மிதுன ராசியில் சுக்ரன் பெயர்ச்சி (1 ஆகஸ்ட்)

சுக்கிரன் அழகு, கலையின் காரணியாகும். சுக்கிரன் பெயர்ச்சி 1 ஆகஸ்ட் 2020 காலை 4 மணி 56 நிமிடத்தின் பொது மிதுன ராசியில் நுழைவார். சுக்கிரன் பெயர்ச்சி 1 செப்டம்பர் காலை 1 மணி 50 நிமிடம் வரை இதே வீட்டில் குடிகொண்டிருப்பார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி அணைத்து ராசிகளிலும் வெவ்வேறு விதமாக விளைவை ஏற்படுத்தும். எனவே சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் உங்கள் ராசியில் என்ன விளைவு ஏற்படும் என்பதை அறிவோம்.

இந்த ராசிபலன் சந்திரன் ராசி அடிப்படை கொண்டது. உங்கள் சந்திர ராசி அறியவும்.

மேஷம்

மேஷ ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி மூன்றாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு உங்கள் தைரியம் வலிமை மற்றும் இளைய உடன்பிறப்புகளை குறிக்கிறது. எனவே நீங்கள் படைப்பாற்றல் வேலைகள் அபிநயம், சங்கீதம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்தாள், இந்த நேரத்தில் உங்கள் கலை திறமையை வெளிப்படுத்த முழு வாய்ப்பு கிடைக்கும். இதனால் உங்கள் படைப்பாற்றல் வேலையை உங்கள் வணிகமாக மாற்றக்கூடும். சுக்கிரன் பெயர்ச்சி உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் இருக்கும் காரணத்தினால், நீங்கள் விரும்பிய இடத்திற்கு சுற்று பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். சுக்கிரன் அன்பின் காரணி என்றும் அழைக்கப்படுகிறது, இதனால் இந்த நேரத்தில் உங்கள் காதல் வாழ்க்கையில் முழு மாற்றம் வார வாய்ப்புள்ளது. நீங்கள் உங்கள் பிரியமானவர்களுடன் இனிமையான தருணத்தை செலவிடக்கூடும். இருப்பினும் இந்த நேரத்தில் உங்கள் பிரியமானவருடன் உடல் ரீதியாக இணைவது விட மனம் ரீதியாக இணைய முயற்சி செய்ய வேண்டும். சமுத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். நண்பர்களுடனும் நல்ல நேரம் செலவிட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் புதிதாக திருமணம் ஆனவராக இருந்தால், உங்கள் வீட்டிற்கு புதிய நபர் வர வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கிய ரீதியாக பார்க்கும் பொழுது, இந்த பெயர்ச்சியால் நன்மையாக இருக்கும், ஆனால் அதிகமாக குளிர்ச்சியான உணவு உண்ண வேண்டாம் இல்லையெனில் ஜலதோசம் இரும்பல் போன்றவற்றை ஏற்படக்கூடும்.

பரிகாரம்: நீங்கள் எந்த வேலை தொடங்குவதற்கு முன் தந்தை அல்லது தந்தை போன்றவர்களின் ஆலோசனை கேட்கவும்.

மேலும் விபரங்களுக்கு மேஷ மாதாந்திர ராசி பலன் படிக்கவும்

உங்கள் வாழ்க்கையின் ராஜ யோகத்தை தெரிந்து கொள்ள ராஜ யோக அறிக்கை பதிவிறக்கம் செய்யவும்

ரிஷபம்

ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி இரெண்டாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு உங்கள் குடும்பத்தை மற்றும் செல்வதை குறிப்பிடுகிறது. சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் உங்கள் குடும்பத்தில் மாற்றம் வரக்கூடும். நீங்கள் உங்கள் வேலையிலிருந்து நேரம் ஒதுக்கி உங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவீர்கள் மற்றும் எங்கேயாவது சுற்று பயணத்திற்கும் திட்டம் திட்டக்கூடும். இந்த பெயர்ச்சியால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும் மற்றும் உங்கள் சிந்தனைகளை பொருள்சார்ந்ததாக மாற்ற முயற்சி செய்விர்கள். உங்கள் பேச்சுக்கள் இனிமையாக இருக்கும், இதனால் உங்களுக்கு அருகில் உள்ளவர்களின் ஈர்க்க கூடும். ஒரு ஏழைக்கு வழங்கிய உங்கள் அறிவுரை சரியாக இருக்க கூடும். இரெண்டாவது வீடு செல்வம் வீடாகும் மற்றும் இந்த வீட்டில் அழகின் காரணியான சுக்கிரன் இந்த பெயர்ச்சி உங்களை அழகாக காட்ட இந்த நேரம் செலவிட முடியும் என்று குறிப்பிடுகிறது. இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் முடிந்தவரை சேமிக்க முயற்சி செய்ய அறிவுறுத்த படுகிறது. இந்த நேரத்தில் கடன் வாங்கவோ அல்லது கொடுப்பதோ தவிர்க்கவும். எனவே நீங்கள் படைப்பாற்றல் தொடர்புடைய வணிகம் அல்லது அபிநயம், சங்கீதம் போன்றவற்றை கற்று கொண்டு இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் எதிர்பாராதவிதமாக அதிகரிக்க கூடும். இருப்பினும், இதனால் உங்கள் பொருளாதாரம் பாதிப்படையது. மொத்தத்தில் பார்க்கும் பொழுது ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமானதாக இருக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை நிறம் ஆடை தானம் செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு ரிஷப மாதாந்திர ராசி பலன் படிக்கவும்

மிதுனம்

மிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி லக்கினம் அதாவது முதலாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு உங்கள் உடல், ஆளுமை, அறிவு மற்றும் சௌபாக்கியத்தை குறிக்கிறது. சுக்கிரன் பெயர்ச்சி இந்த வீட்டில் இருக்கும் காரணத்தால், நீங்கள் சுயமாகவே நேர்மறையான பலன் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் உங்களை இளமையாக கொண்டிருக்க சுயமாகவே உடல் பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை நட வேண்டும் மற்றும் இதனுடவே அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதிலிருந்து பின் வாங்க மாட்டிர்கள். இந்த ராசியின் சில ஜாதகக்காரர் கல்வி துறையில் தொடர்புடையவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். கல்வி துறையில் வெற்றி கிடைக்க முழு வாய்ப்புள்ளது. இந்த ராசியின் காதல் ஜாதகக்காரர் பற்றி பார்க்கும் பொது, இந்த நேரத்தில் உங்களுக்குள் காதல் அதிகமாக பார்க்கக்கூடும். உங்கள் பிரியமானவர் தினமும் ஈர்ப்பாக உணருவார்கள். இந்த ராசி ஜாதகக்காரர் இப்போது வரை தனிமையில் இருப்பவர்கள், இந்த நேரத்தில் உங்கள் வாழ்கை துணைவியாரை காணக்கூடும். உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் மற்றும் பிடித்த விஷியன்களுக்கு உங்கள் பணத்தை செலவிடவும் முடியும். நீங்கள் வெளிப்படுத்தும் எந்தவொரு பொருட்களையும் வாங்கக்கூடாது, இல்லையெனில் எதிர்காலத்தில் வருத்தப்படக்கூடும். இந்த நேரத்தில் இந்த ராசிக்காரர் புதிய விசியங்களை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் நேரத்தின் மதிப்பை அறிந்து நீங்கள் முன்னேற வேண்டும். உடல் ஆரோக்கிய ரீதியாக பார்க்கும் பொழுது, இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் ஒவ்வாமை இருக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உங்களுக்கு பெரிய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

பரிகாரம்: உங்கள் பெற்றோர்களின் ஆசிர்வாதம் பெற்ற பின்பு வீட்டை விட்டு வெளியேறவும்.

மேலும் விபரங்களுக்கு மிதுனம் மாதாந்திர ராசி பலன் படிக்கவும்

கடகம்

கடக ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பனிரெண்டாவது வீட்டில் இருக்கும். பனிரெண்டாவது வீடு இழப்பு வீடாக கருதப்படுகிறது மற்றும் இதனால் இழப்பு, பிரிவு, நீண்ட தூரம் பயணம், வெளிநாடு போன்றவற்றை குறிக்கிறது. இந்த பெயர்ச்சி கடக ராசியின் வெளிநாட்டு வியாபாரம் அல்லது பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் நபருக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஆனால் மற்றவர்களுக்கு இந்த பெயர்ச்சியால் பிரச்சனை வரக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் சிந்தித்து முன்னேற வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் தாயின் உடல் ஆரோக்கியம் பதிப்படையக்கூடும், இதனால் உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்க கூடும். இந்த மாதிரியான சூழ்நிலையில் உங்கள் தாயுக்கு அதிகமாக நேரம் செலவிட வேண்டும். எனவே இந்த நேரத்தில் எதாவது மாற்றம் செய்ய விரும்பினால், அது தொடக்கத்தில் உங்களுக்கு நன்றாக இருக்கும், ஆனால் எதிர்காலத்தில் அந்த மாற்றத்தினால் சிரமம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும், எனினும் கடக ராசிக்காரர்கள் எளிதாக மாற்றத்தை விரும்ப மாட்டார்கள். இந்த ராசியின் திருமண ஜாதகக்காரர் பற்றி பேசும்பொது, அவர்களுக்கு இந்த நேரம் சாதகமற்றதாக இருக்கும், உங்கள் வாழ்கை துணைவியாருடன் மனசங்கடமான சூழ்நிலை ஏற்படக்கூடும். இதனால் நீங்கள் எந்தவிதமான அறிவுரை வழங்குவதற்கு முன் ஒருமுறை சிந்திக்க வேண்டியது அவசியமாகும். அதே வேலை தொடர்புடைய ஜாதகக்காரர், குறிப்பாக அரசு வேலைகள் தொடர்பான நபர்களை மாற்றுவது அவர்கள் செல்ல விரும்பாத இடமாக இருக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், கண் தொடர்பான பிரச்சனைகள் இந்த ராசி ஜாதகக்காரர்களுக்கு கவலை அளிக்க கூடும்.

பரிகாரம்: வீட்டில் அல்லது அலுவலகத்தில் சுக்கிரன் யந்திரத்தை நிறுவவும்.

மேலும் விபரங்களுக்கு கடகம் மாதாந்திர ராசி பலன் படிக்கவும்

சிம்மம்

சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பதினொன்றாவது வீட்டில் இருக்கும். பதினொன்றாவது வீடு லாபம் வீடாக கூறப்படுகிறது மற்றும் இதனால் உங்கள் எண்ணங்கள், விருப்பம், மூத்த உடன்பிறப்புகளை குறிக்கிறது. இந்த வீட்டில் சுக்கிரன் இருப்பதால் உங்களுக்கு முழுமையான லாபம் கிடைக்கும். எனவே நீங்கள் நீண்ட காலமாக எதாவது வேலை செய்து கொண்டிருந்தாள் மற்றும் இப்போது வரை அவற்றின் பலன் பெறவில்லை என்றால் இப்போது அதன் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே இந்த ஜாதகக்காரர் பணித்துறையில் இருப்பவர்களுக்கும் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது மற்றும் கடின உழைப்பின் நல்ல பலன் கிடைக்கும். சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரத்தில் பயணம் செய்யக்கூடும, இந்த பயணத்தினை லாபம் அடையக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்துடன் எங்கேயாவது சுற்று பயணத்திற்கு செல்ல திட்டமிட்டால், இந்த நேரத்தில் இந்த பெயர்ச்சியால் அது நிறைவேறக்கூடும். இணையத்தளம் மற்றும் சமூகவலைத்தளத்தின் மூலமாக இந்த ராசி ஜாதகக்காரர்களுக்கு பயன் பெற முழு வாய்ப்புள்ளது. இந்த ராசி ஜாதகக்காரர்களுக்கு பெண்களால் லாபம் பெற வாய்ப்புள்ளது. இந்த ராசியின் காதலர்களை பற்றி பேசும் பொது, இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் இருவருக்கிடையே அன்பு அதிகமாக பார்க்கக்கூடும். இந்த ராசி ஜாதகக்காரர் பள்ளி அல்லது கல்லூரியில் தங்களின் திறமையை வெளிப்படுத்த முழுமையாக முயற்சி செய்யக்கூடும்.

பரிகாரம்: சுக்கிரன் நல்ல பலன் பெற காலையில் சூரியஉதயத்தின் முன் எழுந்திருக்கவும்.

மேலும் விபரங்களுக்கு சிம்மம் மாதாந்திர ராசி பலன் படிக்கவும்

கன்னி

கன்னி ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பத்தாவது வீட்டில் இருக்கும். கால புருஷ் ஜாதகத்தில் பத்தாவது வீடு மகர ராசி வீடாகும் மற்றும் இந்த வீட்டினால் உங்கள் வணிகம், வேலை, தலைமை, தந்தை போன்றவற்றை பற்றி குறிப்பிடுகிறது. சுக்கிரன் பெயர்ச்சி இந்த வீட்டில் இருப்பதால் நீங்கள் அதிர்ஷ்டம் பெறக்கூடும் மற்றும் பணித்துறையில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எந்த வேலை தொடங்கினாலும் அவற்றை முழுமையாக செய்து முடிப்பீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷடம் ஒவ்வொரு நிலையிலும் பெறக்கூடும். உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை அதிகரிக்க கூடும். எனவே நீங்கள் எதாவது புதிய பொருட்கள் வாங்க விரும்பினால், இந்த நேரம் சாதகமானதாக இருக்கும். வீடு அல்லது அலுவலகத்தில் நல்ல சூழ்நிலை காரணத்தினால் உங்களுக்கு மன அமைதியாக உணருவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு விதத்திலும் உங்களுக்கு உதவியாக இருக்க கூடும். எனவே நீங்கள் குடும்ப வணிகம் செய்து வந்து கொண்டிருந்தாள், இந்த நேரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், உங்கள் வியாபாரத்திற்கு புதிய திசை கிடைக்க கூடும். இந்த ராசி ஜாதகக்காரர்கள் திரைப்பட துறை சார்ந்தவராக இருந்தால் இந்த நேரத்தில் வெற்றி அடையக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் எந்த திட்டத்திலும் ஈடுபட்டிருந்தாலும் அவற்றில் முழுமையான வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்த பெயர்ச்சியால் கன்னி ராசி ஜாதகக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும், இதனால் உங்கள் முயற்சி முழுமையடைய இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். இன்றய உங்கள் கடினமான உழைப்பு உங்கள் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

பரிகாரம்: காலையில் நேரத்தில் சுக்கிரனின் பீஜ் மந்திரத்தை உச்சரிக்கவும்.

மேலும் விபரங்களுக்கு கன்னி மாதாந்திர ராசி பலன் படிக்கவும்

உங்கள் வாழ்க்கையில் நடவிருக்கும் எதிர்காலத்தின் நன்மை தீமைகளை அறிந்து கொள்ள பிருஹத் ஜாதகம் முன் பதிவு செய்யவும்.

துலாம்

துலாம் ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி ஒன்பதாவது வீட்டில் இருக்கும். கால புருஷ் ஜாதகத்தில் இந்த வீடு மதம், நல்ல அதிர்ஷ்டம், நீண்ட பயணங்கள், ஆன்மிகம் போன்றவற்றை குறிக்கிறது. இந்த வீட்டில் சுக்கிரனின் பெயர்ச்சியால் உங்கள் அறிவுசார் திறன் பலப்படுத்தக்கூடும். இந்த ராசிக்காரர் ஆராய்ச்சி பணியில் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். அதே இந்த ராசியின் மாணவர்கள் கடினமான பாடங்களை புரிந்து கொள்வதில் வெற்றி அடைவார்கள். உங்கள் அறிவை தொடர்ந்து நோக்கி முன்னேறுவீர்கள். உங்கள் நடவடிக்கைகளால் மற்றும் நல்ல பேச்சுதிறமையால் உங்கள் குடும்பத்தின் சூழ்நிலை மிகவும் நேர்மறையாக இருக்க கூடும். இந்த ராசிக்காரரின் காதல் வாழ்கை பற்றி பேசும்போது, இந்த நேரம் மிகுந்த அன்பு நிறைந்ததாக இருக்கும். நீங்கள் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பிரியமானவருடன் நல்ல நேரம் செலவிடுவீர்கள். இந்த நேரத்தில் காதல் திருமணம் செய்ய விரும்புவோர், இந்த வீட்டில் வெற்றி பெறக்கூடும். இருப்பினும், அழகு அல்லது உடலை விட உங்கள் பிரியமானவருடன் உணர்ச்சி ரீதியாக இணைக்க வேண்டும். இது உங்கள் உறவை பலப்படுத்தும். இந்த ராசி ஜாதகக்காரர் உடல்நலம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும், வயிற்று பிரச்சினைகள் இருக்கலாம். உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க யோகா, ஓடுதல் அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்.

பரிகாரம்: குருக்களுக்கு மரியாதை செய்யவும் மற்றும் ஆசிர்வாதம் பெறவும்

மேலும் விபரங்களுக்கு துலாம் மாதாந்திர ராசி பலன் படிக்கவும்

விருச்சிகம்

விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி எட்டாவது வீட்டில் இருக்கும். இந்த வீட்டை ஆயுள் வீடு என்றும் அழைக்கபடுகிறது. இந்த வீடு வாழ்க்கையில் வருகின்ற தடைகள், விபத்து, பரம்பரை சொத்து, போர், எதிரி போன்றவற்றை குறிக்கிறது. இந்த வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சி மிகவும் நன்மையானதாக இருக்காது. இதனால் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களை தவறாக புரிந்து கொண்டதாக உணரக்கூடும். இதனால் உங்கள் கருத்துக்களை மிகவும் தெளிவாக வைக்க வேண்டும். தாம்பத்திய வாழ்க்கையில் உங்கள் வாழ்கை துணைவியாரின் மோசமான உடல் ஆரோக்கியத்தின் காரணத்தினால் நீங்கள் கவலை படக்கூடும். அதே நீங்களும் இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், கண்கள் மற்றும் பிறப்புறுப்புகள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவித்தப்படுகிறது. காதல் வாழ்க்கையில் பிரியமானவருடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உங்கள் பேச்சுக்களை கட்டுப்படுத்தவும் இல்லையெனில் உங்கள் உறவுகள் துண்டிக்க கூடும். இருப்பினும் இந்த ராசி சில ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல பரிசு மற்றும் இன்பஅதிர்ச்சி கிடைக்க கூடும். இந்த பெயர்ச்சியின் பொது, எனவே நீங்கள் நல்ல பலன் பெற விரும்பினால் கடினமான உழைப்பை தொடரவும் மற்றும் உங்கள் மனதை அமைதியாக வைத்து கொள்ளவும், இதற்காக நீங்கள் யோகா மற்றும் தியானத்தின் ஆதரவு பெறக்கூடும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று சந்தோஷி தேவிக்கு பூஜை செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு விருச்சிகம் மாதாந்திர ராசி பலன் படிக்கவும்

தனுசு

தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி ஏழாவது இருக்கும். இந்த வீடு வாழ்கை துணைவியார் மற்றும் கூட்டாண்மையை குறிக்கிறது. இந்த வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சி காரணத்தினால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் நேர்மறையான மாற்றம் வாரக்கூடும். வீட்டின் உறுப்பினரிடம் ஒரு முரட்டுத்தனம் இருந்தால், அது போகக்கூடும். உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதே நேரத்தில், நீங்கள் சமூகத்தில் சிறப்பாக செயல்பட முடியும், மேலும் நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்களிடமிருந்து நன்மைகளைப் பெறுவீர்கள். தாம்பத்திய வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும், ஆனால் உங்கள் வாழ்கை துணைவியாரின் உடல் ஆரோக்கியம் பதிப்படையக்கூடும். இதனால் அவர்களை கவனித்து கொள்ளுங்கள் மற்றும் அதிமாக அவர்களுடன் நேரம் செலவிடுங்கள். இதனுடவே நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், நோயிலிருந்து விடுபட அதிகமாக தண்ணீர் குடிக்கவும். இந்த ராசிக்காரர் கூட்டாண்மையுடன் வேலை செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் அவர்களுக்கு வியாபாரத்தில் பயனடைய முழு வாய்ப்புள்ளது. உங்கள் வியாபாரத்தை பரப்பவும் இந்த நேரத்தில் நீங்கள் சிந்திக்க கூடும். இந்த ராசியின் ஜாதகக்காரர்கள் இப்போது வரை தனிமையில் இருந்தால், இந்த நேரத்தில் சமூகவலைத்தளமாக அல்லது நண்பர்கள் மூலமாக உங்கள் துணைவியாரை காணக்கூடும். இந்த பெயர்ச்சியின் பொது, நீங்கள் உங்கள் செலவுகளில் கவனம் செலுத்தவும், இதனால் நீங்கள் உங்கள் பணத்தை சேமிப்பதில் வெற்றி அடையக்கூடும்.

பரிகாரம்: ஸ்டாபிக் மலை அணியவும்.

மேலும் விபரங்களுக்கு தனுசு மாதாந்திர ராசி பலன் படிக்கவும்

மகரம்

மகர ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி ஆறாவது வீட்டில் இருக்கும் பொது, இந்த வீட்டை ரிப்பு வீடு என்றும் அழைக்கப்படுகிறது, இதன் மூலம் நோய்கள், கடன்கள், எதிரிகள் போன்றவற்றைப் பற்றி குறிப்பிடுகிறது. இந்த வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சி மகர ராசி ஜாதகக்காரர்களுக்கு மிகவும் நன்மையானதாக இருக்காது. குடும்ப வாழ்க்கையில் இந்த நேரத்தில் பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். சின்ன சின்ன விஷியன்களால் வீட்டின் உறுப்பினற்கிடையே மன சங்கடம் ஏற்படக்கூடும். இந்த மாதிரியான சூழ்நிலையில் உங்கள் பேச்சுக்களை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் மிகவும் குறைவாக பேச வேண்டும். நீங்கள் எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ அவ்வளவு உங்கள் பிரச்சனைகள் குறையக்கூடும். தொழில் வாழ்கை மற்றும் வணிக நபர்கள் மிகவும் கவனமாக இருக்கவும், ஏனென்றால் இந்த நேரத்தில் ஏமாற்றம் அடைய வாய்ப்புள்ளது. பணித்துறையில் பெண் ஊழியர்களிடம் மிகவும் சிந்தித்து பேச வேண்டும், இல்லையெனில் உங்கள் மரியாதைக்கு இழப்பு ஏற்படக்கூடும். இந்த ராசியின் காதல் ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரம் நல்லதல்ல, சில காரணங்களால் உங்கள் பிரியமானவர் உங்களிடமிருந்து விலகி இருக்கலாம். நல்ல பலன்களைப் பெற நீங்கள் இரு மடங்கு கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது. எனவே இதற்கிடையில், சோம்பலைக் கைவிட்டு முன்னேறவும். இந்த நேரத்தில் உங்கள் எதிரிகளும் சுறுசுறுப்பாக இருப்பார்கள், அவர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்கிறார்கள். உடல் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொது, நீங்கள் வெளியில் தாளித்த உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் இல்லையெனில் வயிற்று வலி தொடர்பான பிரச்சனை வரக்கூடும்.

பரிகாரம்: பரசுராமரின் கதாபாத்திரத்தைப் படிப்பது நல்லதாக இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு மகரம் மாதாந்திர ராசி பலன் படிக்கவும்

கும்பம்

கும்ப ராசி ஜாதகக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி ஐந்தாவது வீட்டில் இருக்கும். இது குழந்தைகளின் வீடாக கூறப்படுகிறது மற்றும் இதனால் கல்வி மற்றும் காதல் தொடர்பான விசியங்களை பற்றியும் குறிப்பிடுகிறது. இந்த வீட்டில் சுக்கிரனின் பெயர்ச்சி இந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, ​​மக்களிடையே நல்லிணக்கம் இருக்கும், இது உங்களுக்கு மகிழ்ச்சியையும் தரும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் வீட்டின் எதிர்காலத்திற்கான புதிய திட்டத்தை திட்டக்கூடும். பொருளாதாரத்தை மேம்படுத்த உங்கள் பெற்றோர்களின் ஆலோசனை பெறுவது உங்களுக்கு நன்மை அளிக்கும். இந்த ராசியின் திருமண ஜாதகக்காரர்களுக்கு தங்கள் குழந்தைகளிடமிருந்து நன்மையான பலன் கிடைக்கும். உங்கள் குழந்தைகளால் உங்களுக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். எனவே உங்கள் தயார் வேலை செய்து வந்தால் அவர்கள் இந்த பெயர்ச்சியால் பயனடைய வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் சொத்து வாங்கவோ அல்லது விற்பதன் மூலம் லாபம் அடையாளம். கும்ப ராசி ஜாதகக்காரர் பெரும்பாலும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை, ஏனென்றால் அவர்கள் சுயமாகவே தங்களை தொந்தரவு செய்து கொள்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் இதைச் செய்வதைத் தவிர்த்து, முடிந்தவரை உங்களை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். நீங்கள் ஒருவரை நேசிக்கிறீர்களானால் அல்லது திருமணமானவராக இருந்தால், உங்கள் விஷயங்களை உங்கள் வாழ்கை துணைவியரின் முன் திறந்து வைத்திருங்கள், இது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்: நீங்கள் ஸ்ரீ சுக்தா பாராயணம் செய்வது நல்லது.

மேலும் விபரங்களுக்கு கும்பம் மாதாந்திர ராசி பலன் படிக்கவும்

மீனம்

மீனம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி நான்காவது வீட்டில் இருக்கும். இது, மகிழ்ச்சி, தாய், நிலம், ரகசிய காதல் விவகாரம் போன்ற எண்ணங்கள் குறிப்பிடுகின்றன. சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் பொது, உங்கள் உடன் பிறப்புகளிடமிருந்து நன்மைகளை பெறுவீர்கள். இந்த நேரத்தில் அவர்களுடன் எதாவது முரண்பாடு இருந்தால், அதுவும் இந்த நேரத்தில் விலகி செல்லாம். நீங்கள் மனரீதியாக அமைதியாக இருப்பீர்கள் ஆனால் உங்கள் தாயின் உடல் ஆரோக்கியம் உங்களை தொந்தரவு செய்யலாம். பணி துறை பற்றி பேசும்பொது, பணித்துறையில் சில பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். நீங்கள் செய்கின்ற வேலைக்காக நீங்கள் உருவாக்கப்படவில்லை என்று நீங்கள் உணரலாம். இருப்பினும் நீங்கள் இந்த நேரத்தில் அவசரமாக வேலையை விட்டு வெளியேறக்கூடது. இந்த நேரத்தில் காதல் தொடர்பான விசியங்களில் நீங்கள் சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் பிரியமானவருக்கு நிறைவேற்ற முடியாத எந்தவொரு வாக்குறுதிகளையும் வழங்க கூடாது. தாம்பத்திய வாழ்க்கையில் இருப்பவர்கள், உங்கள் வாழ்கை துணைவியாருடன் சண்டையை முடித்து கொண்டு முன்னேற வேண்டும். இந்த ராசி ஜாதகக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இந்த பெயர்ச்சியின் பொது குறைபாடு வரக்கூடும். இருமல், சளி போன்ற சிறு நோய்கள் உங்களைத் தொந்தரவு செய்யும். இந்த நேரத்தில் நீங்கள் குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் பிரச்சினை மேலும் அதிகரிக்கக்கூடும்.

பரிகாரம்: சுக்கிரன் வலுவடைய நீங்கள் சக்கரை தானம் செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மீனம் மாதாந்திர ராசி பலன் படிக்கவும்

ரத்தினம், ருத்ரக்ஷ்: ஆஸ்ட்ரோசேஜ் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர் உள்ளிட்ட அனைத்து ஜோதிட தீர்வுகளுக்கும் கிளிக் செய்க

Astrological services for accurate answers and better feature

33% off

Dhruv Astro Software - 1 Year

'Dhruv Astro Software' brings you the most advanced astrology software features, delivered from Cloud.

Brihat Horoscope
What will you get in 250+ pages Colored Brihat Horoscope.
Finance
Are money matters a reason for the dark-circles under your eyes?
Ask A Question
Is there any question or problem lingering.
Career / Job
Worried about your career? don't know what is.
AstroSage Year Book
AstroSage Yearbook is a channel to fulfill your dreams and destiny.
Career Counselling
The CogniAstro Career Counselling Report is the most comprehensive report available on this topic.

Astrological remedies to get rid of your problems

Red Coral / Moonga
(3 Carat)

Ward off evil spirits and strengthen Mars.

Gemstones
Buy Genuine Gemstones at Best Prices.
Yantras
Energised Yantras for You.
Rudraksha
Original Rudraksha to Bless Your Way.
Feng Shui
Bring Good Luck to your Place with Feng Shui.
Mala
Praise the Lord with Divine Energies of Mala.
Jadi (Tree Roots)
Keep Your Place Holy with Jadi.

Buy Brihat Horoscope

250+ pages @ Rs. 399/-

Brihat Horoscope

AstroSage on MobileAll Mobile Apps

Buy Gemstones

Best quality gemstones with assurance of AstroSage.com

Buy Yantras

Take advantage of Yantra with assurance of AstroSage.com

Buy Feng Shui

Bring Good Luck to your Place with Feng Shui.from AstroSage.com

Buy Rudraksh

Best quality Rudraksh with assurance of AstroSage.com
Call NowTalk to
Astrologer
Chat NowChat with
Astrologer