மேஷ ராசியில் செவ்வாய் பெயர்ச்சி 16 ஆகஸ்ட்
செவ்வாய் அணைத்து கிரகத்தின் சேனாதிபதியாகும், தொழில், நிலம், சகோதரர், தைரியம், வீரம் போன்றவை காரணிகளாகக் கருதப்படுகின்றன. இந்த பெயர்ச்சியின் விளைவு அணைத்து ராசிகளிலும் வெவ்வேறு விதமாக விதமாக விளைவை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் 16 ஆகஸ்ட் அன்று மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாலை 20:37 மணிக்கு நுழைவார். மேஷ ராசியில் 10 செப்டம்பர் அன்று காலை 3:50 மணி வரை இருப்பார். இது வக்ரம் தொடங்கும் மற்றும் வக்ரமடைந்து 4 அக்டோபர் அன்று 10:06 மணிக்கு ஒருமுறை திரும்ப மீன ராசியில் நுழைவார், மீன ராசியில் இருக்கும் போது, நவம்பர் 14 ஆம் தேதி, அவர்கள் வக்ர கட்டத்திற்குள் நுழைந்து, டிசம்பர் 24, அன்று மேஷத்திற்குள் நுழைவார்கள்.
கிரகங்களின் வக்ர பெயர்ச்சி கருத்தில் கொண்டு, வேகமாக நகரும் கிரகத்துடன் ஒப்பிடும்போது செவ்வாய் கிரகம் நகரும் நிலை ஆகும். ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே செவ்வாய் கிரகத்தின் பின்னைடைவு இந்த ராசி ஜாதகக்காரர்களுக்கு வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் வரக்கூடும். எனவே செவ்வாய் பெயர்ச்சியால் அணைத்து ராசிகளிலும் எவ்வாறு விளைவை ஏற்படுத்தும் என்பதை இப்பொது விரிவாக அறிந்து கொள்ளவும்.
இந்த ராசிபலன் சந்திரன் ராசி அடிப்படை கொண்டது. உங்கள் சந்திர ராசி அறியவும்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆகும். இந்த செவ்வாய் கிரகம் உங்கள் லக்கினம் அதாவது முதலாவது வீட்டில் இருக்கும் காரணத்தால் வாழ்க்கையில் நேர்மறை வரக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் உற்சாகமாக இருக்கும் மற்றும் நீங்கள் தடைபட்டிருந்த வேலைகளை முடிக்க கூடும். இந்த ராசிக்காரர் புதிய வேலை தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த நேரத்தில் வெற்றி கிடைக்க கூடும். இந்த நேரத்தில் உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மிகவும் உறுதியாக இருப்பீர்கள், இதனால் உங்கள் ஆளுமையும் மேம்படும். இந்த ராசியின் வியாபாரிகளுக்கு இந்த நேரத்தில் மிகவும் நன்றாக இருக்கும். ஏனவே உங்கள் வியாபாரத்தை விரிவு படுத்த நினைத்தாள் ஆலோசனை பெற்ற பின்னரே தொடரவேண்டும்.
இந்த ராசிக்காரர்களுக்கு பணித்துறையில் மரியாதை கிடைக்கும், உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆராய்ச்சி செய்யும் இந்த ராசி மாணவர்களுக்கு இந்த நேரத்தில் புதிய மற்றும் நேர்மறையான திசையை பெறலாம். இந்த நேரம் குடும்ப வாழ்கைக்கு மிகவும் நல்லது எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த நேரத்தில் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் எந்த அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் உங்களை வலுவாக வைத்து கொள்ள உடல் பயிற்சி செய்ய வேண்டும். காதல் வாழ்க்கையில் நீங்கள் உங்கள் பிரியமானவருக்காக எதுவும் செய்ய கூடும். ஒட்டுமொத்தமாக, இந்த நேரம் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும், உங்கள் கோபத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
பரிகாரம்: சிவப்பு ஆடை வழங்குவது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பனிரெண்டாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு வெளிநாட்டு, இழப்பு, செலவு போன்றவை கருதப்படுகின்றன. செவ்வாய்யின் பெயர்ச்சியின் பொது இந்த ராசி ஜாதகக்காரர்களுக்கு வெளிநாட்டு மூலத்திலிருந்து லாபம் கிடைக்கும். இந்த ராசி மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயல விரும்புவொருக்கு இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். இந்த ராசியின் மற்ற ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரம் தொடக்கத்தில் மிகவும் சவாலாக இருக்கும், ஆனால் எவ்வாறு நேரம் கடக்கிறது அவ்வாறு உங்களுக்கு நேர்மறையான மாற்றம் வரக்கூடும்.
இந்த நேரம் உங்கள் நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியமாகும், ஏனென்றால் நீங்கள் பலமுறை நீங்கள் தவறுகள் செய்த பிறகும் நீங்கள் உங்கள் தவறுகளை ஏற்க மறுக்கிறீர்கள், இது மக்களுடனான உங்கள் சமன்பாடு மோசமடைய காரணமாகிறது. ஒரு தவறு எல்லோராலும் செய்யப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அதை ஏற்றுக்கொள்வது ஒரு நல்ல நபரின் தரம். இந்த ராசியின் தோழில் மற்றும் வியாபாரி ஜாதகக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி பொது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் எதிரிகள் உங்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்யக்கூடும். நீங்கள் உங்கள் வாழ்க்கையை சமநிலையை படுத்த விரும்பினால், நீங்கள் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதிகப்படியான எதிர்வினை தவிர்க்கவும். இந்த நேரத்தில் உங்கள் மன அமைதிக்காக நீங்கள் தியானம் மற்றும் யோகா நடவேண்டும்.
பரிகாரம்: ஒரு செப்பு நாணயம் அல்லது துண்டுகளை உங்கள் சட்டைப் பையில் வைத்திருப்பது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பதினொன்றாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு லாபம் வீடாக அழைக்கப்படுகிறது, இதனால் இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த ராசியின் வேலை ஜாதகக்காரர்களுக்கு பணித்துறையில் சாதகமான சூழ்நிலை இருக்கும் மற்றும் இந்த நேரத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்க முழு வாய்ப்பு உள்ளது. அதே வியாபார ஜாதகக்காரர்களை பற்றி பேசும்பொது, இந்த பெயர்ச்சியின் பொது நீங்கள் இப்போது எடுக்கும் முடிவு உங்கள் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ராசிக்காரர் சிலர் புதிய வேலை தொடங்கி இருப்பவர்களுக்கு, இந்த நேரத்தில் புதிய வழி காணக்கூடும். இருப்பினும் இந்த மிதுன ராசி ஜாதகக்காரர் இந்த நேரத்தில் வாங்கி கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும், ஆனால் இந்த நேரத்தில் உங்கள் வாங்கி கடன் திரும்ப செலுத்த மிகவும் நன்மையானதாகும். இந்த ராசியின் பல ஜாதகக்காரர் செவ்வாய் பெயர்ச்சியின் போது லட்சியங்களால் நிரப்பப்படுவார்கள், இந்த அபிலாஷைகள் நிறைவேற்ற படாவிட்டால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். உங்கள் பலன்களை பற்றி கவலைப்படுவதை விட உங்கள் கடின உழைப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். நீங்கள் கடினமாக உழைத்தால், உங்களை முன்னோக்கி நகர்த்துவதை யாரும் தடுக்க முடியாது. செவ்வாய் கிரகம் ஒரு உமிழும் கிரகம் என்பதால், இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் பேச்சு கடினமாகிவிடும், இதன் காரணமாக உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பிரச்சினைகள் இருக்கலாம். இராணுவத்தில் சேர விரும்புவோரின் முயற்சிகள் இந்த நேரத்தில் வெற்றிகரமாக முடியும்.
பரிகாரம்: எந்தவொரு நல்ல வேலைக்கும் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு தேன் குடிக்கவும்.
கடகம்
கடக ராசி ஜாதகக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பத்தாவது வீட்டில் இருக்கும். பத்தாவது வீடு கர்மா வீடாக அழைக்கப்படுகிறது மற்றும் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் உங்கள் வேலையின் வேகம் அதிகரிக்க கூடும். நீங்கள் கற்பனைகளின் உலகத்திலிருந்து வெளியே வந்து நிகழ்காலத்திற்கு வருவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் மனதில் எதை சிந்தித்தாலும் அதை நிறைவேற்ற நீங்கள் முயற்சி செய்வீர்கள். இருப்பினும், உங்கள் அலுவலகத்தில் இந்த நேரத்தில், உங்கள் மீது கூடுதல் சுமை இருக்கலாம். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற நீங்கள் உறுதியாக இருப்பீர்கள். உங்கள் மூத்தவர்கள் உங்கள் செயல்பாட்டை விரும்புவார்கள், உங்கள் படம் அவர்களின் பார்வையில் சிறப்பாக இருக்கும். செவ்வாய் பெயர்ச்சி உங்கள் ராசியின் பத்தாவது வீட்டில் இருப்பதால், செவ்வாய் இங்கே திக்பாலி என்பதால், உங்கள் பல விருப்பங்களை இந்த நேரத்தில் நிறைவேற்ற முடியும். இராணுவம், காவல்துறை போன்ற துறைகளில் பணியாற்றும் இந்த ராசியின் நபர்கள் பதவி உயர்வு பெறலாம். அதே நேரத்தில், விளையாட்டுகளுடன் தொடர்புடைய நபர்களும் இந்த நேரத்தில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். கடக ராசி காதல் வாழ்கை பற்றி பார்க்கும்பொது, இந்த நேரத்தில் நீங்கள் ஒரு ஆற்றலைக் காண்பீர்கள், மேலும் உங்கள் காதல் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்ற விரும்புவீர்கள். திருமணமான ராசிக்காரர்களுக்கு குழந்தை தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். இந்த நேரம் ஆரோக்கியத்திற்கும் நல்லது, ஆனால் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதையோ அல்லது அதிகமாக தூங்குவதையோ தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்: அனுமன் அஷ்டக் பாராயணம் செய்யுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் இருக்கும். இது ஒரு அதிர்ஷ்ட வீடு மற்றும் மதம், தன்மை, நீண்ட பயணங்கள், உயர் கல்வி போன்றவை கருதப்படுகின்றன. உங்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் நன்றாக இருக்கும், இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் முழுமையாக கைகொடுக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதி இருக்கும் மற்றும் இந்த ராசியின் பல ஜாதகக்காரர் இந்த நேரத்தில் உங்கள் தந்தையிடமிருந்து பயனடையலாம். நீங்கள் வீட்டிற்கு வெளியே வசிக்கிறீர்கள் என்றால், தந்தையிடமிருந்து எந்த முக்கியமான ஆலோசனையும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறுகிய பயணங்கள் இந்த ராசியின் மக்களுக்கு பயனளிக்கும். சொத்து தொடர்பான விஷயங்களிலும் நீங்கள் பயனடைவீர்கள். வேலை வல்லுநர்களுக்கும் வணிகர்களுக்கும் இது ஒரு நல்ல நேரம், ஆனால் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை உங்கள் கையில் எடுத்துக் கொண்டால், பிரச்சினைகள் இருக்கலாம். ஒரு வேலையை நன்றாக முடித்த பின்னரே, அடுத்த பணியை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆன்மீக உள்ளுணர்வுகளும் ஒன்பதாவது வீட்டால் வெளிப்படுத்தப்படுகின்றன, எனவே சிம்ம ராசிக்காரர் இந்த நேரத்தில் ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இதன் மூலம், நீங்கள் யோகாவின் உதவியைப் பெறுவதன் மூலம் உங்கள் ஆளுமையை மேம்படுத்தவும் முடியும். ஆன்மீகம் தொடர்பான புத்தகங்களைப் படிப்பதில் உங்கள் ஆர்வமும் அதிகரிக்கும்.
பரிகாரம்: முருகன் பகவானை வணங்கவும்.
கன்னி
கன்னி ராசி ஜாதகக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி எட்டாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு ஆயுள் வீடாக அழைக்கப்படுகிறது. இது உங்கள் வயது, வாழ்க்கையின் தடைகள், விபத்து, ஆராய்ச்சி போன்றவற்றை குறிக்கிறது. செவ்வாயின் இந்த பெயர்ச்சி ஆராய்ச்சிப் பணிகளைச் செய்கிற அல்லது சில ரகசிய அறிவியலைக் கற்றுக் கொள்ளும் ராசிக்காரர்களுக்கு இது பயனளிக்கும். இந்த ராசியின் மக்கள் அமானுஷ்யத்தைக் கற்றுக்கொள்வதன் மூலம் பணம் சம்பாதிப்பதை நோக்கி நகரலாம். இந்த செவ்வாய் பெயர்ச்சியின் பொது, எனவே நீங்கள் சுயமாகவே இணைக்க முயற்சித்தால் உங்களுக்கு இது நன்றாக இருக்கும். நீங்கள் மன அமைதியைப் பெறலாம் மற்றும் தியானத்தை மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆளுமையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரலாம். கன்னி ராசியின் பலர் தங்கள் முயற்சிகள் சரியான திசையில் செல்லவில்லை என்று உணரலாம். உங்கள் வேலையில் கவனம் செலுத்துவதும், மேலும் சிந்திப்பதை விட இயக்கத்தில் இருப்பதும் நல்லது என்று உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் கடினமாக உழைத்தால், நிச்சயமாக ஒரு நாள் வெற்றி பெறுவீர்கள். செவ்வாய் பெயர்ச்சியின்பொது, உங்கள் சகோதர சகோதரிகள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும், எனவே நீங்கள் அவர்களை ஆதரிக்க முன் வர வேண்டும். இந்த நேரத்தில் இந்த ராசியில் உள்ளவர்களும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவார்கள்.
பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று அனுமன் கோவிலுக்கு சென்று தானம் செய்யவும்.
துலாம்
துலா ராசி ஜாதகக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி ஏழாவது வீட்டில் இருக்கும். இது உங்கள் மனைவி மற்றும் கூட்டாண்மைகளை குறிப்பிடுகிறது. செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சியால், துலா ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் ஒரு சண்டை நடந்தால், அது இந்த நேரத்தில் போய்விடும், அதே சமயம் திருமண வாழ்க்கையிலும் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் மனைவியுடன் ஒரு புதிய வேலையைத் தொடங்க நீங்கள் விரும்பினால், இந்த நேரமும் அவருக்கு நல்லது. உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில், கோபத்தின் அதிகப்படியான இந்த ராசியின் சில ஜாதகக்காரர்களிடம் காணப்படுகிறது. இருப்பினும், கோபம் உங்கள் இயல்பான குணம் அல்ல, எனவே மீண்டும் மீண்டும் கோபப்படுவது உங்களை வருத்தப்படுத்தலாம். சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, நீங்கள் அவற்றுக்கு ஏற்ப இருக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையையும் நீங்கள் வலுக்கட்டாயமாக சமாளிக்க முயற்சித்தால், பிரச்சினைகள் எழக்கூடும். இந்த ராசி மாணவர்கள் இந்த பெயர்ச்சியின் போது கல்வித்துறையில் நல்ல பலன்களைப் பெறலாம். நீங்கள் விளையாட்டில் பங்கேற்றால், இந்த பெயர்ச்சி உங்களுக்கு சில சிறந்த சாதனைகளைத் தரும்.
பரிகாரம்: ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஹனுமான் அஷ்டாக் படிக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி உங்கள் ராசியின் ஆறாவது வீட்டில் இருக்கும். ஆறாவது வீடு ரிப்பு வீடு என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இந்த நோயிலிருந்து கடன், எதிரிகள் போன்றவை கருதப்படுகின்றன. இந்த செவ்வாய் பெயர்ச்சியின் போது, உங்கள் மன மற்றும் உடல் திறன்கள் பலப்படுத்தப்படும். நீங்கள் சாகசத்தை செய்யும் திறனைக் கொண்டுள்ளீர்கள். பணித்துறையில் உங்களுக்கு எந்த திட்டம் வழங்கப்பட்டாலும், அதை நீங்கள் படைப்பாற்றலுடன் முடிப்பீர்கள். வணிகர்கள் ஆபத்துக்களை எடுப்பதில் இருந்து பின்வாங்க மாட்டார்கள், அவர்கள் வியாபாரத்தை பரப்பவும் முயற்சி செய்யலாம். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் எந்தவிதமான விவாதத்திலும் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாத உரையாடல் உங்கள் நேரத்தை வீணடிக்கும், வேறு ஒன்றும் இல்லை. ஒரு வழக்கு நீதிமன்ற நிலுவையில் இருந்தால், இந்த நேரத்தில் அந்த வழக்கில் வெற்றியைப் பெற முடியும். செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சியின் போது உங்கள் போட்டியாளர்களை நீங்கள் எளிதாக வெல்வீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இந்த ராசி மாணவர்களும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. நீங்கள் வாகனம் ஓட்டினால், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி வாகனத்தை கவனமாக ஓட்டுங்கள். ஆரோக்கிய வாழ்க்கை பற்றி பேசும்பொது, இந்த நேரத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும், இதன் காரணமாக நீங்கள் சிறு நோய்களிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள். நீங்கள் ஒரு நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றில் குணமடைவது எதிர்பார்க்கப்படுகிறது.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று செம்பு தானம் செய்யவும்.
தனுசு
தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி ஐந்தாவது வீட்டில் இருக்கும். இதன் மூலம், உங்கள் காதல் உறவுகள், குழந்தைகள் மற்றும் கல்வி ஆகியவை கருதப்படுகின்றன. இந்த உறவின் போது காதல் உறவில் இருக்கும் இந்த ராசி ஜாதகக்காரர் தனது காதலனுடன் நெருங்கி வர முடியும். இந்த நேரத்தில் பிரியமானவருடன் பயணம் செய்வதற்கான பல வாய்ப்புகளையும் நீங்கள் பெறுவீர்கள். மறுபுறம், இதுவரை தனிமையில் இருப்பவர்களும் ஏதாவது சிறப்பு பெறலாம். எவ்வாறாயினும், எந்தவொரு உறவிலும் முன்னேறுவதற்கு முன், உங்கள் சீரமைப்பு கருத்தியல் ரீதியாக சரியானதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியின் காரணமாக, உங்கள் இயற்கையில் அதிகப்படியான கோபம் இருக்கலாம், உங்கள் இயல்பிலும் கடினத்தன்மையைக் காணலாம். இருப்பினும், உங்கள் நடத்தையில் நெகிழ்வுத்தன்மையைப் பேணுவதே எங்கள் ஆலோசனை. நீங்கள் குழந்தையின் பக்கத்தைப் பார்த்தால், உங்கள் பிள்ளைகள் உங்களுடன் ஏதேனும் சிக்கிக் கொள்ளலாம். இந்த நேரத்தில், வேலைத் தொழிலுடன் தொடர்புடைய நபர்கள், குறிப்பாக வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் வெளிநாட்டு தொடர்புகளிலிருந்து இந்த ராசியின் வணிகர்களும் பயனடையலாம்.
பரிகாரம்: ஒரு செப்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கவும்.
மகரம்
மகர ராசி ஜாதகக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி நான்காவது வீட்டில் இருக்கும். இந்த வீடு மகிழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது, இதன் மூலம் உங்கள் தாய், உறவினர், வாகனம், நிலம், உடைகள் போன்றவை கருதப்படுகின்றன. இந்த பெயர்ச்சியின் போது நீங்கள் பூமி-பவனிலிருந்து பயனடையலாம். நீங்கள் ஒரு சொத்தை விற்க விரும்பினால், அதை நல்ல விலையில் விற்கலாம்.அதே நேரத்தில், நீண்ட காலமாக சொத்து வாங்க விரும்புவோரின் கனவையும் நிறைவேற்ற முடியும். தாயின் உடல்நலம் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், அவ்வப்போது அவரது மருத்துவ பரிசோதனையைப் பெறுங்கள். நீங்கள் அமைதியை அனுபவிக்கும் வகையில் குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும். இந்த துறையிலும், இந்த ராசியின் ஜாதகக்காரர் இந்த நேரத்தில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள், சக ஊழியர்களிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கும், மூத்த அதிகாரிகளும் உங்கள் வேலையின் வேகத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள். இந்த நேரத்தில் வணிகர்கள் நிதி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசி ஜாதகக்காரர் வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த ராசியின் சில தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும், சிறிய பிரச்சினைகளைப் பற்றி உங்கள் மனைவியுடன் நீங்கள் சண்டையிடலாம். இருப்பினும், தவறை உணர்ந்தவுடன், நீங்கள் மன்னிப்புக் கேட்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் ஒரு உடற்பயிற்சி கூடம் அல்லது யோகா வகுப்பில் சேரலாம்.
பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று விரதம் இருக்கவும்.
கும்பம்
கும்ப ராசி ஜாதகக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் இருக்கும். இது இளைய உடன்பிறப்புகளுடனான உங்கள் உறவையும் வெளிப்படுத்துகிறது. செவ்வாய் பெயர்ச்சியின் பொது உங்கள் தைரியத்தையும் சக்தியையும் அதிகரிக்கும், மேலும் உங்கள் எதிரிகளை நீங்கள் வெல்ல முடியும். இருப்பினும், நீங்கள் ஆணவத்தையும் பெருமையையும் தவிர்க்க வேண்டும். இந்த இடைக்கால காலத்தில் உங்கள் உடன்பிறப்புகளின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். எனவே நீங்கள் சந்தைப்படுத்தல் அல்லது மேலாண்மைத் துறையில் ஈடுபட்டிருந்தால், இந்த பெயர்ச்சி உங்களுக்கு நன்மை பயக்கும். அரசுத் துறையில் பணியாற்றுவோருக்கும் சலுகைகள் கிடைக்கும். மாணவர்களின் செறிவு ஆச்சரியமாக இருக்கும், மற்றும் அவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். தொடக்கக் கல்வியைப் பெறும் இந்தத் ராசியின் மாணவர்கள் இராணுவம் அல்லது புரட்சியாளர்கள் தொடர்பான சுவாரஸ்யமான புத்தகங்களைப் படிக்கலாம். மறுபுறம், விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய இந்த ராசியின் ஜாதகக்காரர் இந்த பெயர்ச்சியின் போது நல்ல பலன்களைப் பெறுவார்கள். செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கு உங்கள் வழிநடத்தும் திறனையும் அதிகரிக்கும். எனவே நீங்கள் பெயர்ச்சியால் புதிய படைப்பை உருவாக்கலாம்.
பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று சிவப்பு நிறம் பொருட்கள் தேவை படுபவர்களுக்கு தானம் செய்யவும்.
மீனம்
மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி இரெண்டாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு உங்கள் பேச்சு, குடும்பம், வாழ்க்கையின் நோக்கம் போன்றவற்றைப் குறிக்கிறது. இந்த வீட்டில், செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியின் பொது உங்கள் வருமானத்தை அதிகரிக்கும், அதே நேரத்தில் வேறு சில மூலங்களிலிருந்தும் நீங்கள் பணத்தைப் பெறலாம். இந்த நேரத்தில், அதிர்ஷ்டம் உங்களை முழுமையாக ஆதரிக்கும், மேலும் நீங்கள் எந்த வேலையும் செய்தாலும் வெற்றி பெறுவீர்கள். இரண்டாவது வீட்டில் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியால், உங்கள் பேச்சில் கடுமையைக் காணலாம், இது குடும்ப உறுப்பினர்களைத் தொந்தரவு செய்யும். உங்கள் பிடிவாதமான அணுகுமுறை உங்களை மக்களிடமிருந்து தூர விலக்கிவிடும், எனவே எதைப் பற்றியும் பிடிவாதமாக இருக்காதீர்கள். உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், சில காரணங்களால் அவர்களுடன் வேறுபாடுகள் இருக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும், அதிக காரமான மற்றும் வறுத்த உணவை சாப்பிடுவது உங்களுக்கு வயிற்று கோளாறுகளைத் தரும். உங்கள் ஆரோக்கியத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, நீங்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் பொருத்தமாக இருக்கும்போதுதான் வீட்டின் மற்ற உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள முடியும். செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சியின் போது உங்களுக்கு கண் அல்லது பற்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று ஹனுமான் சாலிசா படிக்கவும்.
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems
AstroSage on MobileAll Mobile Apps
- Rashifal 2025
- Horoscope 2025
- Chinese Horoscope 2025
- Saturn Transit 2025
- Jupiter Transit 2025
- Rahu Transit 2025
- Ketu Transit 2025
- Ascendant Horoscope 2025
- Lal Kitab 2025
- Shubh Muhurat 2025
- Hindu Holidays 2025
- Public Holidays 2025
- ராசி பலன் 2025
- రాశిఫలాలు 2025
- ರಾಶಿಭವಿಷ್ಯ 2025
- ਰਾਸ਼ੀਫਲ 2025
- ରାଶିଫଳ 2025
- രാശിഫലം 2025
- રાશિફળ 2025
- రాశిఫలాలు 2025
- রাশিফল 2025 (Rashifol 2025)
- Astrology 2025