையென்றால் கருத்து வேற்றுமைகள் தோன்றலாம். உங்களது குணமும் னல்ல பழக்க வழக்கங்களும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். நீங்கள் இந்த நட்சத்திரத்தின் கடைசி பாதத்தில் பிறந்தவராக இருந்தால் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள்.

Call NowTalk to Astrologer Chat NowChat with Astrologer