மீன ராசியில் சூரியன் பெயர்ச்சி மற்றும் அதன் விளைவுகள்
மீன ராசியில் சூரியன் பெயர்ச்சி மார்ச் 14, சனிக்கிழமை பகல் 11:45 மணிக்கு ஏற்படும், தற்போது சூரியன் பகவானின் நண்பன் குருவின் அதிபதியான மீன ராசியில் நுழைவார். இது ஒரு தந்திரமான ராசியாகும். இதன் படி அக்கினியின் முதன்மை சூரிய கிரகத்தின் பெயர்ச்சி நீர் முதன்மை ராசியில் இருக்கும். இப்போது சூரியன் பெயர்ச்சி மீன ராசியில் இருக்கும் பொது அனைத்து ராசியின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் தெரிந்து கொள்வோம்:
இந்த ராசிபலன் சந்திரன் ராசி அடிப்படை கொண்டது. உங்கள் சந்திர ராசி அறியவும்.
மேஷம் - Aries
மேஷ ராசிகாரர்களுக்கு சூரியன் பகவான் ஐந்தாவது வீட்டின் அதிபதியாகும். உங்கள் ராசியின்
அதிபதி செவ்வாய் சூரியன் பகவானின் நண்பனாகும். மீன ராசியின் பெயர்ச்சியின் காரணத்தினால்
சூரியன் பகவான் உங்கள் ராசியில் பனிரெண்டாவது வீட்டில் நுழைவார். இந்த பெயர்ச்சி மிகவும்
முக்கியமானதாக கருதப்படுகிறது, ஏனென்றால் இதனால் வெளிநாடு சென்று கல்வி பயல நினைப்பவர்கள்
இந்த நேரத்தில் அவர்களின் எண்ணம் நிறைவேறக்கூடும் மற்றும் உங்களுக்கு வெளிநாட்டு கல்லூரி
அல்லது பல்கலைக்கழம் சிட்டு கிடைப்பதினாலும் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
சிலருக்கு காதல் தொடர்பான விசியங்களில் வருத்தம் எதிர் கொள்ள வேண்டி இருக்கும் மற்றும்
அவர்களின் பிரியமானவர் மிக தொலைதூரம் செல்லக்கூடும், இதனால் அவர்களின் சந்திப்பு ஏற்படாது.
இந்த நேரத்தில் நீங்கள் சுயமாகவே தைரியமாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் சிலருக்கு
வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். எதிரிகள் மீது உங்கள் தாக்கம் இருக்கும் மற்றும்
அவர்கள் உங்களிடம் பயத்துடன் இருப்பார்கள், ஆனால் உங்கள் செலவுகள் அளவுக்கு மீறி அதிகரிக்க
கூடும். இதன் விளைவு உங்கள் வருமானத்தில் ஏற்படக்கூடும், இதனால் உங்கள் செல்வதை மிகவும்
சிந்தித்து செலவு செய்ய வேண்டும். எந்தவிதமான முதலீட்டிற்கு மிகவும் சிந்தித்து திட்டமிடவும்,
இல்லையெனில், சில காலத்திற்கு முதலீட்டை தள்ளி வைக்கவும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில்
கொஞ்சம் குறைபாடு ஏற்பட கூடும் மற்றும் உங்களுக்கு அதிகமான காய்ச்சல் அல்லது இதன் அறிகுறி
படி பிரச்சனை எதாவது இருக்க கூடும். எதாவது காரணத்தினால் வாக்குவாதம் அல்லது நீதிமன்ற
பிரச்சனைக்கு இது உகுந்த நேரம் இல்லை, இதனால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்: நீங்கள் தினமும் சூரிய பகவானுக்கு தண்ணீர் ஊற்றி ஆதித்யா உதய மந்திரம் படிக்கவும்.
ரிஷபம் -Taurus
ரிஷப ராசிகாரர்களுக்கு சூரியன் பகவான் அமைதியான நான்காவது வீட்டின் அதிபதி மற்றும்
இந்த பெயர்ச்சின் பொது மீன ராசியில் இருப்பதால், உங்கள் ராசியில் பதினொன்றாவது வீட்டில்
நுழைவார். பதினொன்றாவது வீடு லாபம் வீடு என்று கூற படுகிறது மற்றும் முக்கியமாக சூரியன்
பெயர்ச்சி பதினொன்றாவது வீட்டில் இருக்கும் காரணத்தால் சாதகமான பலன் தருவதாக நம்பப்படுகிறது,
இதனால் இந்த பெயர்ச்சியின் காரணத்தால் உங்கள் வருமானம் அதிகரிக்க கூடும். உங்கள் பொருளாதார
அடிப்படையில் உங்களுக்கு அதிகமாக லாபம் இருக்கும், இதனால் உங்கள் பொருளாதார நிலை வலுவாக
இருக்க உதவக்கூடும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்க கூடும் மற்றும் நீங்கள் சமூகத்தில்
மிகவும் பிரபலமானவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சில புதிய
நபரை சந்திக்க கூடும், உங்கள் எதிர்காலத்துக்கு மிக ஆதரவு தரக்கூடும். கல்வித்துறையில்
எடுத்த முயற்சி உங்களுக்கு பலன் அளிக்கும் மற்றும் எனவே நீங்கள் திருமண ஆனவராக இருந்தால்,
உங்கள் குழந்தைகளால் உங்களுக்கு சிறப்பான லாபம் இருக்க கூடும். உங்கள் மனதின் ஆசைகள்
நிறைவேறக்கூடும். எதாவது திட்டம் நீண்ட காலமாக சென்று கொண்டிருந்தால், அது இந்த நேரத்தில்
முழுமை அடையக்கூடும், இதனால் உங்களுக்கு லாபமும் இருக்கும் மற்றும் மனபலம் அதிகரிக்கும்.
குடும்ப உறுப்பினற்கிடையே ஏற்றத்தாழ்வில் மாற்றம் இருக்கக்கூடும் மற்றும் உங்கள் பணித்துறையில்
உயர் அதிகரியுடன் உங்கள் உறவு நிலை முன்பை விட மிகவும் நன்றாக இருக்கும், இதன் லாபம்
உங்களுக்கு கிடைக்கும். அரசாங்க துறையில் லாபம் நன்றாக இருக்கும் மற்றும் வாதம் விவாதத்தில்
வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: நீங்கள் தினமும் அமைதியான முறையில் சூரிய பகவானை வழிபட வேண்டும்
மிதுனம் - Gemini
மிதுன ராசிகாரர்களுக்கு சூரிய பகவான் மூன்றாவது வீட்டின் அதிபதி. இந்த பெயர்ச்சின்
பொது பத்தாவது வீட்டிற்குள் நுழைவார். பத்தாவது வீட்டில் சூரிய பகவானுக்கு மிகவும்
வலுவாக இருப்பார் மற்றும் அதிக பலசாலியாக நம்பப்படுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில்
உங்களுக்கு பணித்துறையில் மிகவும் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் பதவி மற்றும் அதிகாரத்தில்
விருத்தியடையும். உங்கள் கவுரவம் மற்றும் மரியாதை அதிகரிக்கும் அல்லது உங்கள் மனோபலமும்
அதிகரிக்க கூடும். உங்களுக்கு அரசாங்கம் மற்றும் ராஜா குடும்பத்திலிருந்து லாபம் கிடைக்கும்.
அரசாங்க துறையில் வேலை செய்பவர்கள், அவர்கள் இந்த நேரத்தில் சிறந்த முறையில் லாபம்
பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு உங்கள் குடும்ப தொடர்பான நற்செய்தி கிடைக்கும்
மற்றும் நீங்கள் சமூகத்தில் உயரக்கூடும். நீங்கள் உங்கள் ஒவ்வொரு வேலைகளையும் மிகவும்
சிறப்பாக செய்து முடிப்பதால் நல்ல உச்சத்தை அடைவீர்கள் மற்றும் உங்கள் திறமைகளை பாராட்டுவார்கள்.
உங்கள் எதிரிகள் அமைதியாக இருப்பார்கள் மற்றும் சமூகத்தில் உங்கள் நிலை மிகவும் நன்றாக
இருக்கும். உயர் அதிகாரிகளுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும் மற்றும் இந்த நேரத்தில்
உங்களுக்கு நல்ல செல்வம் லாபம் இருக்கும். நீங்கள் உங்கள் சொந்த முயற்சியால் உங்கள்
வேலைகளில் நன்றாக செயல் படுவீர்கள் மற்றும் சிலர் அவர்களின் பொழுதுபோக்கை லட்சியமாக
செயல்பட கூடும், இதனால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எனவே நீங்கள் எதாவது வியாபாரம்
செய்து கொண்டிருந்தாள், அவற்றில் உங்கள் சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும் மற்றும்
உங்கள் பங்குசந்தை மற்றும் சமூக வலைதளத்தின் மூலம் நீங்கள் உங்கள் வணிகத்தை முன்னெடுத்து
செல்வதில் சாத்தியம் அடைவீர்கள்.
பரிகாரம்: நீங்கள் தினமும் சூரிய பகவானுக்கு தண்ணீர் வழங்க வேண்டும்.
கடகம் - Cancer
கடக ராசியின் அதிபதி சந்திரன் பகவானின் மிகவும் நெருங்கிய நண்பர், சூரியன் பகவான் உங்கள்
ராசியில் ஒன்பதாவது வீட்டில் பெயர்ச்சி கொண்டிருப்பார். அவர் உங்கள் இரெண்டாவது வீட்டின்
அதிபதி. சூரியனின் இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்களுக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும்.
உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உதவியால் நீங்கள் உங்கள் வேலைகளில் வெற்றி கன்பீர்கள்.
இருப்பினும் இந்த நேரத்தில் உங்கள் தந்தையுக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனை வரக்கூடும்,
இதனால் அவரின் உடல் நலம் பாதிப்படையும். ஆனால் உங்கள் மரியாதை கவுரவம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் நீங்கள் எவ்வாறு எண்ணம் கொண்டீர்களோ அவ்வாறு நீங்கள் வெற்றி கன்பீர்கள்.
நீங்கள் இந்த நேரத்தில் ஆன்மிக பயணம் அல்லது மத தளத்திற்கு செல்லக்கூடும், இதனால் உங்கள்
மனம் அமைதியாக உணருவீர்கள். குடும்ப அதிகரிப்பு மற்றும் செழிப்பிற்காக எதாவது சிறப்பு
பூஜை வழிபாடு தொடங்க கூடும். நீங்கள் உங்கள் செல்வதை சிறப்பான காரியங்களுக்கு செலவு
செய்விர்கள், இதனால் உங்களுக்கு மனஅமைதி உணருவீர்கள். சூரிய பகவானின் இந்த பெயர்ச்சி
காலகட்டத்தில் நீங்கள் சிந்தனையில் இருப்பீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் மூத்த
அல்லது ஆசிரியரின் ஆசிர்வாதம் பெற வாய்ப்புக்கிடைக்கும், இது உங்கள் வாழ்க்கைக்கு புதிய
திசைக்கு வழிவகுக்கும். இது உங்கள் எதிர்காலத்துக்கு மிகவும் சிறப்பாக திகழும். இந்த
நேரத்தில் உங்களுக்கு சிறப்பான லாபம் இருக்கும் மற்றும் நீங்கள் உங்கள் செல்வத்தை பல
மடங்கு அதிகரிக்கபதில் வெற்றியடைவீர்கள். சூரியனின் இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு
சமூகத்தில் புகழ் அதிகரிக்கும்.
பரிகாரம்: நீங்கள் வெள்ளெருக்கு வேர் பூஜை செய்ய வேண்டும் மற்றும் அவற்றிற்கு தண்ணீர் உற்ற வேண்டும்.
சிம்மம் - Leo
உங்கள் ராசிக்கு சூரிய பகவானின் எந்த பெயர்ச்சியும் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.
ஏனென்றால் சூரியன் பகவான் உங்கள் ராசியின் அதிபதியாகும். இந்த நேரத்தில் சூரியன் பெயர்ச்சி
மீன ராசியில் எட்டாவது வீட்டில் நுழைவார். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்களுக்கு
கலவையான பலன் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனை வரக்கூடும்
மற்றும் உங்கள் உடல் நலம் பதிப்படையக்கூடும், அதே மற்றோர் பகுதியில் உங்கள் மனம் ஆன்மிக
காரியங்களில் ஈடுபடும். எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருந்தால் இந்த நேரம் உங்களுக்கு
சாதகமாக இருக்க கூடும் மற்றும் உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கும். அரசாங்க துறையில்
இந்த நேரத்தில் சில பிரச்சனைகள் இருக்கக்கூடும். எனவே நீங்கள் எதாவது ராஜ ரகசியத்தை
மறைத்து வைத்திருந்தால், இந்த நேரத்தில் அது வெளிவரும்போது உங்கள் குணத்திற்கு பாதிப்பை
ஏற்படுத்தும். இதனுடவே எனவே ஏதாவது பதவிக்கு புறம்பாக வேலை செய்து இருந்தால், இந்த
நேரத்தில் அதற்கான தண்டனை பெறக்கூடும். உங்கள் வருமானத்தில் சாதாரணமாகவே வீழ்ச்சியடையக்கூடும்
மற்றும் தேவையற்ற பயணத்தில் செல்ல வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள்
மரியாதை மற்றும் புகழால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனென்றால் எதிரிகள்
உங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்யக்கூடும், இதனால் உங்களுக்கு மனதளவில் மற்றும் சமூகரீதியாக
பிரச்சனை வரக்கூடும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுங்கள் மற்றும் உங்கள் தந்தையின் உடல்
ஆரோக்கியத்தையும் கவனிக்கவும்.
பரிகாரம்: நீங்கள் உங்கள் கழுத்தில் தங்கத்தில் சூரியன் பதக்கம் அணிய வேண்டும், இவற்றை நீங்கள் தங்கம் சங்கிலி அல்லது சிவப்பு நூல் ஞாற்றுகிழமை காலை 8 மணிக்கு அணிய வேண்டும்.
கன்னி - Virgo
கன்னி ராசிகாரர்களுக்கு சூரியன் பகவான் பனிரெண்டாவது வீட்டின் அதிபதியாகும். உங்கள்
மீன ராசி பெயர்ச்சியின் பொது சூரியன் பகவான் உங்கள் ஏழாவது வீட்டிற்குள் நுழைவார்.
இந்த பெயர்ச்சியின் காரணத்தினால் உங்கள் வியாபாரத்தில் மிகவும் நன்மையான பலன் கிடைக்கும்.
உங்கள் வணிகத்தில் வேகம் அதிகரிக்கும் மற்றும் உங்கள் வணிகம் விருத்தியடையும். சமூகத்தில்
மிகவும் கவுரவமான நபரால் உங்கள் வணிகத்தில் உங்களுக்கு சிறப்பு லாபம் கிடைக்கும். எனவே
நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தாள், சூரியனின் இந்த பெயர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சியை
கொண்டுவரக்கூடும் மற்றும் உங்களுக்கு பிற்போக்கு கிடைக்க கூடும் மற்றும் சில சிறப்பான
சூழ்நிலை உங்கள் வருமானத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த பெயர்ச்சி உங்கள் தொழிலுக்கு
மிகவும் சாதகமாக இருக்கும். அதே வெளிநாட்டு மூலத்திலிருந்து உங்கள் வணிகத்தினால் நல்ல
லாபம் கிடைக்கும் மற்றும் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சியான
தருணம் வரக்கூடும். இந்த விபரீதமான சூழ்நிலையில் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் அழுத்தம்
ஏற்பட கூடும், ஏனென்றால் சூரியன் பெயர்ச்சி இந்த வீட்டில் இருக்கும் காரணத்தால் தாம்பத்திய
வாழ்க்கைக்கு மிகவும் நன்மையாக இருக்காது. அக்கினி என்றால் சூரியன் பெயர்ச்சி நீர்
ஆதாரம் அடிப்படை கொண்ட ராசியில் இருப்பதால் தாம்பத்திய வாழ்க்கையில் சண்டை ஏற்படுத்தும்
மற்றும் நீங்கள் மற்றும் உங்கள் வாழ்கை துணைவியார் இடயில் சண்டை வரக்கூடும், இதனால்
நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். எனவே நீங்கள் உங்கள் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால்
உங்களுக்கு நன்மையான வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்: நீங்கள் “ஓம் சூர்யாய நமஹ” மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
துலாம் - Libra
உங்கள் ராசியில் சூரியன் பகவான் லாபம் வீட்டின் அதிபதியாகும், ஏனென்றால் உங்கள் ராசியில்
பதினொன்றாவது வீட்டில் அதிகாரம் கொண்டவராக கூறப்படுகிறது. மீன ராசியில் பெயர்ச்சியின்
காரணத்தால் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் இருப்பார். ஆறாவது வீட்டில் சூரியன் பெயர்ச்சி
பொதுவாக லாபகரமாக இருக்கும், இதனால் இந்த பெயர்ச்சியின் போது உங்கள் நீதிமன்ற வழக்குகளில்
வெற்றி கிடைக்கக்கூடும். எனவே நீங்கள் எதாவது வழக்கு தொடுக்க நினைத்திருந்தால், அவற்றில்
உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் வருமானத்தில் குறைபாடு அவசியம்
ஏற்பட கூடும், ஆனால் வருகின்ற காலகட்டத்தில் பொருளாதார நிலை வலுப்படுத்த கடுமையான முடிவுகள்
இந்த நேரத்தில் எடுக்கக்கூடும். கொஞ்சம் செலவாக்கக்கூடும், ஆனால் ஆளுமை பிரநிதியின்
ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அரசாங்க துறையில் வேலை செய்பவர்களுக்கு மிகவும் நல்ல
பலன் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் மூத்த அதிகாரிகளுடன் உறவில் மாற்றம் ஏற்பட
கூடும் மற்றும் இதன் நல்ல லாபம் உங்களுக்கு உங்கள் பணித்துறையில் கிடைக்கும். இந்த
நேரத்தில் நீங்கள் உங்கள் கடன் மற்றும் வாங்கி கடன் திரும்ப செலுத்துவதில் வெற்றி பெறுவீர்கள்,
இதனால் நீங்கள் மிகவும் நன்மையாக உணருவீர்கள். மாமா வீட்டு தரப்பினர் செல்வம் தொடர்பான
விசியங்களில் வாய்ச்சண்டை வரக்கூடும். உங்களுக்கு குறைவாக காய்ச்சல் வரக்கூடும், ஆனால்
உங்கள் உடல் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும் மற்றும் இந்த பெயர்ச்சினால் உங்களுக்கு
சிறப்பான முறையில் பொருளாதார மற்றும் சமூகத்திலும் நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: நீங்கள் ஞாற்றுகிழமை அன்று நோயாளிக்கு இலவசமாக மருந்து விநியோகம் செய்ய வேண்டும்.
விருச்சிகம் - Scorpio
சூரியன் பகவான் விருச்சிக ராசியில் முக்கியமன பங்கு வகிக்கிறது, ஏனெனில் சூரியன் உங்கள்
பத்தாவது வீட்டின் அதிபதி மற்றும் பத்தாவது வீடு என்பது உங்கள் கர்மா என்று பொருள்.
மீன ராசியில் சூரியனின் பெயர்ச்சியின் காரணமாக, அவை உங்கள் ராசியிலிருந்து ஐந்தாவது
வீட்டிற்குள் நுழைவார்கள், இதன் விளைவாக நீங்கள் பணித்துறையில் சில ஏற்ற இறக்கங்களை
சந்திக்க நேரிடும். நீங்கள் ஒரு வேலையைச் செய்தால், அதை மாற்றி, வேறொரு வேலையைக் கண்டுபிடிக்க
முயற்சி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்த காலகட்டத்தில் சிலர் வேலை இழக்க நேரிடும்,
ஆனால் ஒருவித வியாபாரத்தில் ஈடுபடுவோர் இந்த பெயர்ச்சியால் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள்,
மேலும் அவர்களின் வணிகம் அவர்களுக்கு நல்ல பண பலன்களை வழங்கும். உங்கள் சமூகத்தின்
செல்வாக்கு மிக்கவர்களுடனான உறவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. இதிலிருந்து
சரியான முடிவுகளைப் பெறுவீர்கள். இந்த பெயர்ச்சியின் காலகட்டத்தில் நீங்கள் குழந்தை
தொடர்பான சில பெரிய செய்திகளைப் பெறலாம். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், விடாமுயற்சியுடன்
படிக்க வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில், உங்கள் சிந்தனை தீவிரமாக மாறும், மேலும்
நாட்டின் மற்றும் உலகின் நிகழ்வுகளால் நீங்கள் பெரிதும் பாதிக்கப்படுவீர்கள். இந்த
நேரத்தில் உங்கள் தந்தை தனது வேலையில் சிறிது சரிவை உணரக்கூடும். வேலையில் நல்ல பலன்களைப்
பெற, உங்கள் மேலதிகாரிகளுடன் நல்ல உறவைப் பேண வேண்டும்.
பரிகாரம்: செப்புப் பாத்திரத்தில் சிவப்பு மிளகாய் விதைகளை கலந்து சூரிய கடவுளுக்கு வழங்க வேண்டும்.
தனுசு - Sagittarius
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய பகவான் அதிர்ஷடத்தின் அதிபதியாகும், ஏனென்றால் உங்கள்
ராசியில் ஒன்பதாவது வீட்டின் அதிபதியாகும். சூரியன் பெயர்ச்சியின் மீன ராசியில் இருக்கும்
பொது உங்கள் ராசியின் நான்காவது வீட்டிற்குள் நுழைவார். இந்த பெயர்ச்சியின் விளைவாக
நீங்கள் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள், இதில் குடும்ப வாழ்க்கையில் சில அதிருப்தி
மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் உங்கள் தாயின் ஆரோக்கியம் குறிப்பாக குடும்பத்தில்
மோசமடையக்கூடும். நீங்கள் குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யலாம், மேலும்
உங்களை உயர்ந்தவர்களாகக் காட்ட நீங்கள் பந்தயத்தில் முன்னணியில் இருக்க விரும்புவீர்கள்,
இது உங்கள் குடும்ப உறவுகளில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இது தவிர, குடும்ப
உறுப்பினர்களுக்கும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தலாம். இதற்கு மாறாக, நீங்கள் பணித்துறையில்
நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள்.அதிர்ஷடத்தினால் உங்களுக்கு பணியிடத்தில் மரியாதை மற்றும்
கண்ணியத்துடன் நல்ல அதிகாரம் கிடைக்கும். சிலர் ஒரு வேலைக்கு மாற்றப்பட்ட பிறகு ஒரு
நல்ல பதவியைப் பெறலாம், இது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும். இது தவிர, ஒருவர்
அரசாங்கத்திடமிருந்து நல்ல நன்மைகளைப் பெற முடியும், மேலும் ஒரு சொத்தை வாங்கவும் முயற்சி
செய்யலாம். தங்கள் வீட்டை விட்டு விலகி இருப்பவர்கள், இந்த நேரத்தில் வீடு திரும்புவதற்கான
வாய்ப்பு கிடைக்கும், மேலும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தபின் அவர்களின் இதயமும்
உணர்ச்சிவசப்படும். பொருளாதார ரீதியாக, இந்த பெயர்ச்சி சாதாரண முடிவுகளைத் தரும்.
பரிகாரம்: சுக்லா பக்ஷவில் ஞாயிற்றுக்கிழமை உங்கள் ஆள்கட்டி விரலில் அணியக்கூடிய நல்ல தரமான மாணிக்க ரத்னாவை நீங்கள் அணிய வேண்டும்.
மகரம் -Capricorn
மகர ராசியிக்கு சூரிய பகவான் ஆயுள் அதிபதியாகும், அதாவது எட்டாவது வீட்டின் அதிபதி,
ஆனால் வேத ஜோதிடத்தின் படி, சூரியன் எட்டாவது இடத்தில் குற்றவாளி என்று நினைக்கவில்லை.
அவரது மகன் சனியின் மகர ராசி வீடாகும், அதே மகர ராசியில் அவரது தந்தை சூரிய பகவான்
மூன்றாவது வீட்டில் நுழைவார். பொதுவாக, மூன்றாவது வீட்டில் சூரியனின் பெயர்ச்சி சாதகமானது,
ஆனால் அதிர்ஷட்டத்தின் அதிபதி மூன்றாவது வீட்டிற்குள் நுழையும் போது, ஆரோக்கியத்திற்கான
நேரம் கொஞ்சம் பலவீனமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், இந்த பெயர்ச்சியின் விளைவாக
உங்கள் ஆரோக்கியத்தைக் காணலாம். இது மட்டுமல்லாமல், உங்கள் பெற்றோரின் ஆரோக்கியமும்
கொஞ்சம் பலவீனமாக இருக்கும், ஆனால் உங்கள் முயற்சிகள் குறையாது. நீங்கள் வணிகத்தை பணயம்
வைத்து முன்னேற முயற்சிப்பீர்கள். இந்த நேரத்தில் சிலர் வேலையில் அதிக நம்பிக்கையுடன்
தங்கள் வேலையைச் செய்வார்கள், இது அவர்களுக்கு நல்ல முடிவுகளையும் தரும். இது தொடர்பாக
சில குறுகிய தூர பயணங்களும் செய்யப்படலாம், மேலும் அவர்கள் உறவினர்களுடன் யாத்திரை
செல்லவும் முடியும். நீங்கள் நிச்சயமாக மரியாதை மற்றும் புகழ் அதிகரிக்கும் மற்றும்
உங்கள் தசை சக்தியுடன் சவால்களை தோற்கடிப்பதன் மூலம் நீங்கள் முன்னேறுவீர்கள். இந்த
மாற்றம் உங்கள் இளைய உடன்பிறப்புகளுக்கு மிகவும் சாதகமாக இருக்காது, எனவே இந்த நேரத்தில்
நீங்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
பரிகாரம்: நல்ல ஆரோக்கியத்திற்காக, நீங்கள் வன்னி மரத்தை வணங்கி, அதற்கு தண்ணீரை வழங்க வேண்டும்.
கும்பம் - Aquarius
சூரிய பகவான் உங்கள் ராசியின் ஏழாவது வீட்டின் அதிபதி மற்றும் மீனம் ராசியில் பெயர்ச்சி
கொள்வதால், சூரிய பகவான் உங்கள் ராசியின் இரண்டாவது வீட்டிற்குள் நுழைவார்கள். இந்த
பெயர்ச்சியின் விளைவுகள் காரணமாக, உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படக்கூடும்,
மேலும் உங்கள் ஆரோக்கியமும் சற்று தேக்கமடையக்கூடும். இந்த நேரத்தில், உங்களுக்கும்
உங்கள் மனைவிக்கும் இடையிலான கருத்து மோதலும் சாத்தியமாகும். இதுபோன்ற சூழ்நிலையில்,
நீங்கள் கொஞ்சம் கவனித்துக் கொள்ள வேண்டும், இதுபோன்ற எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம்,
இது பேசும் விஷயமாக மாறும். மறுபுறம், உங்கள் வாழ்க்கை பங்குதாரர் குடும்பத்தின் மீதான
தனது எல்லா பொறுப்புகளையும் மிகச் சிறப்பாக நிறைவேற்றுவார், இது குடும்பத்தில் உங்கள்
இருவரின் நிலையை அதிகரிக்கும், மேலும் அவர்கள் உங்கள் இருவரின் மீதும் பாசத்தை செலுத்துவார்கள்.
வணிகத்துடன் நீங்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள், இந்த பெயர்ச்சியின் போது நீங்கள்
செல்வத்தை குவிக்க முடியும், அதாவது உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும் மற்றும் உங்கள்
நிதி நிலை வலுவாக இருக்கும், ஆனால் உங்கள் உரையாடல் தொனி பெருமையை உணரக்கூடும். அத்தகைய
சூழ்நிலையைத் தவிர்க்க நீங்கள் முயற்சிக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் உறவு மோசமடையக்கூடும்,
மேலும் செய்யப்படும் வேலையில் இடையூறுகள் ஏற்படக்கூடும். நீங்கள் அரசியல் துறையில்
இருந்து வந்தால், இந்த நேரத்தில் உங்கள் பொது உருவம் நன்றாக இருக்கும், மேலும் பொதுமக்களின்
பார்வையில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.
பரிகாரம்: நீங்கள் ஞாயிற்றுக்கிழமை மாட்டுக்கு வெல்லம் கொடுக்க வேண்டும்.
மீனம் - Pisces
மீனம் ராசியில் சூரிய பகவான் உங்கள் ஆறாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின்
பொது உங்கள் ராசியில் லக்கின வீட்டிற்குள் நுழைவார் அதாவது உங்கள் முதல் வீட்டில் நுழைவார்.
எனவே இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த பெயர்ச்சியின்
விளைவுகள் காரணமாக, உங்கள் ஆரோக்கியத்தில் குறைவு காணப்படுவீர்கள், மேலும் உங்கள் உடல்நலம்
ஏற்ற தாழ்வுகளால் நிறைந்திருக்கும். நீங்கள் உங்கள் உணவுப் பழக்கத்தை மேம்படுத்தி,
குறிப்பாக உங்கள் உடலில் கவனம் செலுத்த வேண்டும், தேவைப்பட்டால் மருத்துவரை அணுகவும்.
இந்த பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, திருமண வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கும்
மற்றும் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க மோதல் இருக்கலாம்.
அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் மட்டுமே கவனித்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் இந்த தவறு
உங்களிடமிருந்து இருக்கலாம். வணிகத்தைப் பொறுத்தவரை, இந்த பெயர்ச்சிலிருந்து நீங்கள்
நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள், முன்பை விட சிறந்த வணிகத்தை நீங்கள் செய்ய முடியும்,
ஆனால் இது உங்கள் கூட்டாளருடனான உங்கள் உறவில் மோசமான விளைவை ஏற்படுத்தும். தொலைதூர
வணிக பயணங்கள் உருவாக்கப்படும், மேலும் உங்கள் ஆளுமையை மேம்படுத்த உங்களுக்கு வாய்ப்பு
கிடைக்கும்.
பரிகாரம்: நீங்கள் ஞாயிற்றுக்கிழமை கோதுமை மற்றும் வெல்லம் தானம் செய்ய வேண்டும்.
ரத்தினம், ருத்ரக்ஷ் :உள்ளிட்ட அனைத்து ஜோதிட தீர்வுகளுக்கும் கிளிக் செய்க ஆஸ்ட்ரோசேஜ் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர்
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems

AstroSage on MobileAll Mobile Apps
- Numerology Weekly Horoscope: 18 May, 2025 To 24 May, 2025
- Mercury & Saturn Retrograde 2025 – Start Of Golden Period For 3 Zodiac Signs!
- Ketu Transit In Leo: A Time For Awakening & Ego Release!
- Mercury Transit In Gemini – Twisted Turn Of Faith For These Zodiac Signs!
- Vrishabha Sankranti 2025: Date, Time, & More!
- Jupiter Transit In Gemini, These Zodiac Could Get Into Huge Troubles
- Saturn Transit 2025: Cosmic Shift Of Shani & The Ripple Effect On Your Destiny!
- Shani Sade Sati: Which Phase Really Tests You The Most?
- Dual Transit Of Mercury In June: A Beginning Of The Golden Period
- Sun Transit In Taurus: Gains & Challenges For All 12 Zodiac Signs!
- अंक ज्योतिष साप्ताहिक राशिफल: 18 मई से 24 मई, 2025
- केतु का सिंह राशि में गोचर: राशि सहित देश-दुनिया पर देखने को मिलेगा इसका प्रभाव
- बुध का मिथुन राशि में गोचर इन राशि वालों पर पड़ेगा भारी, गुरु के सान्निध्य से मिल सकती है राहत!
- वृषभ संक्रांति पर इन उपायों से मिल सकता है प्रमोशन, डबल होगी सैलरी!
- देवताओं के गुरु करेंगे अपने शत्रु की राशि में प्रवेश, इन 3 राशियों पर टूट सकता है मुसीबत का पहाड़!
- सूर्य का वृषभ राशि में गोचर इन 5 राशियों के लिए रहेगा बेहद शुभ, धन लाभ और वेतन वृद्धि के बनेंगे योग!
- ज्येष्ठ मास में मनाए जाएंगे निर्जला एकादशी, गंगा दशहरा जैसे बड़े त्योहार, जानें दान-स्नान का महत्व!
- राहु के कुंभ राशि में गोचर करने से खुल जाएगा इन राशियों का भाग्य, देखें शेयर मार्केट का हाल
- गुरु, राहु-केतु जैसे बड़े ग्रह करेंगे इस सप्ताह राशि परिवर्तन, शुभ-अशुभ कैसे देंगे आपको परिणाम? जानें
- बुद्ध पूर्णिमा पर इन शुभ योगों में करें भगवान बुद्ध की पूजा, करियर-व्यापार से हर समस्या होगी दूर!
- Horoscope 2025
- Rashifal 2025
- Calendar 2025
- Chinese Horoscope 2025
- Saturn Transit 2025
- Jupiter Transit 2025
- Rahu Transit 2025
- Ketu Transit 2025
- Ascendant Horoscope 2025
- Lal Kitab 2025
- Shubh Muhurat 2025
- Hindu Holidays 2025
- Public Holidays 2025
- ராசி பலன் 2025
- రాశిఫలాలు 2025
- ರಾಶಿಭವಿಷ್ಯ 2025
- ਰਾਸ਼ੀਫਲ 2025
- ରାଶିଫଳ 2025
- രാശിഫലം 2025
- રાશિફળ 2025
- రాశిఫలాలు 2025
- রাশিফল 2025 (Rashifol 2025)
- Astrology 2025